10 ஜிபி டேட்டா வழங்கி ஜியோவிற்கு மிரட்டலடி கொடுக்கும் ஐடியா..!
நாட்டில் உள்ள ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனமும் ரிலையன்ஸ் ஜியோவிற்குஎதிரான மற்றும் போட்டிபோடும் ஒரு கடுமையான கட்டண போரை திறந்து விட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.
சமீபத்தில், வோடபோன் தனது பயனர்களுக்கு 28 நாட்கள் நீடிக்கும் 10 ஜிபி வரையிலான தரவை 1 ஜிபி விலையில் அனுபவிக்கும் சலுகையை கொண்டு வந்தது (அந்த சலுகை தொடர்புடைய சில முக்கிய விதிகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது) இப்போது, ஐடியா செல்லுலார் அதை போலவே ஒரு வாய்ப்பை கொண்டு வர உள்ளது.
அதாவது பேக் 255 என்ற திட்டத்தின் கீழ் 4ஜி பயனர்கள் திட்ட நன்மைகளுடன் சேர்த்து இலவசமாக 9 ஜிபி அளவிலான 4ஜி தரவை பெற முடியும். இந்த விளம்பர தரவு வாய்ப்பானதுடிசம்பர் 31, 2016 வரையிலாக மட்டுமே பெற முடியும்.
மேலும் ஐடியா வழங்கும் இந்த 255 பேக் திட்டத்தின் மேலும் பல விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன..!

புதிய ஸ்மார்ட்போன்களில் மட்டுமே.!
இந்த விளம்பர திட்டத்தின் முக்கிய தகுதி அளவுகோலாக புதிய 4ஜி ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது.1 ஜிபி செலவில் இலவசமாக 9 ஜிபி டேட்டாவை பெற முடியும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

1 ஜிபி டேட்டாவிற்கு விலை :
உங்கள் ஐடியா வட்டார அடிப்படையில் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவிற்கான விலையை அதாவது ரூ.255 கொடுக்க வேண்டும்

28 நாட்கள் :
அவ்வாறு செய்வதின் மூலம் நீங்கள் இலவசமாக 9 ஜிபி அளவிலான கூடுதல் 4ஜி தரவை பெறுவீர்கள். அது 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் :
நீங்கள் ஒரு 3 ஜி வட்டத்தில் இருப்பின், கூடுதலாட்க கிடைக்கும் 9 ஜிபி அளவிலான தரவானது உங்கள் எண்ணில் 3 ஜி நெட்வொர்க் முறையில் இரவு தரவு ((இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை)) பயன்பாடாக இணையும்.

4ஜி நெட்வொர்க் மட்டுமே :
ஒருவேளை நீங்கள் ஒரு 4ஜி வட்டத்தில் இருப்பின் கூடுதலாக பெறும் 9ஜிபி அளவிலான தரவை நீங்கள் ஐடியா 4ஜி நெட்வொர்க் கொண்டு பயனப்டுத்தலாம் நீங்கள் 3ஜி அல்லது 2ஜி நெட்வொர்க்கில் அதை பயன்படுத்த வேண்டும் என்றால், அது உங்கள் பேலன்ஸ்-ல் இருந்து கழிக்கப்படும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எளிமை :
ஐடியா செல்லுலார் வழங்கும் இலவச 9 ஜிபி அளவிலான 4ஜி தரவை பெறுவது மிகவும் எளிமையான ஒன்றாகும் உங்கள் ஐடியா எண் ஓடிபி மூலம் சரிபார்க்கப்படும் பின்னர் உங்களுக்கு சேவை வழங்கப்படும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :
ஜியோ பற்றிய வதந்தி, முன்கூட்டியே உஷாராகி பிஎஸ்என்எல் வழங்கும் சலுகைகள்..!


Click it and Unblock the Notifications