பட்டிதொட்டி எல்லாம் பரபரப்பு.. 48 மணி நேர திடீர் கெடு.. ஆதார் அப்டேட் செய்யணும்.. இல்லாட்டி சிக்கல்..
ஆதார் அட்டை (Aadhaar card) வைத்திருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டிதொட்டி எல்லாம் பரந்த இந்த புதிய உத்தரவு மூலம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உங்களிடம் இருக்கும் ஆதார் அட்டையை உடனே அப்டேட் (Aadhaar card update) செய்யும்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதார் அட்டை தகவல்களை இலவசமாக (Free Aadhaar card update last call) புதுப்பித்துக்கொள்ள இன்னும் 48 மணி நேரத்திற்கும் குறைவான அவகாசம் மட்டுமே மிஞ்சியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஆதார் தகவலை அப்டேட் செய்யாதவர்கள் உடனே அப்டேட் செய்துகொள்ளும்படி அறிவுரைக்கப்பட்டுள்ளீர்கள். அப்டேட் செய்ய தவறினால் என்ன சிக்கல்கள் எழும் என்பது இங்கே. இந்தியாவில் உள்ள அனைவரிடமும் ஆதார் அட்டை கட்டாய ஆவணமாக வழங்கப்பட்டுள்ளது. பல் இடங்களில் முக்கிய அடையாள சான்றாக ஆதார் மட்டுமே கேட்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் எந்தவொரு சேவையும் அசையாது என்பது போல ஆதார் ஒரு முக்கிய ஆவணமாக மாறிவிட்டது.

பட்டிதொட்டி எல்லாம் பரபரப்பு.. 48 மணி நேரத்திற்குள் ஆதார் அப்டேட் செய்யணும்:
குறிப்பாக உங்களிடம், 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஆதார் அட்டை (10 years old Aadhaar users) இருக்கிறது என்றால், கட்டாயமாக உங்கள் ஆதார் அட்டை தகவலை நீங்கள் உடனே புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் ஆதார் தகவல்கள் செல்லுபடியாகாது. வங்கி வேலை, அரசு சார்ந்த திட்டங்களின் பலனை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
10 வருடங்கள் பழமையான ஆதார் பயனர்கள், அவர்களின் ஆதார் அட்டை தகவலை அப்டேட் செய்து புதுப்பித்துக்கொள்ளும்படி UIDAI அறிவுறுத்தியுள்ளது. இதற்காக டிசம்பர் 14, 2024 ஆம் தேதி வரை இலவசமாக ஆதார் தகவலை அப்டேட் செய்துகொள்ளும் ஒரு தனி சிறப்பு வாய்ப்பையும் ஆதார் ஆணையம் தற்போது (last date to update Aadhaar details for free) வழங்கியுள்ளது.
ஆதார் அப்டேட் செய்ய இன்னும் 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே மிஞ்சியுள்ளது:
இந்த இறுதி கேடு முடிவதற்கு இன்னும் 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மிஞ்சியுள்ளது என்பதனால், ஆதார் ஆணையம் பட்டிதொட்டியில் உள்ள எல்லா மக்களுக்கும், அவர்களுடைய ஆதார் அட்டை உடனே அப்டேட் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. குறுகிய காலம் மட்டுமே மிஞ்சி இருக்கும் காரணத்தினால், மக்கள் அவர்களின் சொந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தகவலை அப்டேட் (Aadhaar details update) செய்துகொள்ள அறிவுரைக்கப்பட்டுள்ளனர்.
10 வருட பழைய ஆதார் அட்டை வைத்திருக்கும் மக்கள் மட்டுமின்றி, இந்த வாய்ப்பை புதிய ஆதார் அட்டை பயனர்களும் (New Aadhaar card holders) பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. புதிய ஆதார் அட்டையில் இருக்கும் பிழைகளை இலவசமாக திருத்தம் (Aadhaar card mistake corrections) செய்துகொள்ள இந்த வாய்ப்பை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் அப்டேட் செய்ய இனி கட்டணம் எவ்வளவு?
ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிற்கும் பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்ய மக்கள் இனி ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும் என்றும், மக்கள்தொகை தரவுகளுக்கு ரூ. 50 என்ற கட்டணத்தையும், ஆதார் ஆன்லைன் டவுன்லோட் தரவிற்கு ரூ. 30 கட்டணமாகவும், ஆதார் அட்டை முகவரி அப்டேட்டிற்கு ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், டிசம்பர் 14 ஆம் தேதிக்கு முன்பு இலவசமாக தகவலை அப்டேட் செய்துகொண்டால் வீண் செலவை குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்து வரும் காலத்தில் அப்டேட் செய்யப்படாத ஆதார் அட்டை தகவல்கள் செல்லுபடியாகாமல் போனால், மக்கள் சில சேவைகளை உடனுக்குடன் பெறுவதில் சிக்கல் எழக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள தகவல் படி, எந்தெந்த ஆதார் தகவல்களை நாம் இப்பொது இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
- பெயர்
- முகவரி
- பிறந்த தேதி / வயது
- பாலினம்
- மொபைல் எண்
- மின்னஞ்சல் முகவரி
- புகைப்படம்
- உறவு நிலை மாற்றம்
- தகவல் பகிர்வு ஒப்புதல்
- கண் கருவிழி மற்றும் கைரேகை பயோமெட்ரிக் தகவல்கள்


Click it and Unblock the Notifications