ஆதார் அப்டேட்டில் லிமிட்.. இனி 'இதை' அடிக்கடி மாற்றம் செய்ய முடியாது.. UIDAI அதிரடி உத்தரவு.. என்னது அது?
ஆதார் அட்டை (Aadhaar card) வைத்திருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் யுஐடிஏஐ (UIDAI) என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆதார் தகவல்களில் உள்ள சில விபரங்களை மக்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என்ற விதியை UIDAI பின்பற்றி வருகிறது. அதேபோல், சில தகவல்களை ஒரே ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய Aadhaar பயனர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்கள் இதோ.
Aadhaar அட்டைக்கான இலவச ஆன்லைன் அப்டேட் (Aadhaar free update) செய்யும் காலக்கெடுவை மீண்டும் ஒரு முறை UIDAI அதிகரித்துள்ளது. இதன் படி, வரும் ஜூன் 14, 2025 ஆம் தேதி வரை இறுதி காலக்கெடு நீட்டி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் ஆதார் பயனர்கள் அவர்களுடைய ஆதார் விபரங்களை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அப்டேட்டில் லிமிட்.. 'இதை' அடிக்கடி மாற்றம் செய்ய முடியாது:
இருப்பினும், ஆதார் ஆடையில் உள்ள சில ஆதார் தகவல்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறை மட்டுமே மக்கள் மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் (Aadhaar details update limit) என்று ஆதார் விதிமுறை தெரிவிக்கிறது. எந்தெந்த தகவலை எத்தனை முறை மாற்றம் செய்யலாம்? எந்த தகவலை ஒரே ஒரு முறை மட்டும் மாற்றம் செய்யலாம் என்ற ஆதார் விதிகளை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.
1. ஆதார் அட்டையில் உள்ள பெயர் விபரம்:
ஆதார் அட்டையில் உள்ள பெயர் விபரங்களை (Aadhaar name details change) UIDAI இன் தகவல் படி, நீங்கள் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். அதாவது இரண்டு முறை மட்டுமே உங்கள் பெயர் விபரங்களை உங்களால் அப்டேட் செய்ய முடியும்.
2. ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதி விபரம்:
ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதி விபரங்களை (Aadhaar DOB details change) நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே மாற்றி அமைக்க அனுமதிக்கப்படுவீர்கள். அதிலும் குறிப்பாக, உங்கள் ஆதார் அட்டை வழங்கிய பொழுது குறிப்பிடப்பட்ட பிறந்த தேதி மாதத்தில் இருந்து +3 மாதங்கள் அல்லது -3 மாதங்களுக்குள் மட்டுமே மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
3. ஆதார் அட்டையில் உள்ள பாலினம் விபரம்:
ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பாலின விபரங்களை (Aadhaar Gender details change) நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் பயனரின் பாலினத்தை அடிக்கடி மாற்றம் செய்ய முடியாது.
4. ஆதார் அட்டையில் உள்ள முகவரி விபரம்:
ஆதார் அட்டையில் உள்ள முகவரி விபரங்களை (Aadhaar address details change) மாற்றம் செய்ய எந்தவித குறிப்பிடத்தக்க எண்ணிக்கையும் தற்போது வரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜூன் 14, 2025 வரை ஆதார் அட்டை அட்ரஸ் விபரங்களை இலவசமாக மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறீர்கள். அதற்கு பின், ரூ. 50 முதல் ரூ. 100 வரை கூடுதல் செலவாகலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
5. ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் விபரம்:
ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றம் (Aadhaar photo change) செய்யவும் எந்தவித கட்டுப்படும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியான புகைப்படத்தை ஆதார் ஆட்டையில் கடைபிடிப்பது கட்டாயமானது. அதேபோல், ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு முறை உங்கள் புகைப்படத்தை அப்டேட் செய்வது சிறப்பானது என்று UIDAI அறிவுரைக்கிறது.
ஒருவேளை வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல் நீங்கள் மாற்றங்களை மேற்கொள்ள விரும்பினால், விதிவிலக்கு கையாளுதல் செயல்முறை எனப்படும் சிறப்பு செயல்முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








