ஆதார் தகவல்களை பயன்படுத்த இ-வாலெட்களுக்கு கட்டுப்பாடு.!

இந்தியாவின் தனித்தன்மையுள்ள அடையாள ஆணையம், தனது ஆதார் தகவல்களைப் பயன்படுத்த மொபைல் வாலெட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

|

இப்போது பயனர்களின் உண்மையான ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, மொபைல் வாலெட்கள் கேவைசி அங்கீகாரத்தைப் பெற வேண்டியுள்ளது.

ஆதார் தகவல்களை பயன்படுத்த இ-வாலெட்களுக்கு கட்டுப்பாடு.!

இந்தியாவின் தனித்தன்மையுள்ள அடையாள ஆணையம், தனது ஆதார் தகவல்களைப் பயன்படுத்த மொபைல் வாலெட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 1 ஆம் தேதி முதல் இந்தச் செயலுக்கு வர உள்ளது என்று த எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 16 ஆம் தேதி அங்கீகார ஏஜென்ஸிகளுக்கு ஆதார் ஆணையம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறுகையில், பணம் செலுத்தும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு பயனர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்ற உள்கட்டமைப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஆதார் தகவல்களை பயன்படுத்த இ-வாலெட்களுக்கு கட்டுப்பாடு.!

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த வரிசையில் அமைந்த நிறுவனங்களை, யூஐடிஏஐ மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை கொண்ட பயனர் ஏஜென்ஸிகளாகப் பட்டியலிடப்பட்டு உள்ளது. உள்ளூர் நிறுவனம் என்று பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு ஆதார் தகவலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே அணுக முடியும். அதே நேரத்தில், சர்வதேச அளவிலான அங்கீகாரத்தை கொண்ட நிறுவனங்களாக இருக்கும் வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் வங்கிகள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடு இல்லாத அணுகல் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை வைத்து சில நிறுவனங்கள் சரிபார்க்கின்றன என்றாலும், அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்தவோ அல்லது இந்த எண்களைச் சேமித்து வைக்கவோ தகுந்த பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதில்லை. இதனால் சர்வதேச ஏயூஏ-களில் (பயனர் அங்கீகார ஏஜென்ஸிகள்) பட்டியலில் இருந்து அவை நீக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் தகவல்களை பயன்படுத்த இ-வாலெட்களுக்கு கட்டுப்பாடு.!

இதனால் இ-வாலெட்கள் மூலம் எலக்ட்ரானிக் முறையில் அமைந்த உங்கள் வாடிக்கையாளரின் செயல்பாட்டை தெரிந்து கொள்ளுங்கள் என்ற அம்சத்தை பயன்படுத்த முடியாது என்பதோடு, அங்கீகாரத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் விரிச்சுவல் ஆதார் எண்கள் நம்பி இருக்க வேண்டியுள்ளது.
Best Mobiles in India

English summary
Aadhaar authority restricts e-wallets’ access to its database : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X