ஆதார் அப்டேட் இறுதி கெடு.. சரியா இன்னும் 30 நாள் தான் இருக்கு.. எப்படி ஆதார் தகவலை எளிமையாக அப்டேட் செய்வது?
ஆதார் அட்டையை (Aadhaar card) கையில் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது மக்களே. ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அப்டேட் செய்வதற்கான இறுதி காலக்கெடு நெருங்கிவிட்டது. இன்றையில் இருந்து சரியாக அடுத்த 30 நாட்களில், ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளும் வாய்ப்பு நிறைவு பெறுகிறது. இதற்கு முன்பு UIDAI ஆதார் ஆணையம் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்துகொள்ள பல வாய்ப்பை வாங்கிவிட்டது. இதுவே இறுதி முறை என்பதனால், உங்கள் ஆதார் தகவலை இப்போது அப்டேட் செய்துகொள்ள முயலும் முயற்சிகளை துவங்குங்கள்.
கடந்த முறை செப்டம்பர் 14, 2024 ஆம் தேதி தான் இலவச ஆதார் அப்டேட்டிற்கான இறுதி காலக்கெடுவாக இருந்தது. செப்டம்பர் 12, 13, மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் இருந்த ஆதார் மையங்களின் வாசலில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் அப்டேட் செய்ய காத்திருந்தனர் என்பதை நாம் யாரும் மறக்க முடியாது.

ஆதார் மையம் வாசலில் நீண்ட வரிசையில் நின்ற மக்கள் எல்லோரும் கூடுதல் அவகாசம் கிடைத்தால் நன்றாக இருக்குமென்று அவர்களின் கருத்தை சிலர் ஆவேசமாக ஊடகங்களில் பதிவு செய்தனர். இதனால் தானோ என்னவோ, அரசு மற்றொரு வாய்ப்பை வழங்கி. ஆதார் தகவலை இலவசமாக அப்டேட் செய்துகொள்வதற்கான இறுதி காலக்கெடுவை செப்டம்பர் 14 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 14, 2024 ஆம் தேதிக்கு நகர்த்தி வைத்தது.
இப்போது, அந்த இறுதி காலக்கெடுவும் நெருங்கிவிட்டது. UIDAI-ன் தகவல் படி, இன்னும் ஏராளமான ஆதார் அட்டைகள் அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால், UIDAI மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இறுதி காலக்கெடுவை நினைவுபடுத்தியுள்ளது. டிசம்பர் 14, 2024 ஆம் தேதிக்குள் அப்டேட் செய்யப்படாத ஆதார் தகவலை மக்கள் உடனே அப்டேட் செய்யும்படி வலியுறுத்தியுள்ளது. இறுதி காலக்கெடு முடிவடைய இன்னும் 30 நாட்களே உள்ளது என்பதையும் நினைவுபடுத்தியுள்ளது.
ஆதார் மையங்களில் கூட நெரிசலை தவிர்ப்பதற்கு மக்கள் ஆன்லைன் முறையை பயன்படுத்தலாம் என்றும், அதேபோல், இறுதி நேரத்தில் மக்கள் ஒட்டுமொத்தமாக ஆதார் மைய வாசலில் கூட்டம் கூடுவதை தவிர்க்க இப்போதிலிருந்தே கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆதார் ஆணையம் மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளது. இதுவரை உங்கள் ஆதார் தகவலை நீங்கள் அப்டேட் செய்யவில்லை என்றால், இது தா சரியான நேரம் மக்களே.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தகவல் படி, ஆதார் அட்டையில் உள்ள எந்தெந்த தகவல்களை எல்லாம் நீங்கள் இலவசமாக மாற்றி பயன்பெறலாம் என்று இப்போது தெளிவாக கூறியுள்ளது.
1. புகைப்படம்
2. பெயர்
3. முகவரி
4. பிறந்த தேதி / வயது
5. பாலினம்
6. மொபைல் எண்
7. மின்னஞ்சல் முகவரி
8. உறவு நிலை மாற்றம்
9. தகவல் பகிர்வு ஒப்புதல்
10. கண் கருவிழி மற்றும் கைரேகை
பயோமெட்ரிக் தகவல்கள் ஆதார் அட்டையில் உள்ள போட்டோ (Aadhaar photo) மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றம் செய்ய பொதுமக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும் என்பது கட்டாயம். மற்ற தகவல்களை uidai.gov.in இணையதளம் வழியாக ஆன்லைனில் மாற்றம் செய்துகொள்ளலாம். இலவசமாக ஆதார் அப்டேட் செய்துகொள்ள டிசம்பர் 14, 2024 இறுதி நாள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications