ஆதார் ஆப்-ஐ உடனே டெலீட் செய்துவிட்டு புதிய செயலியை டவுன்லோட் செய்யுங்கள்! காரணம் என்ன தெரியுமா?

|

இந்தியாவில் உள்ள அனைத்து ஆதார் பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, உங்கள் ஸ்மார்ட்போனில் ஆதார் சேவைக்கான ஆதார் மொபைல் ஆப் வெர்ஷன் எதுவாக இருந்தாலும் அதை உடனே டெலீட் செய்துவிடுங்கள் என்று இந்திய அரசாங்கம் தற்பொழுது ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது.

புதிய mAadhaar பயன்பாடு செயலி

புதிய mAadhaar பயன்பாடு செயலி

யுஐடிஏஐ ஆதார், தற்பொழுது அதன் அனைத்து பயனர்களுக்கும் எம்ஆதார் ஆப் (mAadhaar app) என்ற பெயரில் புதிய பயன்பாடு செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறது. இந்த புதிய செயலிகள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.

13 வெவ்வேறு மொழிகள் புதிய பயன்பாடு செயலி

13 வெவ்வேறு மொழிகள் புதிய பயன்பாடு செயலி

இந்த புதிய பயன்பாடு செயலி இப்போது ஆங்கிலம், இந்தி, பெங்காலி, ஒடியா, உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் அசாமி உள்ளிட்ட 13 வெவ்வேறு மொழிகள் ஆதரிக்கும் படி வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வானிலை மாற்றம்!பேராபத்தை விளைவிக்கும் எல்நினோ.!வானிலை மாற்றம்!பேராபத்தை விளைவிக்கும் எல்நினோ.!

கூடுதல் பாதுகாப்பு கூடுதல் சேவை

கூடுதல் பாதுகாப்பு கூடுதல் சேவை

புதிய எம்ஆதார் ஆப் செயலி, முன்பைவிட அதிக பாதுகாப்புடையது என்றும் பயனர்களுக்கான கூடுதல் அம்சங்கள் தற்பொழுது இதில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் தங்களின் ஆதார் விபரங்களை நேரடியாக தங்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

4-டிஜிட் பாஸ்வோர்ட் சேவை

4-டிஜிட் பாஸ்வோர்ட் சேவை

உங்களுக்குத் தேவையான ஆதார் சேவைகளுக்கான பிரிவுகள் மற்றும் உங்கள் ஆதார் ஆன்லைன் விபரங்கள் அனைத்தும் ஒரே செயலியில் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் தகவல்களை மொபைல் போனில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள 4-டிஜிட் பாஸ்வோர்ட் சேவையும் வழங்கப்பட்டுள்ளது.

பல பாதுகாப்பு அம்சங்கள்

பல பாதுகாப்பு அம்சங்கள்

இது தவிர, பயன்பாட்டிற்குள் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை தற்காலிகமாக பூட்டி திறப்பதற்கான விருப்பத்தையும் இந்த புதிய செயலி வழங்குகிறது. அதேபோல் eKYC விபரங்களை மெசேஜ் அல்லது மெயில் மூலம் ஷேர் செய்யும் சேவை, QR ஸ்கேன் சேவை மற்றும் OTP சேவை எனப் பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சேவைகள் இதில் வழங்கப்படுகிறது.

டிசம்பர் 1 கட்டணம் உயர்வுக்கு கெடு விதித்த தேதி: தப்பிக்க ஒரே வழி- என்ன தெரியுமா?டிசம்பர் 1 கட்டணம் உயர்வுக்கு கெடு விதித்த தேதி: தப்பிக்க ஒரே வழி- என்ன தெரியுமா?

உடனே புதிய mAadhaar ஆப் டவுன்லோட் செய்யுங்கள்

உடனே புதிய mAadhaar ஆப் டவுன்லோட் செய்யுங்கள்

கூடுதலாக, பயனர்கள் அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்தையும் கண்டறிய ஒரு விருப்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பது காரணங்களை கருத்தில் கொண்டு இந்த புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் பயனர்கள் முந்தைய வெர்ஷன்கள் டெலீட் செய்துவிட்டு புதிய ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Aadhaar App: Delete the Old Version right away and download the new mAadhar app now For Android and iOS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X