ஆதார் கார்டு பயனர்களுக்கு இந்த சேவை இலவசமா? மீண்டும் நீட்டிக்கப்படும் காலக்கெடு.. எதற்காக?
ஆதார் அட்டை (Aadhaar Card) பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. ஆதார்-அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் புதிய தகவல் ஒன்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆதார் பயனர்களுக்கு இலவச அப்டேட் சேவை கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் (Aadhaar) என்பது இந்தியாவில் மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. பல இடங்களில் இந்த ஆதார் அட்டையை தான் நாம் அடையாள ஆவணமாக பயன்படுத்துகிறோம். புதிய சிம் கார்டு வாங்குவது, வங்கியில் புதிய கணக்கு திறப்பது, பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது போன்ற காரியங்களுக்கு ஆதார் கார்டு மிகவும் முக்கியமானது.

இத்தகைய முக்கியமான ஆதார் ஆவணத்தை எப்போதும் சரியான நிலையில் அப்டேட் செய்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவரும், அவர்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை சரியான தகவலுடன் அப்டேட் செய்ய (Aadhaar card update) வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது.
ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் ஆவணங்களை பொதுமக்கள் சரியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இந்த நோக்கத்திற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இப்போது ஆதார் விபரங்களை அப்டேட் செய்ய கட்டணமில்லா சேவையை குறுகிய காலத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆதார் அட்டைகளை இலவசமாக அப்டேட் (Aadhaar card free update) செய்யும் புது ஆன்லைன் வசதியை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்த சேவையை இலவசமாக அணுக மக்களுக்கு ஜூன் 14 ஆம் தேதி வரை முன்பு காலக்கெடு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளும் காலம் நிறைவடைந்துவிட்டதாக கவலைப்பட்ட பொதுமக்களுக்கு UIDAI மீண்டும் ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. முன்பு விதிக்கப்பட்ட காலக்கெடுவான ஜூன் 14 ஆம் தேதியை UIDAI மீண்டும் நீட்டித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, மக்கள் இனி அவர்களின் ஆதார் கார்டு அப்டேட் முறையை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவசமாக செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதார் அப்டேட் இலவச சேவையை மக்கள் myAadhaar போர்ட்டல் வழியாக மட்டுமே அணுகினால் சேவை இலவசமாக கிடைக்குமென்றும் கூறப்பட்டுள்ளது. உங்கள் ஏரியாவில் உள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் அட்டையை அப்டேட் (aadhaar card update free date extented) செய்ய நினைத்தால் ரூ.50 அப்டேட் செய்யும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சரி, உங்கள் ஆதார் அட்டையை எப்படி இலவசமாக அப்டேட் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/ போர்ட்டலுக்கு செல்லவும்.
உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்ட OTP மற்றும் கேப்ட்சா விபரங்களை உள்ளிட்டு லாகின் செய்யவும்.
ஆதார் அப்டேட் பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.
இங்கு, ஏற்கனவே உள்ள உங்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்கவும்.
சரியான ஆவண வகையைத் தேர்வு செய்து, அசல் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் அப்லோட் செய்யவும்.
அவ்வளவு தான் உங்களுக்கான சேவைக் கோரிக்கை எண் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
அதை சேவ் செய்து கொள்ளுங்கள்.
இது உங்கள் ஆதார் அப்டேட் கோரிக்கையின் செயல்முறையை கண்காணிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் ஆதார் அட்டை விவரங்களைப் புதுப்பிப்பது ஏன் அவசியம்?
உங்கள் ஆதார் தரவுத்தளத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால், பின்னர் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அதை அப்டேட் செய்ய வேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை, உங்கள் குழந்தை ஐந்து வயதிற்குள் இருக்கும் போது ஆதார் பதிவு செய்திருந்தால், பயோமெட்ரிக் பதிவை குறைந்தது இரண்டு முறையாவது 5 வயதைத் தாண்டிய பிறகு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 15 வருடங்கள் முடிந்த பிறகு ஒருமுறை செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








