எழுதும் போதே எழுத்து பிழைகளை சரி செய்யும் பேனா

By Meganathan
|

இன்று அனைத்து விதமான கணினி ப்ரோகிராம்களிலும் ஆட்டோ கரெக்ஷன் சிஸ்டம் வந்துவிட்ட நிலையில், இதே முறை பேனாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெர்ன்ஸ்டிஃப்ட் நிறுவனம் ஆட்டோ கரெக்ஷன் செய்யும் புதிய பேனா ஒன்றை உருவாக்கியுள்ளது.

எழுதும் போதே எழுத்து பிழைகளை சரி செய்யும் பேனா

இந்த பேனா முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதை தனியாகவும் மற்ற டிஜிட்டல் செயலிகளுடனும் பயன்படுத்தலாம். பிராசஸர், மோஷன் சென்சார், வைபை, வைப்ரேஷன் மாட்யூல் மற்றும் மெமரி கார்டு ஆகியவை இந்த பேனாவில் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் இது லைனக்ஸ் மென்பொருள் சார்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுதும் போதே எழுத்து பிழைகளை சரி செய்யும் பேனா

கைகளை கொண்டு எழுதப்படும் எழுத்துக்களை கண்டறிந்து 2டி பாத் மூலம் கணக்கிடுகின்றது. சென்சார் சத்தம் மற்றும் அதிகபட்ச கணக்கீடுகளை கொண்டு 2டி பாத் வேலை செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை.

எழுதும் போதே எழுத்து பிழைகளை சரி செய்யும் பேனா

பேனாவின் இயந்திரத்தை வடிவமைக்க மென்பொருள் பொறியாளர்களுடன் இணைந்து பணியாற்றியதாக இதை கண்டறிந்தவர்கள் தெரிவித்தனர். இந்த பேனாவின் மென்பொருளை டேனியல் கேஷ்மேக்கர் மற்றும் பால்க் வோல்ஸ்கை இணைந்து கண்டறிந்தனர். எழுதும் போது பிழை ஏற்பட்டால் சிறிதளவில் வைப்ரேட் ஆகும். இந்த இன்ஜின் பல ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் போன்றவைகளில் பயன்படுத்தப்பட்டன.

Best Mobiles in India

English summary
Lernstift is the first ever brilliant pen with the entire tech and software is incorporated inside the pen body. It can be used individualistically or joined with various digital applications.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X