Home
News

UIDAI-ன் லாஸ்ட் சான்ஸ்.. ஆதார் தகவலை உடனே மாற்றிவிடுங்கள்.. இனி Aadhaar அப்டேட் செய்ய கட்டணம் எவ்வளவு?

இன்றைய உலகில், ஆதார் அட்டை (Aadhaar Card) மிகவும் அவசியமானது. பள்ளி சேர்க்கை, வேலை, வங்கி கணக்கு திறப்பு மற்றும் அரசுத் திட்டங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு இது தேவைப்படுகிறது. உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பெரிய பிரச்சினைகள் ஏற்படலாம். நீங்கள் ஏதேனும் பிழைகளை சரிசெய்ய வேண்டும் என்றால், இலவசமாக அதைச் செய்ய இன்னும் குறுகிய கால வாய்ப்பு மிச்சமுள்ளது. இந்த இறுதி வாய்ப்பு இனியும் நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே மிஞ்சியுள்ளதால் கவனம் தேவை.

உங்கள் ஆதார் அட்டை 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருந்தால், அதை விரைவில் அப்டேட் செய்வது நல்லது. அரசு தொடர்ந்து மக்களை இதைச் செய்ய ஊக்குவித்து வருகிறது. இலவச அப்டேட் காலக்கெடு ஆன்லைன் புதுப்பிப்புகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆதார் மையத்திற்குச் (Aadhaar center) சென்றால், ரூ. 50 செலவாகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆதார் அட்டை விபரங்களை எப்படி ஆன்லைனில் அப்டேட் செய்வது என்பது இங்கே.

UIDAI-ன் லாஸ்ட் சான்ஸ்.. ஆதார் தகவலை உடனே மாற்றிவிடுங்கள்..

UIDAI-ன் லாஸ்ட் சான்ஸ்.. ஆதார் தகவலை உடனே மாற்றிவிடுங்கள்.. இதன் பிறகு கட்டணம் தான்.. எவ்வளவு தெரியுமா?

இறுதி இலவச ஆதார் அப்டேட்களுக்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. UIDAI அறிவிப்பின்படி, இலவச அப்டேட்களுக்கான கடைசி தேதி செப்டம்பர் 14, 2024 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியைத் தொடர்ந்து செய்யப்படும் எந்தவொரு சிறிய திருத்தமாக இருந்தாலும் ரூ.50 முதல் ரூ.100 வரை செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என்பதற்கான விதிமுறைகள் இதோ.

- uidai.gov.in என்ற UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
- 'My Aadhaar' பிரிவுக்குச் செல்லவும்.
- டிராப்-டவுன் மெனுவில் இருந்து 'Update Your Aadhaar' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- பின்னர் 'Update Demographics Data and Check Status' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

- பின்னர் 'Send OTP' என்பதைக் கிளிக் செய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP-ஐ உள்ளிடவும்.
- OTP ஐப் பயன்படுத்தி உள்நுழைந்து, தேவையான மாற்றங்களைச் மேற்கொள்ளவும்.
- மாற்றங்களை சமர்ப்பிப்பதற்கு முன், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு அப்டேட் கோரிக்கை ID கிடைக்கும்.
- இதை வைத்து உங்கள் அப்டேட் ஸ்டேட்டஸ் விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

இதுவரை இன்னும் எத்தனை கோடி பேர் ஆதார் தகவலை அப்டேட் செய்யவில்லை தெரியுமா?

உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிப்பது எளிமையானது மற்றும் வசதியானது. விவரிக்கப்பட்ட படிகளைப் பின்பற்றுவதன் மூலம், செப்டம்பர் 14, 2024 வரை எந்த கட்டணமும் இல்லாமல், உங்கள் வீட்டில் இருந்தபடி அல்லது உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் ஆதார் தகவல் திருத்தங்களை மேற்கொள்ளலாம். உங்கள் ஆதார் தகவல்கள் சரியாக இருப்பது மிகவும் அவசியமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

UIDAI வெளியிட்டுள்ள தகவலின் படி, இதுவரை இந்தியா முழுவதிலும் சுமார் 100 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரத்து 413 ஆதார் பயனர்கள் மட்டுமே மட்டுமே ஆதார் அட்டை திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், 40 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரத்து 436 ஆதார் பயனர்கள் இன்னும் அவர்களின் ஆதார் தகவல்களை புதுப்பிக்கவில்லை என்று கூறியுள்ளது. உங்கள் ஆதார் அட்டையில் திருத்தங்கள் இருந்தால் உடனே அவற்றை மாற்றம் செய்துகொள்ளவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Card Free Online Update Deadline Approaching Soon In India Aadhaar Update Charges Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X