Home
News

Aadhaar: ஸ்ட்ரிக்ட்டா வந்த UIDAI உத்தரவு.. ஆதாரில் பெயர் மாற்ற புது விதி.. இனி ஈஸியா நேம் சேஞ் செய்ய முடியாது?

ஆதார் அட்டையில் (Aadhaar Card) உள்ள பெயர் விபரங்களை இனி அவ்வளவு எளிமையாக யாரும் மாற்ற முடியாத நிலை (name change) தற்போது உருவாகியுள்ளது. ஆதார் ஆணையம் இரவோடு இரவாக ஒரு புதிய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளது. இனி ஆதார் பயனர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரை முழுமையாகவோ அல்லது ஒரு பாகத்தையோ அல்லது ஒரு எழுத்தை மாற்ற வேண்டுமென்றால் கூட, இனி கீழ் வரும் வழிமுறைகளை கட்டாயம் கடைப்பித்தாக வேண்டும் (New rules for changing name in Aadhaar) என்று UIDAI ஸ்ட்ரிக்ட்டாக அறிவித்துள்ளது.

ஆதார் அட்டையில் (Aadhaar card details) உள்ள ஒவ்வொரு தகவலும் மிகச்சரியாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. காரணம், பல இடங்களில் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டைகள் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் அட்டையில் ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், அதனால் சில மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதனால், அதில் உள்ள தகவல்களை மக்கள் எப்போது சரியாக வைத்திருக்க வேண்டும் என்று UIDAI கூறுகிறது.

ஸ்ட்ரிக்ட்டா வந்த UIDAI உத்தரவு.. ஆதாரில் பெயர் மாற்ற புது விதி..

ஸ்ட்ரிக்ட்டா வந்த UIDAI உத்தரவு.. ஆதாரில் பெயர் மாற்ற இனி புது விதி:

குறிப்பாக, ஆதார் அட்டையில் உள்ள பெயர் விபரம் (Aadhaar name details) கட்டாயம் துல்லியமாகவும் சரியாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுரைக்கப்படுகிறது. இருப்பினும் சில-பல காரணங்களால் ஆதார் அட்டையில் உள்ள பெயரில் பிழைகளை பயனர்கள் சந்திக்க நேரிடுகிறது. சிலர், திடீரென அவர்களின் பெயரை ஜோதிட முறைப்படி மாற்றிக்கொள்கிறார்கள். மற்றும் சிலருக்கு ஆதார் வழங்கப்பட நேரத்திலேயே பெயரில் எழுத்து பிழை அல்லது ஏதேனும் சிறிய பிழை உடன் ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கும்.

இவர்கள் எல்லாம் இனி ஆதார் அட்டையில் உள்ள பெயரை மாற்றம் செய்ய புதிய வழிமுறையை பின்பற்ற வேண்டுமென்று ஆதார் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது. புதிய வழிமுறை படி, இனி இந்திய குடிமக்கள் (Indian citizens) யாராக இருந்தாலும், என்ன காரணமாக இருந்தாலும், அவர்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயர் விபரத்தில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமென்றால், சில அரசாங்க அதிகாரப்பூர்வமான நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் இனி பெயர் மாற்றம் செய்ய மக்கள் என்ன செய்ய வேண்டும்?

இதன் படி, இப்போது வரை மக்கள் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் சேவையின் (Aadhaar online) மூலம், ஆதார் அட்டையில் உள்ள பெயர் விபரங்களை மாற்றி அமைக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இனி ஆதார் அட்டையில் பெயர் மாற்ற விரும்பும் நபர்கள், சரியாக அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களுடன் இரண்டாம் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டுமென்று UIDAI தெரிவித்துள்ளது. இனி ஆதார் அட்டையில் பெயர் மாற்ற இந்த புதிய விதியை கட்டாயம் பின்பற்றப்படும் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) வெளியிட்டுள்ள தகவலில் பெயர் மாற்றம் செய்ய இனி கெஸட் நோட்டிபிகேஷன் (Gazette Notification) கட்டாயம் என்று கூறியுள்ளது. சமீபத்தில் நடைபெற பெரும்பாலான மோசடியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய விதிமுறையை கட்டாயப்படுத்தியுள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. கூடுதலாக, ஆதார் வைத்திருப்பவரின் முழுப் பெயரையும் உள்ளடக்கிய ஐடியின் இரண்டாவது படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஆதார் பெயர் மாற்றம் செய்ய கூடுதல் ஆவணங்களாக எந்த ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்?

இந்த ஐடியின் ஏற்றுக்கொள்ளக்கூடிய படிவங்களாக பான் கார்டு (PAN card), வாக்காளர் ஐடி (Voters ID), ஓட்டுநர் உரிமம் (Driving license), சேவை அடையாள அட்டை (service ID card) அல்லது பாஸ்போர்ட் (Passport) போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் பெயரை மாற்றுவதற்கான செயல்முறை மிகவும் சிக்கலானதாகிவிட்ட நிலையில், UIDAI உங்கள் முகவரியைப் புதுப்பிப்பதற்கான அல்லது புதிய ஆதார் பதிவு செய்வதற்கான நடைமுறையை எளிதாக்கியுள்ளது.

இந்தப் பணிகளுக்கு நீங்கள் இப்போது எந்த பொதுத்துறை வங்கியிலிருந்தும் பாஸ்புக்கைப் (bank passbook) பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. டிசம்பர் 14, 2024 ஆம் தேதிக்குள் ஆதார் தகவலை அப்டேட் செய்ய விரும்புவோர் இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்பதையும் UIDAI நினைவுபடுத்தியுள்ளது. இதுவே இறுதி வாய்ப்பென்றும் கூறியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Card Holders Attention Strict UIDAI Order On Live New Rule For Changing Name in Aadhaar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X