Aadhaar அப்டேட் செய்ய இனி சிரமம் இருக்காது.. இந்த ஒரு ஆப் போதும்.. எல்லாமே ஈஸி தான்.. இதோ முழு விவரம்..
ஆதார் அட்டை (Aadhaar card) இந்திய மக்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற இந்த ஆதார் தேவைப்படுகிறது. குறிப்பாக அனைத்து நலத்திட்டங்களைப் பெற பயன்படும் இந்த ஆதார் அட்டையை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் நாம் ஆதார் அப்டேட் செய்யவேண்டும் என்றால் ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் இனி ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் செயலியை (Aadhaar app) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இனி ஆதார் மொபைல் நம்பர், முகவரி போன்றவற்றை மாற்றம் செய்து கொள்ளலாம்.

குறிப்பாக இந்த ஆதார் செயலியை பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும் இந்த இந்த ஆதார் செயலியின் முக்கியமான ஐந்து அம்சங்களை வெளியிட்டுள்ளது இந்திய தனித்துவ அடையாள ஆணையம். இப்போது இந்த ஐந்து அம்சங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஆதார் செயலியில் உங்கள் ஆதார் தகவல்களை யாரெல்லாம் அணுகலாம் மற்றும் ஆதார் அட்டையில் இருக்கும் எந்தெந்த தகவல்களை மட்டும் நீங்கள் பகிர விரும்புகிறீர்கள் என்பதை இனி நீங்களே முடிவு செய்யலாம். மேலும் இதில் உள்ள பிரைவசி கண்ட்ரோல் என்ற சேவையை பயன்படுத்தி என்னென்ன தகவல்களை யாரிடம் பகிரலாம் என்பதை நீங்கள் லாக் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து இந்த ஆதார் செயலி ஆனது உங்கள் கண் கருவிழி, கைவிரல் ரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களை எந்தெந்த சேவைகளுக்கு வழங்கலாம் எதற்கெல்லாம் வழங்கக் கூடாது என்பதையும் லாக் செய்யக்கூடிய வசதியை வழங்குகிறது. குறிப்பாக இந்த செயலியில் பயோமெட்ரிக் லாக் என்ற வசதி உள்ளது. இதை எப்போது வேண்டும் என்றாலும் லாக் மற்றும் அன்லாக் செய்ய முடியும்.
அதேபோல் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையையும் இந்த ஆதார் செயலி வாயிலாக நீங்கள் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக ஒரே ஆதார் செயலிக்குள் பல புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
உங்கள் போனில் இன்டர்நெட் இல்லை என்றாலும் கூட இந்த ஆதார் செயலியில் இருந்து உங்கள் ஆதார் தகவல்களை வெரிஃபிகேஷனுக்காக உங்களால் பகிர முடியும். ஆகவே அனைத்து இடங்களுக்கும் ஆதார் அட்டை நகலை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது. குறிப்பாக ஆதார் நகல்களை கொண்டு நடக்கும் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இனிமேல் ஆதார் அட்டையில் முகவரி, போன் நம்பர் அப்டேட் செய்ய ஆதார் மையம் செல்ல தேவை இருக்காது. அதாவது இந்த புதிய ஆதார் செயலி மூலம் முகவரி மற்றும் மொபைல் எண் அப்டேட் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இனி ஆதார் மையம் செல்லாமல் வீட்டில் இருந்தே ஆதாரில் முகவரி, மொபைல் எண் அப்டேட் செய்ய முடியும்.
குறிப்பாக இந்த ஆதார் செயலி ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் என இரண்டிலும் கிடைக்கும். மேலும் அனைத்து மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இதை வடிவமைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முயற்சி எடுத்துள்ளது. அதுவும் இதன் மூலம் ஆதார் மையங்களில் கூட்ட நெரிசல் குறையும், மக்களின் நேரமும் சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








