Home
News

இனி அதிக பணம் அனுப்ப ‘FACE’ பாஸ்வேர்ட்.. டிஜிட்டல் பரிவர்த்தனைகள்.. புது UIDAI திட்டம்.. ஆதார் கார்டு இருக்கா?

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் அதிகளவிலான பணத்தை அனுப்ப வேண்டுமானால், ஆதார் அடிப்படையிலான பேஸ் ஆதன்டிகேஷன் (Aadhaar Based Face Authentication) இருக்குமென்று யுஐடிஏஐ (UIDAI) எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது உறுதி செய்திருக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டன. இப்போது, பெட்டி கடைக்களுக்கு சென்றாலும் சரி, சூப்பர் மார்கெட் சென்றாலும் சரி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் டிஜிட்டலாக பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதனால், அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புகள் அமல் செய்யப்படுகின்றன.

இனி அதிக பணம் அனுப்ப ‘FACE’ பாஸ்வேர்ட்.. டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!

அந்த வகையில், என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது இதுவரையில் பயன்படுத்தப்பட்டு வந்த ஓடிபி ஆதன்டிகேஷனுடன் ஃபிங்கர்பிரிண்ட் ஆதன்டிகேஷன் (Fingerprint Authentication) மற்றும் பேசியல் ஆதன்டிகேஷன் (Facial Authentication) ஆகிவற்றை சேர்த்தது.

இந்த புதிய ஆதன்டிகேஷன்கள் பயோமெட்ரிக் அடிப்படையில் செய்யப்படுவதால், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆதார் கார்டு விவரங்களை பயன்படுத்தி கொள்ளவும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதி அளித்துள்ளது. இது கூடுதல் ஆதன்டிகேஷனாக இருக்கிறது. ஆகவே, ஓடிபி ஆதன்டிகேஷன் தொடர்ந்து இருக்கும்.

இது ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். ஆனால், அதிகளவிலான பணத்தை டிஜிட்டலாக பரிவர்த்தனை செய்யும்போது மட்டும், ஆதார் அடிப்படையிலான பேஸ் ஆதன்டிகேஷன் கொண்டுவரப்பட இருப்பது இப்போது உறுதியாகி இருக்கிறது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் துணை இயக்குநர் ஜெனரல் அபிஷேக் குமார் சிங் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஃபிங்கர்பிரிண்ட் ஆதன்டிகேஷன் மற்றும் பேசியல் ஆதன்டிகேஷன் ஆகியவை குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025 (Global Fintech Fest 2025) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின்போது, அதிக அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு விரைவில் பேஸ் ஆதன்டிகேஷன் செய்யப்பட இருப்பதாக அபிஷேக் குமார் சிங் தெரிவித்தார்.

இதற்காக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இணைந்துள்ளதாகவும், விரைவில் அந்த பரிவர்த்தனை முறைகள் அமல் செய்யப்பட இருப்பதாகவும் அபிஷேக் குமார் சிங் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆதார் அடிப்படையிலான பேஸ் ஆதன்டிகேஷன் செயல்படுத்தப்பட்டால், ஆதார் ஐடியை பயன்படுத்தலாம்.

இதில் இணைக்கப்பட்டிருக்கும் பயோமெட்ரிக் விவரங்கள் அங்கீகாரம் செய்யப்பட்ட பிறகு அதிக அளவிலான பணத்தை டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இது கிட்டத்தட்ட மல்டி-பேக்டர் வெரிபிகேஷன் போல செயல்பட இருப்பதால், பணப்பரிமாற்றம் அதிக பாதுகாப்பாக மாற இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதையே அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, யுபிஐ ஆப்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஃபிங்கர்பிரிண்ட் ஆதன்டிகேஷன் மற்றும் பேசியல் ஆதன்டிகேஷன் ஆகியவை ஆப்ஷனாக மட்டுமே இருக்கும். அதேபோல அதிகளவிலான பணத்தை பரிமாற்றம் செய்யப்படும்போது மட்டுமே ஆதார் அடிப்படையிலான பேஸ் ஆதன்டிகேஷன் இருக்கும். இதனால் பெரிய சிக்கல் இருக்காது.

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் பேங்க் கஸ்டமர்கள் இதனால் குழப்பம் அடைய வேண்டியதும் கிடையாது. இது முற்றிலும் பாதுகாப்பு மற்றும் விரைவான பரிமாற்றம் ஆகிவற்றுக்காக மட்டுமே அமல் செய்யப்பட இருக்கிறது. இதில் அதிகளவிலான பணப்பரிமாற்றத்துக்கு வரும் பேஸ் ஆதன்டிகேஷன் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஓரிரு வாரங்களில் வெளியிட வாய்ப்புகள் உள்ளன. இது யுபிஐ மட்டுமல்லாமல், மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என்பது முக்கியமானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Based Face Authentication For High Value Transactions NPCI To Be Implemented Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X