ரஷ்ய ராணுவத்தின் புதிய உளவாளி - ரோபோ கரப்பான்பூச்சி..!
சூப்பர் பவர் நாடுகள் தங்களை மேலும் மேலும் அதிக சக்தி வாய்ந்தவர்களாக உருவாக்கி கொள்ளவே விரும்புகிறது என்பதற்கு பல நாடுகள் உதாரணம்.
ரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..!
அந்த உதாரண பட்டியலில் ரஷ்யாவிற்கு ஒரு நிரந்தரமான இடமே உண்டு என்று கூறலாம்.
உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!
அந்த அளவிற்கு ரஷ்யா திந்தினம் ஏதேயேனும் படைத்துக் கொண்டே இருக்கிறது, சக்தி வாய்ந்த நாடாக தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது, சில சமயம் காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்றும் சொல்லலாம். அப்படியாக சமீபத்தில் ரஷ்யா உருவாக்கிய ஒரு விசித்திரமான உளவாளி தான் - காக்ரோச் ரோபோ ஸ்பை (cockroach robo-SPY)..!

ராணுவம் :
ரஷ்யா சமீப காலமாக, தன் ராணுவத்தில் பல வகையான ரோபோட்களை இணைத்த வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்துள்ளது - கரப்பான் பூச்சி ஸ்பை ரோபோ..!

நீளம் :
4 இன்ச், அதாவது 10 சென்டிமீட்டர் நீளம் உள்ள இந்த ஸ்பை ரோபோ ஒரு நிஜ கரப்பான் பூச்சியை போலவே நகர்ந்து வேகமான ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உளவு :
யாரும் எளிதில் நுழைய முடியாத இடங்களில் மிகவும் அசாதாரணமாக நுழைந்து உளவு பார்ப்பதற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

சென்சார் :
இந்த கரப்பான் ரோபோ ஸ்பை-யில் போட்டோசென்சிடிவ் சென்சார், மற்றும் தொடர்புகளை கண்டறியும் சென்சார் ஆகியவைகள் பொருத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நேரம் :
தற்போது தொடர்ந்து 20 நிமிடங்கள் நகரக்கூடிய வண்ணம் காக்ரோச் ரோபோ ஸ்பைக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் மேலும் அதிக நேரம் நகரக் கூடியவைகள் உருவாக்கப்படுமாம்..!

உருவாக்கம் :
ரஷ்ய என்ஜினீயர்களான டேனில் போர்சேவிகின் (Danil Borchevkin) மற்றும் அலெக்சேய் பேலோசெவ் (Aleksey Belousov) ஆகிய இருவரும் தான் இவ்வகை பயோனிக் கரப்பான் பூச்சிகளை உருவாக்கியுள்ளனர்.

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
புகைப்படங்கள் : கன்டியானா.ரு ஃபேஸ்புக்பக்கம் மற்றும் சென் லீ (பொலிபெடல் லேப்)


Click it and Unblock the Notifications
