ஆதார் அட்டை இருந்தால் உடனடி பான்கார்டு: வருமான வரித்துறை புதிய வசதி.!

ஆதார் எண்ணில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்புவதன் மூலம் மிக எளிமையாக பான்கார்டை பெற முடியும்.

|

வருமான வரித்துறையினர் முதல் முறையாக தனிப்பட்ட அடையாளத்தை பெற விரும்பும் தனிநபர்களுக்கான 'உடனடி' பான்கார்டை ஒதுக்கீட்டு செய்யும் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்

ஆதார் அட்டை இருந்தால் உடனடி பான்கார்டு: வருமான வரித்துறை புதிய வசதி.!

"இந்த வசதி இலவசமாகவும், ஆன்லைனில் உடனடி ஒதுக்கீடாகவும், சரியான ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முதன்முதலாக வரும் முதல் சேவையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். இந்த வசதி மூலம் பான்கார்டு பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைப்பதே தங்களது நோக்கம் என்று மூத்த வருமான வரித்துறை ஆதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் தங்கள் பொருளாதார மற்றும் வரிவிதிப்புகளை எளிதில் தீர்க்க முடியும்

ஆதார்

ஆதார்

எண்ணில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்புவதன் மூலம் மிக எளிமையாக பான்கார்டை பெற முடியும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் முகவரி ஆகிய விபரங்களுடன் புதிய பான்கார்டு வழங்கப்படும்

இ-பான்கார்டு

இ-பான்கார்டு

இந்த இ-பான்கார்டு வசதி தனியாக வாழ்பவர்களுக்கு மட்டும் என்பதும் கூட்டு குடும்பமாகவோ, நிறுவனம், டிரஸ்ட் ஆகியவற்றில் இருப்பவர்களுக்கோ கிடையாது

பான்கார்டு

பான்கார்டு

ஆதார் கார்டின் அடிப்படையில் ஒருவருக்கு பான்கார்டு பெற வெரிபிகேஷன் பணிகள் ஒருசில நொடிகளில் முடிந்துவிடும். அதன் பின்னர் பான்கார்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். . "இது அரசாங்கத்தின் சேவையை விரைவாகவோ அல்லது ஒதுக்குவதற்கோ ஆதார் தரவுத்தளத்தை விட அதிகமான ஒரு முயற்சியாகும்" என்று இதுகுறித்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

மத்திய அரசின் வருமான வரித்துறை நேற்று அறிவித்த அறிவிப்பின்படி பான்கார்டையும் ஆதார் அட்டையையும் அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் இணைக்க வேண்டும் என்று காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இவ்வாறு காலக்கெடுவை நீட்டிப்பது இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139 ஏஏ (2) படி, ஜூலை 1, 2017 அன்று பான் கார்டு கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரும், ஆதார் அட்டையை பெற தகுதியுடையவர், அவருடைய ஆதார் எண்ணை வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் ஆணையம் மூலம் (யுஐடிஏஐ) ஆதார் அட்டை வழங்கப்பட்டாலும், இந்த ஆதாருடன் அவர்களுடைய பத்து இலக்க பான் எண்ணையும் இணைக்க வேண்டும் என்பது வருமான வரித்துறையின் நோக்கம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Aadhaar Based Instant PAN Allotment System Launched by Income Tax Department : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X