Home
News

இது புதுவகை ட்ரோன்: ஒருவர் மட்டும் பயணம் செய்யலாம்.! முழு விவரம்.!

இப்போது புதிய வகை ட்ரோன்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக இப்போது அமெரிக்காவில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யக் கூடிய அதிநவீன ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மேலும் இது குறித்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ட்ரோன்கள் பல்வேறு துறைகளில்

அதாவது ட்ரோன்கள் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மனிதர்களின் போக்குவரத்திலும் அவற்றை
ஈடுபடுத்தும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அதன்படி அமெரிக்காவின் ஆஸ்டினை சேர்ந்த நிறுவனம் ஹெக்சா எனும் பெயரில் ஒருவர்
மட்டும் அமர்ந்து செல்லும் வகையில் அதிநவீன ட்ரோனை உருவாக்கியுள்ளது.

 ஆண்ட்ரசன் கூப்பர் என்ற

மேலும் ஆண்டர்சன் கூப்பர் என்ற பத்திரிகையாளர் இந்த ட்ரோனில் 6 நிமிட நேரம் வெற்றிகரமாக பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்இதில் பறப்பதற்காக சிமுலேட்டர் முறையில் சுமார் அரை மணி நேரம் மட்டுமே பயிற்சி எடுத்ததாக பத்திரிகையாளர் ஆண்டர்சன் கூப்பர்
தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மனிதர்கள் நின்ற இடத்திலிருந்து

அதேபோல் மனிதர்கள் நின்ற இடத்திலிருந்து எழும்பி குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக இறங்க இந்த ட்ரோன்களை அருமையாக பயன்படுத்தலாம் என்றும், பின்பு தரையில் இருந்தவாறே இந்த ட்ரோன்களை இயக்க முடியும் என இதை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலங்களில் இதுபோன்ற மனிதர்களை ஏற்றி

வரும் காலங்களில் இதுபோன்ற மனிதர்களை ஏற்றி செல்லும் ட்ரோன் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என இதை உருவாக்கிய நிறுவனம்தெரிவித்துள்ளது.

 சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி, கடலோர விவசாய நுட்பங்களுக்கு ஒரு புரட்சிகர மாற்றமாக இருக்கக்கூடிய வகையில் இந்திய விஞ்ஞானிகள் ஒரு வித்தியாசமான பறக்கும் ட்ரோனை உருவாக்கி வருகின்றனர். தென்னை மரங்களிலிருந்து தேங்காய்களைப் பறிக்கப் பயன்படுத்தும் வகையில் இந்த ட்ரோன் உருவாக்கப்பட்டு வருகிறது. ஐ.சி.ஏ.ஆர்-மத்திய கரையோர வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கோவா பல்கலைக்கழக வல்லுநர்களால் இந்த ட்ரோன் உருவாக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் 'ஃப்ளை-கோகோபோட்' என்று பெயரிட்டுள்ளனர். தேங்காய் பறிக்கும் செயல்முறையை ஆபத்தில்லாமல் செய்வதன் மூலம் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் சாதனம் ஒரு மரத்தின் உச்சிக்குப் பறந்து, ட்ரோன் கைகளின் உதவியுடன் மரத்தில் இருக்கும் தேங்காய்களைப் பறிக்க உதவுகிறது.

கண்ட்ரோல் சாதனம் மூலம்

ரிமோட் கண்ட்ரோல் சாதனம் மூலம் குறிக்கக்கூடிய தேங்காய்களை வெட்டுவதற்கு இந்த ட்ரோனில் வெட்டும் ஒரு கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ட்ரோனின் இயக்கத்தின் நேரடி ஊட்டத்தை இயக்கும் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இந்த 'கோகோபோட்' குறித்துப் பேசிய கோவா பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திர காட் கூறுகையில், 'மரத்தில் ஏறும் போது மனித உயிர்களை ஆபத்தில் ஆழ்த்த வேண்டிய அவசியமின்றி விவசாயிகள் பாதுகாப்பான தூரத்தில் இருந்து தேங்காய்களைப் பறிக்க இந்த சாதனம் அனுமதிக்கும்' என்று கூறியுள்ளார்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
A single-passenger drone has been tested in the United States: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X