Subscribe to Gizbot

பீதியில் வெள்ளை மாளிகை : வடகொரியாவின் 'கில்லர் அட்டாக்'.!

Written By:

வடகொரியாவின் திமிர்த்தனமும், அதன் அச்சுறுத்தல்களும் நேற்றோ இன்றோ ஆரம்பித்தவைகள் அல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜனாதிபதி பராக் ஒபாமா வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்திற்கு எதிரான தங்கள் இணைய மற்றும் மின்னணு ஸ்ட்ரைக்ஸ்களை (தடுத்து நிறுத்தல்களை) தொடர பென்டகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து வடக்கு இராணுவ ராக்கெட்டுகளில் ஏராளமானவைகள் வெடித்து சிதறியதுடன், நடுவழியில் சிதைந்து கடலுக்குள் வீழ்ந்தது என்று அமெரிக்க மார்தட்டி கொண்டது. ஆனால், கிம் ஜாங் யூ இன் ராக்கெட்டுகள் ஒரு சூப்பர் இரகசிய யுஎஸ் சைபர் புரோகிராமுக்கு இரையாகி அழிந்தன என்ற அமெரிக்கவின் கற்பனையை ஆதரிக்க எந்த விதமான ஆதாரமும் இல்லை என்பதே நிதர்சனம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அச்சுறுத்தலாக கருதப்படுகிறது

அச்சுறுத்தலாக கருதப்படுகிறது

விரோதமான ஆட்சி நாடாக பார்க்கப்படும் வடகொரியா, உலக பாதுகாப்பிற்கு ஒரு "மாறுபட்ட பெருகிய முறையில் மற்றும் ஆபத்தான" அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

பிற நாடுகளும்

பிற நாடுகளும்

இந்நிலைப்பாட்டில் வட கொரியா நாட்டு ஹேக்கர்கள் அமெரிக்காவின் உயர்மட்ட இரகசிய புலனாய்வுகளை பெறுவதற்கு அமெரிக்கா பெரிய அளவிலான சைபர் தாக்குதல் சம்பவங்களை நடத்தலாம் என்ற பீதி கிளம்பியுள்ளது. இவ்வகையான தாக்குதல்கள் 'கில்லர் அட்டாக்'காக கூட முடியலாம் அதாவது தாக்குதலில் பாதிப்படைவது அமெரிக்காவாக மட்டுமில்லாது பிற நாடுகளும் பாதிப்படையும்..!

அணு மின் நிலையங்கள் :

அணு மின் நிலையங்கள் :

வடகொரியா ஹேக்கர்கள் அமெரிக்கா முழுவதும் அழிவை ஏற்படுத்தும் நோக்கத்தில் அணு மின் நிலையங்கள், போக்குவரத்து மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை இலக்காக வைத்து செயல்படலாம்.

அழிவு தாக்குதல்கள் :

அழிவு தாக்குதல்கள் :

முன்னர் நடந்த சைபர் தாக்குதல் மாநாட்டில் பேசிய வெள்ளை மாளிகை பயங்கரவாத-எதிர்ப்பு ஆலோசகரான லிசா மொனாக்கோ, வட கொரியாவும் ஈரானும் அமெரிக்காவின் "முக்கிய" உள்கட்டமைப்பு மீதான "அழிவு தாக்குதல்கள்" முன்னெடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக கூறி இருந்தார்.

அச்சுறுத்தலின் நடுவில் :

அச்சுறுத்தலின் நடுவில் :

"மேலும் தொடர்ந்து, மேலும் பல்வேறு ஆபத்துகளை விளைவிக்கும், ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் புரட்சிகரமான சைபர் தாக்குதல் அச்சுறுத்தலின் நடுவில் நாம் இருக்கிறோம்" என்றும் லிசா மொனாக்கோ கூறி இருந்தார்.

அச்சுறுத்தல் :

அச்சுறுத்தல் :

குறிப்பாக வடகொரியாவின் ஹேக்கர்கள் அமெரிக்காவின் அணு சக்தி நிலையங்கள் இலக்காக வைத்து செய்லபடலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. சர்வாதிகார நாடான வடகொரியாவின் ஹேக்கர்களால் பேரழிவு தாக்குதல்களை நிகழ்த்த முடியும்.

பயிற்சி :

பயிற்சி :

பேராசிரியர் கிம் ஹெயுங் க்வாங்கின் படி வடகொரியா ஆட்சியானது 6000-க்கும் மேற்பட்ட ஹேக்கர்களுக்கு பயிற்சி வழங்கி கொண்டிருக்கிறதாம். 2004-ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய பேராசிரியர் கிம் ஹெயுங் தான் அபாயகரமானதாக ஹேக்கிங் நுட்பங்களை கற்றுக்கொள்ளவில்லை ஆனால் தனது சகாக்கள் பலர் கிம் ஜாங்கின் பீரோ 121-ன் கீழ் வேலை செய்ய சென்றார் என்பதை வெளிப்படுத்தினார்.

இராணுவத் தாக்குதல்களுக்கு இணை :

இராணுவத் தாக்குதல்களுக்கு இணை :

"வட கொரியா மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்க முக்கிய காரணமாக அதன் சைபர் போர் திறன் உள்ளது, அவர்களின் சைபர் தாக்குதல்கள் இராணுவத் தாக்குதல்களுக்கு இணையான பலி, நகர அழிப்பு போன்ற தாக்கங்களை ஏற்படுத்தும்" என்றும் பேராசிரியர் கிம் ஹெயுங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சோனி பிக்சர்ஸ் :

சோனி பிக்சர்ஸ் :

சோனி பிக்சர்ஸுக்கு எதிராக நடந்த ஒரு பெரிய சைபர் தாக்குதலுக்கு வட கொரியா மீது குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கணினிமயமாக்கப்பட்ட கட்டுப்பாடு :

கணினிமயமாக்கப்பட்ட கட்டுப்பாடு :

மற்றும் இந்த ஆண்டு முன்னதாக, நியூயார்க் நகரின் வடக்கே 25 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய அணை மீது கணினிமயமாக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஈரான் ஹேக்கர்கள் கொண்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

புதிய போர் வழி :

புதிய போர் வழி :

வெடிகுண்டு வீசி ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் உலக யுத்தம் தனியறைக்குள் இருந்தபடியே ஹேக்கிங் செய்வது மூலம் சைபர் யுத்தமாகவும் ஆரம்பிக்கலாம். மற்றும் இவ்வகை தாக்குதல்கள் மூலம் அமெரிக்க மண்ணில் புதிய போர் வழியை திணிப்பும், அணு ஆயுத மோதல்கள் பதட்டங்களும் மேலோங்குகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
A super secret US cyber program against North Korea. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot