Home
News

ஐபோனால் இயக்கும் வசதியுடன் ரோபோ வாக்கம் க்ளீனர்!

By Karthikeyan
ஐபோனால் இயக்கும் வசதியுடன் ரோபோ வாக்கம் க்ளீனர்!

ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு புதிய ரோபோ வாக்கும் க்ளீனரைத் தயாரித்து இருக்கிறது. இந்த வாக்கும் க்ளீனரின் சிறப்பு என்னவென்றால் இது வேலை செய்து கொண்டிருக்கும் போது பேசும் திறன் கொண்டிருக்கிறது. அதோடு இது தனது வேலையைச் செய்து கொண்டிருக்கும் போதே இந்த இடத்தை போட்டோ எடுத்து அனுப்பும் சக்தியும் கொண்டிருக்கிறது.

இந்த வாக்கும் க்ளீனர் ஐபோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த புதுமையான வாக்கும் க்ளீனருக்கு கோகோரோபோ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தை ஷார்ப் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த சாதனம் ஆங்கிலம், ஜப்பான் மற்றும் சீன மொழிகளை பேசுக்கூடிய அளவிற்கு ஷார்ப் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.

இந்த ரோபோ வாக்கும் க்ளீனர் ஒரு ஐபோன் அப்ளிகேசனோடு வந்திருக்கிறது. எனவே யார் வேண்டுமாலும் மேற்சொன்ன 3 மொழிகளில் இந்த வாக்கும் க்ளீனரோடு நேரடியாக உரையாடலாம்.

இந்த வாக்கும் க்ளீனரை இயக்குபவர்கள் இதன் அசைவுகளை கட்டுப்படுத்த முடியும். அதோடு இதில் வீடியோவையும் பார்க்கலாம். மேலும் இந்த க்ளீனர் வீட்டைச் சுத்தப்படுத்தும் போது அந்த வீட்டை மிக அழகாக படம் பிடித்து அனுப்பும்.

இந்த ரோபோ தென்மேற்கு ஜப்பான் மொழியான கனசாயயும் பேசும் சக்தி கொண்டது. இந்த ரோபோவுடன் "எவ்வாறு இருக்கிறாய்?" என்று கேள்வி கேட்டால் "நான் நன்றாக இருக்கிறேன்" என்று பதில் வரும்.

இந்த க்ளீனர் இன்ப்ரா ரெட் சென்சார்களுடன் வருவதால் வீட்டில் எந்த ஒரு தூசியும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும். மேலும் இந்த ரோபோ களைப்படைந்துவிட்டால் அது தானகவே நடந்து சென்று அதன் டோக்கிங் ஸ்டேசனுக்குள் சென்று படுத்துக் கொள்ளும். பின் அதன் உரிமையாளர் வந்து எழுப்பும் போது மகிழ்ச்சியுடன் எழுந்து வேலை செய்யும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X