ஆதார் அட்டை இருக்கா? 2025-ல நீங்க செய்ய வேண்டிய முதல் வேலை இதான்.. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு..
ஆதார் அட்டை (Aadhaar card) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் நாளில் ஆதார் அட்டை வைத்துள்ள அனைவரும் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை குறித்து, யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஒரு நினைவூட்டலை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம். ஆதார் அட்டை வைத்துள்ள அணைத்து பயனர்களும் இதை உடனே செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள கடைசி தேதி என்று இதற்கு முன்பு டிசம்பர் 14, 2024 ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடைசி வாய்ப்பை UIDAI இறுதி நாளின் போது நீட்டித்து, மற்றொரு வாய்ப்பை இந்திய குடிமக்களுக்கு வழங்கியது. ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்யும் புதிய இறுதி நாள் வாய்ப்பாக ஜூன் 14, 2025 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இருக்கா? 2025-ல நீங்க செய்ய வேண்டிய முதல் வேலை இதான்:
ஜூன் 14, 2025 ஆம் தேதிக்கு இன்னும் 4 மாத காலம் மிச்சம் இருக்கிறது என்றாலும், 2025 ஆம் ஆண்டில் சில முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிடும் மக்கள், முதலில் அவர்களுடைய ஆதார் அட்டை விபரங்களை அப்டேட் செய்து, புதுப்பித்துக்கொண்டு புதிய வருடத்திற்குள் அதிக நம்பிக்கையுடன் முன்னேறி செல்லலாம் என்ற நோக்கத்தில் UIDAI ஆதார் அட்டை விபரங்களை அப்டேட் செய்ய நினைவுபடுத்தியுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் இப்போது ஆதார் கார்டு விபரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் எந்தவித சேவையையும் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையே இப்போது உருவாகியுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது, குழந்தையை பள்ளியில் சேர்ப்பது, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் முக்கியமானது.
ரூ. 50 முதல் ரூ. 100 வரை ஆதார் தகவல் அப்டேட் செய்ய கட்டணமா?
தற்போது ஆதார் அட்டை விபரங்களை பொதுமக்கள் எளிமையாக ஆன்லைன் வழியாக அப்டேட் செய்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியாத மக்கள் நேரடியாக அருகில் உள்ள ஆதார் மையத்தை அணுகலாம். ஆன்லைன் சேவைக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. ஆனால், ஜூன் 14, 2024 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 50 முதல் ரூ. 100 வரை ஆதார் தகவல் அப்டேட் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை தகவல்களை இலவசமாக அப்டேட் செய்ய கடந்த ஜூன் 14, 2024 ஆம் தேதி முதல் பல முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 14, 2025 ஆம் தேதியுடன் ஏறக்குறைய 1 வருட கால அவகாசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகு, இந்த இலவச ஆதார் அப்டேட் அவகாசம் நீட்டிக்க பட வாய்ப்பிருக்காது என்று கூறப்படுகிறது.
ஆதார் விபரங்களை எங்கே இலவசமாக அப்டேட் செய்வது?
ஆகையால், இந்த 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஒரு பயனுள்ள காரியத்தை நீங்கள் செய்ய விரும்பினால், உங்கள் வீட்டில் இருந்தபடி, உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வழியாக https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிட்டு, உங்கள் ஆதார் அட்டை விபரங்களை அப்டேட் செய்துகொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications