பிறப்பு முதல் இறப்பு வரை - எதெற்கெல்லாம் ஆதார் அட்டை கட்டாயம் தேவை.?

முகம் காட்டும் சிட்டிசன்கள் தொடங்கி அறியப்படாத நெட்டிசன்கள் வரை விமர்சனம் செய்வது நியாம்தானோ.?

|

மத்திய அரசால் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க ஐக்கிய தனியுரிமை அடையாள எண் தான் ஆதார். இதனை இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் - யுஐடிஏஐ ( Unique Identification Authority of India) வழங்கியுள்ளது மற்றும் நிர்வகிக்கிறது. இந்திய நாட்டின் ஒரு மாபெரும் அடையாள ஆவணமாக மாறிக்கொண்டே வரும் இந்த ஆதார் அட்டையானது, ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் பயோமெட்ரிக் மற்றும் டீமோகிராபிக் தரவுகளை சேகரித்து தன்னுள் கொண்டுள்ளது.

பிறப்பு முதல் இறப்பு வரை - எதெற்கெல்லாம் ஆதார் அட்டை கட்டாயம் தேவை.?

ஒருபக்கம் ஆதார் மிகவும் பாதுகாப்பற்ற ஒரு நிலைப்பாட்டில் உள்ளதென்பதற்கு பல ஆதார் டேட்டா ஹேக்கிங் மற்றும் ஆதார் லீக்ஸ் சம்பவங்கள் சாட்சி. மறுபக்கம் மத்திய அரசு, இந்திய மக்கள் மீதான ஆதார் அட்டை திணிப்பை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அப்படியாக, ஆதார் அடையாளம் எதெற்கெல்லாம் கட்டாயம் தேவை என்பது சார்ந்த பொதுவான விவரங்களை - எடுத்துக்காட்டுக்கு, சமீபத்திய இறப்பு சான்றிதளுக்கு ஆதார் அடையாளம் கட்டாயம், பான் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் போன்றவைகளை - நாம் பெரும்பாலும் அறிவோம். அது தவிர்த்து எதெற்கெல்லாம் ஆதார் அடையாளம் காட்டாயம் தேவையென்று உங்களுக்கு தெரியுமா.?

விவசாயி

விவசாயி

விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு நலன்கள் மற்றும் மானிய உணவு தானியங்கள் / பண மானியம் ஆகியவற்றிற்கு தகுதியுள்ள நபர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்.

தோட்டக்கலை

தோட்டக்கலை

தோட்டக்கலை ஒருங்கிணைந்த துறை, தேசிய பயிற்றுவிப்பு ஊக்குவிப்பு திட்டம் மற்றும் ஜனனி சுரக்ஷா யோஜனா ஆகியவற்றின் கீழ் நலன்புரி திட்டங்களின் நன்மைகளைப் பெற விரும்பும் மக்கள் கட்டாயம் ஆதார் அடையாளம் வைத்திருக்க வேண்டும்.

மகளிர் மற்றும் குழந்தைகள்

மகளிர் மற்றும் குழந்தைகள்

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளின் கீழ் பயிற்சி பெற ஆதார் அட்டை கட்டாயம்.

வருமான வரி

வருமான வரி

வருமான வரி செலுத்துதலுக்காக தங்களது ஆதார் எண்ணை தனிநபர்கள் வழங்க வேண்டும் மற்றும் ஆதார் அட்டை இல்லாத நபர்கள் ஆதார் பதிவு எண் மூலம் தங்கள் ஐ.டி.ஆரை பதிவு செய்யலாம். இதை நிகழ்த்த நீங்கள் உங்கள் ஆதர் எண்ணை உங்களின் பான் அட்டையுடன் இணைத்திருக்க வேண்டும்.

பான் அட்டை விண்ணப்பம்

பான் அட்டை விண்ணப்பம்

நீங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN) விண்ணப்பிக்க விரும்பினால், உங்கள் ஆதார் அட்டையை ஒரு அடையாள அட்டையாக அல்லது முகவரி ஆதாரமாக சமர்ப்பிக்கலாம்.

நேஷனல் மிஷன் பார் வூமன் என்பவர்மெண்ட்

நேஷனல் மிஷன் பார் வூமன் என்பவர்மெண்ட்

நேஷனல் மிஷன் பார் வூமன் என்பவர்மெண்ட் தேசிய இயக்கத்தின் கீழ் நிதியுதவி பெற ஆதார் கட்டாயம். இளம் பருவ மகளிர் திட்டத்தின் கீழ் (Scheme for Adolescent Women) மத்திய உதவித்தொகை மற்றும் தேசிய உதவித் தொகையை ஆகியவற்றைப் பெறவும் ஆதார் அடையாளம் கட்டாயம் தேவை.

இ-பஞ்சாயத்து

இ-பஞ்சாயத்து

இ-பஞ்சாயத்து பயிற்சி நலன்கள் மற்றும் கல்லூரி அளவிலான மத்திய புலமைப்பரிசில்களைப் பெற விரும்பும் மாணவர்களுக்கான ஆதார் அடையாள கட்டாயமாகும்.

மண் சுகாதார அட்டை

மண் சுகாதார அட்டை

மண் சுகாதார முகாமைத்துவ திட்டம் மற்றும் மண் சுகாதார அட்டை திட்டம் ஆகியவைகளுக்கு ஆதார் அடையாளம் கட்டாயம் தேவைப்படுகிறது.

ஊழியர் சேமலாப நிதிய அமைப்பு

ஊழியர் சேமலாப நிதிய அமைப்பு

ஊழியர் சேமலாப நிதிய அமைப்பு (ஈ.பி.ஓ.எஃப்.ஓ) அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் அவர்களது ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தியுள்ளது. ஓய்வூதியம் பெறும் நேரத்தில் எந்த விதமான குழப்பமும் இல்லாமல் ஓய்வூதியம் பெறுவதற்கு இது வழிவகை செய்யுமென்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறுப் பயன் திட்டம்

மகப்பேறுப் பயன் திட்டம்

மகப்பேறுப் பயன் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டம், தொழில் பயிற்சி, கடன்கள் மற்றும் பிற திட்டங்களைப் பெற பெண்களுக்கு ஆதார் அடையாளம் கட்டாயம் தேவை.

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட் வழங்குவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகம், பாஸ்போர்ட் சேவைகளைப் பெற ஆதார் அட்டையை அவசியமாகியுள்ளது. வழிகாட்டு நெறிமுறைப்படி, பாஸ்போர்ட் சேவா கேந்திராவிலிருந்து வேகமாக பாஸ்போர்ட் சேவைகளைப் பெற பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், தங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி அட்டை, பான் அட்டை மற்றும் பரிந்துரைக்கப்படாத இதர ஆவணங்களை பரிந்துரைக்கிறது.

நீர் துறை மற்றும் தேசிய சமூக உதவி திட்டம்

நீர் துறை மற்றும் தேசிய சமூக உதவி திட்டம்

தண்ணீர் மற்றும் சமூக சேவைகளுக்கான நன்மைகள் ஆதார் அட்டை பரப்பின் கீழ் வந்துள்ளன. நீர் துறை மற்றும் தேசிய சமூக உதவி திட்டம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நன்மைகளை பிற ஆதார் அடையாளம் ஒரு கட்டாய ஆவணமாகும்.

மதிய உணவு

மதிய உணவு

மதிய உணவு நன்மைகளுக்கும் ஆதார் தேவைப்படுகிறது. திட்டத்தின் கீழ் இயங்கும் சமையல்காரர்-துணை-உதவியாளர்ககளும் கூட ஆதாருடன் பதிவு செய்ய வேண்டும் தீன்தயால் அன்யோதயா யோஜனா மற்றும் தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் ஆகியவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி

சர்வா சிக்ஷா அபியான் நலன்களை பெற 6-14 வயதிற்ககுள்ளான மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் கூடஆதார் அட்டை கட்டாயப்படுத்தப்படுவதுடன், ஆதார் அடையாளம் கொண்டிருப்பவர்கள் தான் தகுதியுடையவர்கள் என்கிறது

ஐ.ஆர்.சி.டி.சி

ஐ.ஆர்.சி.டி.சி

ஐ.ஆர்.சி.டி.சி.யில் இந்திய இரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மேடையில் டிக்கெட் புக் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிட்டிசன்கள் தொடங்கி அறியப்படாத நெட்டிசன்கள் வரை

சிட்டிசன்கள் தொடங்கி அறியப்படாத நெட்டிசன்கள் வரை

ஒருபக்கம் ஆதார் அட்டையானது நன்மை பயக்கும் விடயமென்று கூறப்பட்டாலும், மறுபக்கம் விவசாய நலன்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கும் கூட அடையாள அட்டை அவசியமாகும் இந்த நிலைப்பாட்டை மனதிற்கொண்டு ஆதார் அடையாளத்தையும், மத்திய அரசாங்கத்தையும் - முகம் காட்டும் சிட்டிசன்கள் தொடங்கி அறியப்படாத நெட்டிசன்கள் வரை விமர்சனம் செய்வது நியாம்தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

Best Mobiles in India

English summary
Aadhaar card becoming a must for all your needs: Here are 10 things you need to know. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X