Home
News

சுந்தர் பிச்சையை விட அதிக சம்பளம் வாங்கும் ஜெகதீப் சிங்.. யார் இவர்? இவரது தினசரி வருமானம் எவ்வளவு?

சுந்தர் பிச்சையின் (Sundar Pichai) தலைமையிலான கூகுள் (Google) நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சுந்தர் பிச்சையை விட 10 மடங்கு அதிக சம்பளத்தை கெஜதீப் சிங் என்பவர் பெறுகிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. யார் இந்த ஜெகதீப் சிங் மற்றும் இவர் குறித்து சற்று விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது குவாண்டம்ஸ்கேப் (QuantumScape) என்ற நிறுவனத்தின் நிறுவனர் தான் ஜெகதீப் சிங் (Jagdeep Singh). இவர் பெறும் சம்பளம் தான் உலகிலேயே அதிகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெகதீப் சிங் அவர்களின் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.48 கோடியாக உள்ளது. ஆண்டு வருமானம் என எடுத்துக்கொண்டால் 17,500 கோடியாகும்.

சுந்தர் பிச்சையை விட அதிக சம்பளம் வாங்கும் ஜெகதீப் சிங்..

குறிப்பாக குவாண்டம்ஸ்கேப் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. அதுவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெகதிப் சிங் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார். அதன்பின்பு எச்பி, சன் மைக்ரோசிஸ்டம் ஆகிய நிறுவனங்களில் வேலை செய்துள்ளார்.

அதேபோல் ஜெகதிப் சிங் ஏராளமான ஸ்டார்ட்ப் நிறுவனங்களையும் தொடங்கியுள்ளார். அதன்படி இவர் 1992-ம் ஆண்டு ஏர் சாப்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். குறிப்பாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு குவாண்டம்ஸ்கேப் கம்பெனியை தொடங்கினார்.

குவாண்டம்ஸ்கேப் நிறுவனம் பேட்டரி டெக்னாலஜியில் புதுமையை அறிமுகம் செய்த நிலையில் தற்போது முன்னணியில் உள்ளது. அதுவும் தற்போது அதிநவீன மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளில் திரவ பொருட்கள் இல்லாத பேட்டரியை தயாரிக்கிறது இந்நிறுவனம். பழைய லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக இந்த பேட்டரி உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன பேட்டரி ஆனது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டது. அதேசமயம் வேகமாக சார்ஜ் ஏறும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தான் பல முன்னணி நிறுவனங்களின் மின்சார வாகனங்களுக்கு அதிக அளவில் இந்த குவாண்டம்ஸ்கேப் நிறுவனத்தின் பேட்டரிகளே பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குவாண்டம்ஸ்கேப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகி உள்ளார் ஜெகதீப் சிங்.

தற்போது குவாண்டம்ஸ்கேப் நிறுவனத்தின் சிஇஒ சிவராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சிஇஒ பொறுப்பில் இருந்து விலகினாலும் நிறுவனத்தின் போர்டு கமிட்டியில் தலைவராக ஜெகதீப் சிங் உள்ளார். அதேசமயம் தற்போது ஸ்டெல்த் ஸ்டார்ட்அப்-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெகதீப் சிங் பணியாற்றி வருகிறார்.

சுந்தர் பிச்சையை விட அதிக சம்பளம் வாங்கும் ஜெகதீப் சிங்..

அதுவும் ஜெக்தீப் சிங் பெறும் சம்பளம் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சையை விட 10 மடங்கு அதிகம். அதாவது 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுந்தர் பிச்சை, தோராயமாக ரூ.1663 கோடி சம்பளமாகப் பெற்று வருகிறது. குறிப்பாக இவருக்குச் சம்பளம் மட்டுமின்றி பல சலுகைகள் உள்ளது. எனவே இது எல்லாம் சேர்த்தால் சுந்தர் பிச்சைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1854 கோடி கிடைக்கிறது.

எனவே கணக்கிட்டால் சுந்தர் பிச்சையின் ஒரு நாள் சம்பளம் என்பது ரூ.5 கோடியாக உள்ளது. ஆனாலும் ஜெகதீப் சிங்கின் சம்பளம் இதை விட கிட்டதட்ட 10 மடங்கு அதிகம் ஆகும். அதாவது ஜெகதீப் சிங் ஒருநாள் வருமானம் மட்டும் ரூ.48 கோடியாக உள்ளது.

photo credit: X/@QuantumScapeCo, deccanherald

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X