பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடித்த ஆய்வாளர்கள்- அசத்தல் வீடியோ!

|

விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்

சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?

மூன்று வருடங்களாக சுற்றுவரும் நிலா

மூன்று வருடங்களாக சுற்றுவரும் நிலா

அதன்படி பூமியை சுற்றி வரும் புதிய நிலா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மைனர் பிளானட் சென்டர் (Minor Planet Centre) அறிவித்துள்ளது. மூன்று வருடங்களாக சுற்றுவரும் இந்த நிலா தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு `2020 CD' என பெயரிடப்பட்டுள்ளது.

அவ்வப்போது நிகழும் நிகழ்வுதான்

அவ்வப்போது நிகழும் நிகழ்வுதான்

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள கேன்டர்பரி பல்கலைக்கழகத்தின் வானியலாளர் மைக்கேல் பன்னிஸ்டர் கருத்துப்படி, எஃபெமரல் எர்த் வகைகள் மிகவும் பொதுவானவைகளாக இருக்கலாம் எனவும் அது அவ்வப்போது நிகழும் நிகழ்வுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006-ல் விண்கல் பூமியை சுற்றி வந்தது

2006-ல் விண்கல் பூமியை சுற்றி வந்தது

முன்னதாக 2006ம் ஆண்டு இதுபோன்ற விண்கல் பூமியை சுற்றி வந்தது. அதன்பின் அது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து மாறி சென்றுவிட்டது. தற்போது `2020 CD' பூமியை சுற்றி வருகிறது. இதன் செயல்பாட்டை கண்காணிப்பது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன், பூமி மற்றும் சந்திரன்

சூரியன், பூமி மற்றும் சந்திரன்

மேலும் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றின் ஆதிக்கமும் இந்த பொருட்களின் மீது இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இதன் பாதை எந்நேரமும் மாறுபடும் எனவும் இந்த குட்டி நிலவு பூமியை மோதுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும்

ஆனால் இது அளவில் சிறியதாக இருப்பதால் தரையை அடையும்முன் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி மோதாத பட்சத்தில் பூமியை சில சுற்றுகள் சுற்றிவிட்டு சூரியனை நோக்கி சென்றுவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!

 2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும்

2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும்

1991-ஆம் ஆண்டு இதே போன்றதொரு '1991 VG' என்று பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில வருடங்கள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. இது மீண்டும் 2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள 2020 CD என்ற குட்டி நிலவு நீண்ட காலத்திற்கு நம்முடன் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
A New Mini-Moon Was Found Orbiting Earth

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X