சார், காசுக்கு ஈ-பாஸ் கிடைக்கும்! ஈ-பாஸ் வாங்கி கொடுப்பவர்களின் கதி இது தான்!

|

தற்பொழுது இந்தியாவில் வேகமாக சூடுபிடிக்கும் பிஸ்னஸாக ஈ-பாஸ் வாங்கி கொடுக்கும் பணி மாறியுள்ளது. ஈ-பாஸ் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இவர்களில் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் நடந்த பல வினோதமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

காட்டுத்தீ போல பரவும் ஈ-பாஸ் பிஸ்னஸ்

காட்டுத்தீ போல பரவும் ஈ-பாஸ் பிஸ்னஸ்

அண்மையில் வாட்ஸ்அப் குழுக்களில் காட்டுத்தீ போல ஒரு குறிப்பிட்ட செய்தி வைரல் ஆகிவருகிறது. அந்த வாட்ஸ்அப் மெசேஜ் இல் தெரிவிக்கப்பட்டிருந்தது, " நீங்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்ய வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் ஈ-பாஸ் வாங்கி தருகிறோம், இதற்கு நீங்கள் வெறும் ரூ.1,500 மட்டும் செலுத்தினால் போதும்" என்று கூறப்பட்டிருந்தது. குறிப்பாக வேலூர் மக்களின் வாட்ஸ்அப் குழுக்களில் இந்த செய்தி அதிகம் பகிரப்பட்டுள்ளது.

ஈ-பாஸ் கட்டாயம்

ஈ-பாஸ் கட்டாயம்

கொரோனா தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால், மாநிலத்திற்குள்ளேயே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பயண அனுமதிகள் கிடைப்பது என்பது கடினமாகிவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் அரசாங்க மேல்மட்டத்தில் உள்ள சில இணைப்புகள் மூலம் ஒரு புதிய வணிக நிறுவனம் ஈ-பாஸ் வாங்கி கொடுப்பதை முழு நேர வேலையாகவே பார்த்து வருகிறது.

அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!

வாட்ஸ்ஆப் குழுக்களில் பரவி வரும் செய்தி

வாட்ஸ்ஆப் குழுக்களில் பரவி வரும் செய்தி

வாட்ஸ்ஆப் குழுக்களில் பரவி வரும் எண்களைப் பயனர்கள் அழைத்து ஈ-பாஸ் வாங்கி கொடுக்க அவர்களிடம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து உங்களுக்கு தேவையான ஈ-பாஸை வாங்க நீங்கள் உங்களுடைய அசல் ஆதார் அடையாள அட்டையின் எண்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதை வைத்து இவர்களுக்குத் தெரிந்த சில அணுகுமுறை மற்றும் அதிகாரிகளுடன் இருக்கும் இணைப்பு மூலம் ஈ-பாஸ் வாங்கி கொடுக்கிறார்கள்.

இவர்களுக்கு மட்டும் கட்டணம் குறைவு

இவர்களுக்கு மட்டும் கட்டணம் குறைவு

இதிலும் நீங்கள் உங்களுடைய சொந்த வாகனத்தை பயன்படுத்திப் பயணிக்கப் போகிறீர்கள் என்றால் அதற்கு கட்டணம் சற்று அதிகமாக வசூலிக்கப்படுகிறது. வெள்ளை எண் போர்டுகள் கொண்ட தனியார் வாகனங்களுக்கு 1,650 ரூபாய் செலவாகும் என்றும், மஞ்சள் நம்பர் பிளேட்டுகளை கொண்ட வணிக டாக்ஸிகளுக்கு அதை விட குறைவாகவே செலவாகும் என்றும் ஈ-பாஸ் வாங்கி கொடுக்கும் வட்டாரம் தெரிவிக்கிறது.

உஷார்- அதிகரிக்கும் போலி இ-பாஸ்: போலி இ-பாஸில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி?உஷார்- அதிகரிக்கும் போலி இ-பாஸ்: போலி இ-பாஸில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி?

கடுமையான நடவடிக்கை

கடுமையான நடவடிக்கை

ஈ-பாஸ் (E-Pass) வாங்க முகவர்களாகச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். மோசடி மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் இவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கைது

கைது

நேற்று 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவர் ஈ-பாஸ் வாங்கி கொடுக்கும் வேலையைச் செய்து வந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். அதேபோல், வேலூரில் ரூ.500க்குஈ-பாஸ் வாங்கி கொடுப்பதாக வாட்ஸ்அப் இல் ஆடியோ மெசேஜ் பார்வர்டு செய்தவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
A Rising New Business Of Securing E-Pass For Fee Is Arising In Tamil Nadu : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X