ஆபீஸ் மெயிலில் 'XX' லெட்டர்! பாலியல் புகார் கொடுத்த பெண் ஊழியர்! அந்த வார்தைக்கு அர்த்தம் தெரியுமா?
பெண் ஐடி ஊழியர் ஒருவருக்கு வந்த ஆபீஸ் மெயிலில் "XX" என்ற லெட்டர் இடம்பெற்றிருந்ததால், அந்த பெண் அவரது பாஸ் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த லெட்டருக்கு, இதுதான் அர்த்தம் என்று பக்கம் பக்கமாக விளக்கமும் அளித்துள்ளார். அப்படி "XX" என்னும் லெட்டருக்கு என்னதான் அர்த்தம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
லண்டனில் செயல்பட்டுவரும் essDOCS என்னும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கரினா காஸ்பரோவா (Karina Gasparova) என்னும் பெண் பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அலெக்சாண்டர் கவுலண்ட்ரிஸ் (Aleksander Goulandris) சில மாதங்களுக்கு முன்பு, கரினாவுக்கு ஆபிஸ் மெயில் ஐடியில் இருந்து ஒரு இமெயிலை அனுப்பி இருக்கிறார்.

இந்த மெயில் பார்ப்பதற்கு ஆபிஸ் தொடர்பான விவரங்களை கேட்டு அனுப்பியதுபோல் இருக்கிறது. இருப்பினும், அதில் வார்த்தைகளுக்கு இடையிடையே XX, YY மற்றும் ???? என்னும் லெட்டர்ஸ் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகளுக்கு, கரினா காஸ்பரோவா சில அர்த்தங்களை உருவாக்கி, அலெக்சாண்டர் கவுலண்ட்ரிஸ் மீது உள்ளூர் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதாவது, அந்த மெயிலில் "Can you please complete the following: The solution us currently used by XX Agris companies and YY Barge lines in corn cargoes in south-north flows in the ???? waterways. Also, can you remind me of what the balance of the rollout will be and the approx. timing. Thanks" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த கரினா காஸ்பரோவா, "நான் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் கவுலண்ட்ரிஸ், என்னிடம் வேலை வாங்கிய விதம், அவருக்கு என் மீது பாலியல் ஆசை இருப்பதை காட்டுகிறது.
எந்த காரணங்களும் இல்லாமல், எனக்கு வீடியோ கால் செய்வது, அடிக்கடி அவரது கேபினுக்கு வரவழைத்து பேசுவது ஆகியவற்றை தொடர்ந்து செய்து வந்தார். சில முறை என்னை பாலியல் ரீதியாக தீண்டியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலிலேயே, இமெயில் மூலம் நூதனமாக எனக்கு அவருடன் பாலியல் உறவில் ஈடுபட விருப்பமா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.
அவர் அனுப்பிய மெயிலில் XX என்பது முத்தங்களை குறிக்கிறது, YY என்பது பாலியல் தொடர்பை குறிக்கிறது, ???? என்பது அவரது இச்சைக்கு எனக்கு விருப்பம் இருக்கிறதா? என்பதை குறிக்கிறது. இதற்கு நான் பதிலளிக்காமல், அவரிடம் இருந்து விலகியிருந்தேன். அதன்பின் என்னை பணீநீக்கம் செய்துவிட்டார். ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு அலெக்சாண்டர் கவுலண்ட்ரிஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில் "கரினா, தான் செய்யும் பணியில் ஈடுபாடில்லாமல் இருந்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுத்துவந்தது. இதன் காரணமாகவே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், அந்த மெயிலில், பாலியல் தொடர்பாக ஏதும் குறிப்பிட்டதுபோல் தெரியவில்லை. முறையான ஆதாரம் இல்லாமல், பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்குடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துவிட்டனர். அதோடு அந்த பெண்ணுக்கு, ரூ.4.5 லட்சம் அபராதம் விதித்து வழக்கை முடித்தனர். பொதுவாக XX என்பது முத்தங்களை குறிக்க சிலர் பயன்படுத்துவது உண்மையே. ஆனால், அதற்கு ஆதாரங்கள் கிடையாது.


Click it and Unblock the Notifications








