Home
News

ரெடியா இருங்க.. ஆதார் 2.0 கொண்டு வரப்போகும் 2 முக்கிய மாற்றங்கள்!

இந்தியாவின் மிக முக்கியமான டிஜிட்டல் அடையாள அமைப்பான ஆதார் (Aadhaar) ஆனது "எதிர்காலம்" தொடர்பான சில முக்கிய மாற்றத்தை பெற உள்ளது. யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவமான அடையாள ஆணையமானது ஆதார் விஷன் 2032 (Aadhaar Vision 2032) குறித்த விவரங்களை வெளியிட்டு உள்ளது.

ஆதார் 2.0-வின் (Aadhaar 2.0) கீழ் 2 முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. யுஐடிஏஐ-வின் கூற்றுப்படி, இந்த மாற்றமானது உலகின் மிகப்பெரிய அடையாள தளமான ஆதாரை ஃபியூச்சர்-ப்ரூஃப் (Future-proof) ஆக மாற்ற வேண்டும் மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தின் முன்னணியில் இந்தியாவை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.

ரெடியா இருங்க.. ஆதார் 2.0 கொண்டு வரப்போகும் 2 முக்கிய மாற்றங்கள்!

முதலாவதாக - ஆதார் 2.0 ஆனது செயற்கை நுண்ணறிவின் (Artificial intelligence) துல்லியம் மற்றும் மீள்தன்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். நிகழ்நேர மோசடி கண்டறிதல் (Real-time fraud detection) முதல் தகவமைப்பு சரிபார்ப்பு (Adaptive verification) வரை, ஏஐ ஆனது ஆதார் அட்டையை ஸ்மார்ட் ஆனதாக மாற்றும்.

இதோடு பிளாக்செயின் தொழில்நுட்பம் (Blockchain technology) ஆனது ஸ்டோரேஜ் மற்றும் சரிபார்ப்பு அடுக்குகளை ஆதரிக்கும். இது அடையாள பதிவுகளை கிட்டத்தட்ட சேதப்படுத்த முடியாததாக மாற்றும். கடைசியாக குவாண்டம்-ரெசிஸ்டென்ட் என்க்ரிப்ஷன் (Quantum-resistant encryption) ஆனது ஆதார் அட்டைக்கான பாதுகாப்பின் இறுதி அடுக்கை சேர்க்கும். இது சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அடுத்த சகாப்தத்திற்கான அமைப்பை தயார்படுத்தும்.

இரண்டாவதாக - ஆதார் 2.0 என்கிற தொலைநோக்கு பார்வையை உயிர்ப்பிக்க, யுஐடிஏஐ ஆனது தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இவர்களின் நோக்கம்: அடுத்த தசாப்தத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் அடையாளம் மற்றும் அங்கீகார கோரிக்கைகளை கையாளக்கூடிய நீண்டகால டிஜிட்டல் வரைபடத்தை வடிவமைப்பதே ஆகும்

எல்லாவற்றை விட முக்கியமாக இந்த திட்டம் ஆதாரை டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்துடன் (Digital Personal Data Protection Act) இணைக்கிறது. இதன் கீழ் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை என்பது வெறும் ஆட்-ஆன்களாக இல்லாமல் - அடிப்படை கொள்கைகளாக இருப்பதை உறுதி செய்யப்படும்.

ஆதார் 2.0 வழியாக இந்திய குடிமக்களுக்கு என்னென்ன நன்மைகள் விளையும்? தினசரி பயனர்களுக்கு, இந்த மாற்றம் விரைவான சேவைகள், வலுவான தரவு பாதுகாப்பு மற்றும் குறைவான அங்கீகார பிழைகளை உறுதி செய்யும். டிஜிட்டல் பரிவர்த்தனைகள், மின்-ஆளுமை மற்றும் நிதி உள்ளடக்கத்தின் முதுகெலும்பாக ஆதாரின் பங்கு இன்னும் முக்கியமானதாக மாறும். ஒவ்வொரு ஸ்கேன், கையொப்பம் மற்றும் சரிபார்ப்பு மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் குறைக்கப்பட்ட ஆபத்தின் உத்தரவாதத்தை கொண்டிருக்கும்.

உண்மையில் ஆதார் விஷன் 2032 என்பது தொழில்நுட்ப மேம்படுத்தலை விட சற்றே அதிகமாகும். இது டிஜிட்டல் அடையாளத்தை அறிவார்ந்த, பரவலாக்கப்பட்ட மற்றும் குவாண்டம்-பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு உதவும். இது வெற்றி பெற்றால், அது தேசிய டிஜிட்டல் ஐடி அமைப்புகளுக்கு ஒரு உலகளாவிய அளவுகோலை அமைக்கும்.

ஆதார் தொடர்பான சமீபத்திய செய்தியை பொறுத்தவரை, பான் (PAN) நம்பரை ஆதார் (Aadhaar) அட்டை உடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதாக, நிதி அமைச்சகத்தின் (Ministry of Finance) கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) அறிவித்து உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள வரி செலுத்துவோருக்கு, பான்-ஆதார் இணைப்பு என்கிற கட்டாய செயல்முறையை இன்னும் செய்து முடிக்கத்தோர்களுக்கு அதை செய்து முடிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான புதிய காலக்கெடு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2025 டிசம்பர் 31 என்கிற நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுடன், குடிமக்கள் இப்போது எந்தவொரு பிஸிக்கல் சென்டருக்கும் செல்லாமல் வருமான வரி மின்-தாக்கல் போர்டல் (Income Tax e-filing portal) அல்லது பிற ஆன்லைன் முறைகள் மூலம் பான்-ஆதார் இணைப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar 2.0 UIDAI to Use AI AI Quantum Blockchain Technology Rebuild Entire Aadhaar infrastructure
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X