Home
News

ஆதார் இருக்கா? மறந்துராதீங்க.. மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.. இனி ரூ.100 வரை கட்டண வசூல்? UIDAI அறிவிப்பு..

ஆதார் அட்டையில் (Aadhaar card) உள்ள தகவல்களை இலவசமாக மாற்ற இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இனி அடுத்தகட்டமாக ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்களை (Aadhaar card update cost) மேற்கொள்ள வேண்டுமென்றால், ஒவ்வொரு மாற்றத்திற்கும் பொதுமக்கள் எவ்வளவு கட்டணம் (charges details for Aadhaar card update) செலுத்த வேண்டியத்திற்கும் என்ற தகவலை இப்போது ஆதார் ஆணையம் மீண்டும் ஒரு முறை வெளியிட்டுள்ளது.

ஆதார் ஆணையத்தின் தகவல் படி, வரும் செப்டம்பர் 14, 2024 ஆம் தேதிக்கு பிறகு, ஆதார் அட்டையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று UIDAI தெரிவித்துள்ளது. எந்த வகையான மாற்றங்களுக்கு எவ்வளவு கட்டணம்? எந்த திருத்தங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்பது போன்ற தகவலை இப்போது பார்க்கலாம்.

ஆதார் இருக்கா? மறந்துராதீங்க.. மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்..

இலவச ஆதார் கார்டு அப்டேட் நிறைவடைகிறது.. எப்போது இறுதி நாள்?

ஆதார் இலவச அப்டேட் சேவை வரும் செப்டம்பர் 14, 2024 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கு பின், ஆதார் அட்டையில் பெயர் (Name), பிறந்த தேதி (DOB), பாலினம், முகவரி (Address), மொபைல் எண் (Mobiile number), புகைப்படம் (Photos) போன்ற எந்தவொரு ஆதார் தகவலை மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும், அதற்கென்று தனித்தனி கட்டணங்களை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என்று UIDAI அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் ஆணையத்தின் தகவல் படி, இனி புதிதாக ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கும் புதிய ஆதார் பயனர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. அதேபோல், குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை விபரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள கட்டணமும் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 5 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் அட்டை அப்டேட்களுக்கு இலவச சேவை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பெயர் விபரம், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்ற ஆதார் விபரங்களை மாற்றம் செய்ய இனிமேல் ரூ. 50 வரை கட்டாய கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சிறிய திருத்தமாக இருந்தாலும் இனி கட்டணம் கட்டாயம். ஆதார் அட்டையில் உள்ள எந்தெந்த தகவலை இனி பொதுமக்கள் அப்டேட் செய்துகொள்ளலாம் என்பது இங்கே..

1. பெயர் (Name)
2. மொபைல் எண் (Mobile Number)
3. பிறந்த தேதி (Date Of Birth)
4. பாலினம் (Gender)
5. முகவரி (Address)
6. புகைப்படம் (Photos)
7. கை ரேகை தகவல் (Biometrics Finger Print)
8. கண் கருவிழி (Eye Iris Scan) தகவல் போன்றவற்றை அப்டேட் செய்யலாம்.

இந்த ஆதார் மாற்றத்திற்கு அல்லது திருத்தத்திற்கு ரூ.100 வரை கட்டணம்:

இனி அடிப்படை ஆதார் திருத்தத்திற்கான குறைந்த விலை கட்டணம் ரூ. 50 என்பதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிற்கும் உங்கள் பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால், இனி ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதாவது, உங்கள் கை ரேகை விபரம் அல்லது உங்கள் கண்ணின் கருவிழி விபரம் போன்ற விபரங்களை இனி நீங்கள் அப்டேட் செய்ய விரும்பினால், இனி நீங்கள் ரூ.100 கட்டாய கட்டணம் செலுத்திட வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Card Free Update End In September 14 2024 New Update Charges Up To Rs 100 For Aadhaar Card Changes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X