பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட காதல் மன்னன்: டிக்டாக்கில் அநாகரீக செயல்!

|

நம்பமுடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்த டிக்டாக் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஹூட்ஸூயிட்டின் டிஜிட்டல் 2020 அறிக்கையின்படி, டிக்டாக்கின் நம்பமுடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான டெய்லி யூசேஜ் பயனர்களைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2019 ஜனவரியில் 300 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்டாக்கில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்

டிக்டாக்கில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்

பலரும் டிக்டாக்கிற்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க புதிய அம்சம் டிக்டாக் அறிமுகம் செய்துள்ள புதிய ஃபேமிலி மோடு உருவாக்கியது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க அனுமதிக்கும். அதேபோல், பெற்றோர்கள் இப்போது தங்கள் குழந்தை தினசரி எதன் அடிப்படையில், எவ்வளவு நேரம் டிக்டாக்-ல் செலவிட வேண்டும் என்பதற்கான வரம்புகளையும் நிர்ணயிக்க அனுமதிக்கிறது.

புதிதாக களமிறங்கிய ஃபேமிலி மோடு

புதிதாக களமிறங்கிய ஃபேமிலி மோடு

இதை பல இளைஞர்களும் தவறாக பயன்படுத்துவதும்., டிக்டாக் தொடர்பான வழக்குகளும் கைதுகளும் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது. இதையடுத்து புதிதாக களமிறங்கிய ஃபேமிலி மோடு டிக்டாக்கிற்கு அடிமையாக இருக்கும் பயனர்களுக்கு மோசமான செய்தி என்னவென்றால், டிக்டாக் நிறுவனம் புதிதாக ஃபேமிலி மோடு (Family Mode) என்ற புதிய குடும்ப பயன்முறை அம்சத்தை அறிமுகம் செய்தது.

பெற்றோர்கள் நிர்ணயிக்கலாம்

பெற்றோர்கள் நிர்ணயிக்கலாம்

இதன்மூலம் தங்கள் டிக்டாக் பயன்பாட்டை எவ்வளவு நேரம் உபயோகிக்க வேண்டும் என பெற்றோர்கள் நிர்ணயிக்க முடியும். இதன்மூலம் தொடர்ச்சியாக டிக்டாக் பயன்படுத்தாமல் தடுக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

அதீத ஈடுபாட்டில் இருந்த காதல் மன்னன் கண்ணன்

அதீத ஈடுபாட்டில் இருந்த காதல் மன்னன் கண்ணன்

தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். 19 வயதான இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். டிக்டாக் செயலியின் மீது அவருக்கு அதீத ஈடுபாடு இருந்துள்ளது. இதையடுத்து இவர் காதல் மன்னன் கண்ணன் என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

மாணவிகளுடன் வீடியோ 4 லட்சம் ஃபாலோவர்கள்

மாணவிகளுடன் வீடியோ 4 லட்சம் ஃபாலோவர்கள்

டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வந்த கண்ணன், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளையும் சில வீடியோக்களில் நடிக்க வைத்து அவற்றை பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து கண்ணனுக்கு டிக்டாக் செயலியில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்கள் கிடைக்கப்பட்டுள்ளது.

மாணவிகளை மிரட்டிய காதல் மன்னன் கண்ணன்

மாணவிகளை மிரட்டிய காதல் மன்னன் கண்ணன்

ஆனால் கண்ணன் மாணவ, மாணவிகள் சிலரை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோவாக பதிவு செய்து தனது மொபைலில் வைத்துள்ளார். அதேபோல் இந்த வீடியோக்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடுக்கும்படி கண்ணன் மிரட்டல் விடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

போலீஸில் கண்ணன் மீது புகார்

போலீஸில் கண்ணன் மீது புகார்

இதன்காரணமாக கண்ணன் ஒரு மாணவியிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். கொடுக்கவில்லை என்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட காதல் மன்னன்

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட காதல் மன்னன்

இந்த புகாரின் பேரில் கண்ணனை போலீஸார் கைது செய்தனர். அந்த விசாரணையில் ஒரு மாணவியிடம் 4 லட்சம் ரூபாய் மிரட்டிப் பறித்தது தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Best Mobiles in India

English summary
A young arrested for blackmailing college girls with tiktok video

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X