Home
News

ஆதார் அட்டையில் முகவரி மாற்ற வேண்டுமா? இனி இந்த ஆவணம் இருந்தால் போதும்.. இதோ முழு விவரம்..

நாட்டில் அனைத்து முக்கிய சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் கார்டு (Aadhaar Card) தேவைப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் என அனைத்திற்கும் ஆதார் கார்டு தான் தேவைப்படுகிறது.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு போல ஆதார் அட்டையும் (Aadhaar Card) மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் ஆதார் அட்டையை, உங்களுடைய விவரங்களை (Aadhaar Card Details) எல்லா நேரங்களிலும் புதுப்பித்த (அப்டேட் செய்யப்பட்ட) நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

ஆதார் அட்டையில் முகவரி மாற்ற வேண்டுமா? இனி இந்த ஆவணம் இருந்தால் போதும்

அதேபோல் உங்கள் ஆதார் அட்டையில் முகவரியை (address) மாற்றுவதற்கு, UIDAI குறிப்பிடும் முகவரிச் சான்று ஆவணங்கள் கையில் இல்லாத நிலையிலும் சில வழிகளில் முகவரியைப் புதுப்பிக்க முடியும். அதாவது ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்கு முகவரிச் சான்றாக பல்வேறு வகையான ஆவணங்களை UIDAI ஏற்றுக்கொள்கிறது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஆதார் முகவரியை மாற்ற தேவையான ஆவணங்கள்
அதாவது ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கு, முகவரியைக் கொண்ட சான்றிதழ் அவசியம். இவற்றில் ஒன்றை ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

1.பாஸ்போர்ட்

2.பான் கார்டு

3.வங்கி கணக்கு புத்தகம் (பாஸ்புக், தபால் அலுவலக கணக்கு அறிக்கை)

4.குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)

5.வாக்காளர் அடையாள அட்டை

6. மாற்றுத்திறனாளி அட்டை

7.ஊரக வேலை அட்டை

8. மின்சாரக் கட்டண ரசீதுகள் ( மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)

9.தொலைபேசி லேண்ட்லைன் கட்டண ரசீது/ தொலைபேசி (போஸ்ட்பெயட் மொபைல்)
கட்டண ரசீது/ பிராட்பேண்ட் கட்டண ரசீது ( மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)

10.தண்ணீர் கட்டண ரசீது ( மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)

11. எரிவாயு இணைப்பு (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)

1.2. காப்பீட்டு ஆவணம் (ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு மட்டும்)

13.சொத்து வரி ரசீது (ஓராண்டுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)

14.குடியிருக்கும் வீட்டின் பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம்/தானப் பத்திரம்

15. வாடகை/ குத்தகைப் பத்திரம்

இதுபோன்ற சான்றிதழ் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து ஆதார் அட்டையில் முகவரி மாற்றிக் கொள்ளலாம். இருப்பினும் பட்டியலிடப்பட்டுள்ள வழக்கமான ஆவணங்கள் ஒரு சிலரிடம் இருக்காது. அவர்களுக்கு விதிவிலக்குகளுக்கான சில மாற்று வழிகள் ஆதார் முகமையால் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆதார் அட்டையில் முகவரி மாற்ற வேண்டுமா? இனி இந்த ஆவணம் இருந்தால் போதும்

ஆதார் முகவரியைப் புதுப்பிக்க, அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழையும் பயன்படுத்தலாம். வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும் முகவரி ஆவணங்கள், மின்சாரக் கட்டண ரசீது அல்லது வங்கி கணக்குப் புத்தகம் போன்ற சான்றுகள் இல்லாதவர்கள், அரசு அதிகாரியின் கையொப்பத்துடன் கூடிய புகைப்பட முகவரிச் சான்றிதழை சமர்ப்பித்து ஆதார் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

  • நாடாளுமன்ற உறுப்பினர் (MP)
  • சட்டப்பேரவை உறுப்பினர் (MLA)
  • அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி (Gazetted Officer)
  • வட்டாட்சியர் (Tehsildar) உள்ளிட்டோரிடம் இந்த சான்றிதழைப் பெறலாம்.

குறிப்பாக இந்த ஆவணம், அதனை வழங்கும் அதிகாரியின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்பில் (letter head) வழங்கப்படுவது அவசியம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Aadhaar Address Change: Alternative Proof You Can Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X