விண்கல் விழுந்து அழிந்த இனம்- அரிய வகை டைனோசர் எழும்புக் கூடு மீட்பு.!

வேட்டையாடியாதல் அழிந்ததா இல்லை. இயற்கை பேரழிவால் அழிந்ததா என்று சந்தேகத்தையும் நமக்கு ஏற்படுத்தலாம். உலகம் முழுக்கவும் இந்த இனம் இருந்தத்திற்கான அடையாளமாக எழும்புக் கூடுகள் ஆங்காங்கே கண்டெடுக்கப்படுகி

|

டைனோசர் என்ற இனம் அழிந்து இருக்கின்றது. இது அபூர்வமாக இனமாகவே காணப்படுகின்றது. இந்த உயிரினம் பூமியில் எவ்வாறு அழிந்திருக்க கூடும் என்பதில் பெரும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விண்கல் விழுந்து அழிந்த இனம்- அரிய வகை டைனோசர் எழும்புக் கூடு மீட்பு.!

வேட்டையாடியாதல் அழிந்ததா இல்லை. இயற்கை பேரழிவால் அழிந்ததா என்று சந்தேகத்தையும் நமக்கு ஏற்படுத்தலாம். உலகம் முழுக்கவும் இந்த இனம் இருந்தத்திற்கான அடையாளமாக எழும்புக் கூடுகள் ஆங்காங்கே கண்டெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், அஜெர்டினாவில் அரிய வகை டைனோசர் எழும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனம் அழிந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது:

இனம் அழிந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது:

பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ராட்சத மிருகமான டைனோசரின் எலும்புகளும், முட்டைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த டைனோசர் இனம் அழிந்து ஆறரை கோடி ஆண்டுகள் ஆகின்றன என பல்வேறு நாட்டு அறிஞர்கள் உறுதி படுத்தியுள்ளனர்.

அழிவு எவ்வாறு வந்தது:

அழிவு எவ்வாறு வந்தது:

பூமியில் ஏராளமான உயிரினங்கள் உலாவி கொண்டிருக்க, இந்த ராட்சத இனம் எப்படி அழிந்தது என்பது, புரியாத புதிராக இருந்து வருகிறது. வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதாக சிலரும், எரிமலை சீற்றத்தில் சிக்கி இந்த இனம் அழிந்து விட்டதாக சிலரும் கூறி வருகின்றனர்.

விண்கல் மோதி அழிந்தது:

விண்கல் மோதி அழிந்தது:

இதுவரை கிடைத்த டைனோசரின் எலும்புகள் உள்ளிட்ட பாகங்களை கொண்டு, அதன் அழிவு குறித்து உலகம் முழுவதும் உள்ள 41 விஞ்ஞானிகள் கொண்ட குழு, கடந்த 20 ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டது. பல கோடி ஆண்டுகளாக பூமியில் உலாவி வந்த இந்த மிருக இனம், ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் மீது மோதிய விண்கல்லால், முற்றிலும் அழிந்து விட்டதாக இந்த விஞ்ஞானிகள் குழு Image result for dinosaurதெரிவித்துள்ளது.

அணு குண்டு போல் பூமியில் மோதியது:

அணு குண்டு போல் பூமியில் மோதியது:

மெக்சிகோ நாடு அமைந்துள்ள பகுதியில் 15 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட விண்கல், அணுகுண்டை விட வேகமாக பூமியின் மீது வந்து மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியால் பூமியில் பூகம்பமும், சுனாமியும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

முற்றிலும் அழிந்து போய் விட்டது:

முற்றிலும் அழிந்து போய் விட்டது:

விண்கல் மோதிய வேகத்தால் அணுகுண்டை விட பலமடங்கு சக்தி வாய்ந்த அதிர்வு ஏற்பட்டு பூமியில் ஏற்பட்ட கந்தக புழுதியால் உலகமே இருண்டு போய் விட்டது. பல இடங்களில் காட்டு தீ பரவியது. பூமியின் சுற்றுச்சூழலில் அதிரடிமாற்றம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த மாற்றத்தால் ஓடி ஒளியக்கூட இடம் இல்லாத காரணத்தால் டைனோசர் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போய் விட்டன என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நூற்றுக்கணக்கான டைசேனார்கள்:

நூற்றுக்கணக்கான டைசேனார்கள்:

இன்றைய தினம் அமெரிக்காவின் அலஸ்க்கா பகுதியில், Yukon நதியை அண்டிய சுமார் 500 மைல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல நூறு டைனோசர்களின் சுவடுகள் கண்டறியப்பட்டது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

95 ஆண்டுக்கு முட்பட்டவை:

95 ஆண்டுக்கு முட்பட்டவை:

பெரிய, சிறிய, மாமிச, தாவர உண்ணி என வெவ்வேறு வகையான இன டைனோசர்களின் சுவடுகள் ஒரே இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முட்பட்டவையாக கருதப்படுகிறது. இதுவரை இனங்காணப்பட்டவையிலேயே இவைதான் காலத்தால் முற்பட்டவையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கொம்புகளுடன் வாழ்ந்த டைசேனார்:

கொம்புகளுடன் வாழ்ந்த டைசேனார்:

பஜடாசாரஸ் ரோனுஸ்பைனக்ஸ் (Bajadasaurus Pronuspinax) என்ற டைனசர் வகை கழுத்தில் ஏராளமான கொம்புகளுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வகை டைனோசரின் எலும்புகள் கடந்த 2013ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டாலும், முழுமையான எலும்புகள் கிடைக்காமல் இருந்த அதன் தோற்றம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன.

230 ஆண்டு பழமையானது:

230 ஆண்டு பழமையானது:

இந்நிலையில் தற்போது தலைநகர் பியூனஸ் அயர்ஸின் புறநகர் பகுதியில் பஜடாசாரஸின் முழுமையான எலும்புகள் கிடைத்துள்ளன. இந்த வகை டைனோசர்கள் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
A New Type Of Dinosaur Bone Nest In Argentina : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X