Home
News

ரிலாக்ஸ் மக்களே.. ஆதார் அப்டேட் செய்ய இறுதி நாள் கெடு மீண்டும் நீட்டிப்பு.. Aadhaar எடுத்துகிட்டு அலையாதீங்க..

ஆதார் அட்டையை (Aadhaar Card) கையில் எடுத்துக்கொண்டு அலைந்துகொண்டிருக்கும் மக்களே கொஞ்சம் கவனியுங்க. பதட்டம் வேண்டாம். ஆதார் அட்டை தகவல்களை இலவசமாக மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கும் இறுதி காலக்கெடுவான செப்டம்பர் 14, 2024 ஆம் தேதி, இப்போது மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆதார் அட்டையை அப்டேட் செய்ய விரும்பும் மக்களுக்கு கூடுதல் அவகாசத்தை ஆதார் ஆணையம்(UIDAI) தற்போது வழங்கியுள்ளது. புதிய அறிவிப்பின் படி, ஆதார் அட்டையை அப்டேட் செய்ய அனுமதிக்கும் இறுதி காலக்கெடு வாய்ப்பு இன்னும் 3 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் முழுமையான தகவல் இதோ.

முந்தைய அறிவிப்பின் படி, பொதுமக்களின் ஆதார் அட்டை தகவலை புதுப்பிக்க வழங்கப்பட்ட இறுதிக்கட்ட காலக்கெடு முடிவடைய இன்னும் 2 தினங்களே மிஞ்சி இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு முறை இறுதிக்கட்ட காலக்கெடுவை மக்கள் நலன்கருதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை இலவசமாக மாற்றம் செய்ய அனுமதிக்கும் சேவைக்கான (Aadhaar free update) இறுதி காலவரை ஜூன் 14, 2024 ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ரிலாக்ஸ் மக்களே.. ஆதார் அப்டேட் இறுதி நாள் கெடு மீண்டும் நீட்டிப்பு..

ரிலாக்ஸ் மக்களே.. Aadhaar அப்டேட் செய்ய இறுதி நாள் கெடு மீண்டும் ஒருமுறை நீட்டிப்பு:

இந்த இறுதி காலக்கெடு வாய்ப்பு, பின் செப்டம்பர் 14, 2024 ஆம் தேதியாக மாற்றப்பட்டது. செப்டம்பர் 14ம் தேதிக்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே மிஞ்சியுள்ள நிலையில், ஆதார் ஆணையம் மீண்டும் ஒரு முறை இறுதிக்கட்ட காலக்கெடுவை நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி, ஆதார் பயனர்கள் வருகிற டிசம்பர் 14, 2024 ஆம் தேதி வரை கூடுதல் அவகாசத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் கூட்டம் கூட்டமாக ஆதார் அப்டேட் செய்ய அலைமோத வேண்டாம் என்றும், இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறதென்று பதட்டமடைய வேண்டாம் என்றும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான இறுதி வாய்ப்பாக டிசம்பர் 14ம் தேதி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகையால், இதற்கு பிறகும் ஆதார் ஆணையம் இலவச அப்டேட் காலக்கெடுவை உயர்த்த வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே, இன்னும் ஆதார் தகவலை அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14ம் தேதிக்குள் அப்டேட் செய்துகொள்ளும்படி அறிவுரைக்கப்படுகிறார்கள். பொதுமக்களின் ஆதார் அட்டை விபரங்களை இலவசமாக அப்டேட் (Aadhaar card details free update) செய்துகொள்ள டிசம்பர் 14 தேதி இறுதிகட்ட காலக்கெடுவாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையைப் (Aadhaar card) பெற்ற தனிநபர்கள் தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI அறிவுறுத்துகிறது.

Aadhaar கார்டை கையில் எடுத்துகிட்டு அலையாதீங்க.. டிசம்பர் 14, 2024 வரை அவகாசம் இருக்கு:

அதேபோல், 5 மற்றும் 15 வயதிற்குள் குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்களை அவர்களின் ஆதார் அட்டையில் புதுப்பிப்பதும் மிக முக்கியமானது என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, 15 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளின் பால் ஆதார் அட்டை (Baal Aadhaar card), சாதாரண ஆதார் அட்டைக்கு மாற்றப்பட வேண்டும் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 14ம் தேதி வரை ஆதார் அட்டையில் உள்ள மாற்றங்களை புதுப்பிக்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள தகவல் படி, எந்தெந்த தகவல்களை எல்லாம் நாம் இலவசமாக மாற்றி பயன்பெறலாம் என்பதை பற்றி இப்போது தெளிவாக பார்க்கலாம். ஆதார் அட்டை தகவல்களில் எதை எல்லாம் இலவசமாக மாற்றாலம்?
1. புகைப்படம்
2. பெயர்
3. முகவரி
4. பிறந்த தேதி / வயது
5. பாலினம்
6. மொபைல் எண்
7. மின்னஞ்சல் முகவரி
8. உறவு நிலை மாற்றம்
9. தகவல் பகிர்வு ஒப்புதல்
10. கண் கருவிழி மற்றும் கைரேகை

பயோமெட்ரிக் தகவல்கள் ஆதார் அட்டையில் உள்ள போட்டோ (Aadhaar photo) மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றம் செய்ய பொதுமக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும் என்பது கட்டாயம். மற்ற ஆதார் விபரங்களை பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும், அருகில் உள்ள ஆதார் மையம் வழியாக டிசம்பர் 14, 2024 ஆம் தேதிக்கு முன்பாக இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்று UIDAI கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Aadhaar Card Free Update Deadline For September 14th Got Extended Timeline To December 14 2024 In India UIDAI Announcement
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X