வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் - இதன் மூலம் பணமும் அனுப்ப முடியும் பாஸ்

Written By:

வாட்ஸ்ஆப் செயலியில் அப்டேட் செய்து ஒரு மாதமாகிவிட்ட நிலையில் அந்நிறுவனம் புதிய அப்டேட் வழங்கியுள்ளது. அதிகளவில் மாற்றங்களுடன் புதிதாக காட்சியளிக்கும் காலிங் இன்டர்பேஸ் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட ஐகான்கள் புதிய அப்டேட் வழங்கியிருக்கும் சிறப்பம்சங்களாகும்.

மேலும் இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கி சேவையை வழங்கி வரும் ஆக்சிஸ் வங்கி பண பறிமாற்ற சேவைகளை வாட்ஸ்ஆப்பில் வழங்கியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாட்ஸ்ஆப் அப்டேட்

வாட்ஸ்ஆப் அப்டேட்

வாட்ஸ்ஆப் செயலியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அப்டேட் வழங்கியிருக்கும் புதிய அம்சங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

அப்டேட்

அப்டேட்

வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.12.87 இன்டர்பேஸ் வடிவமைப்பில் பல மாற்றங்களை அளித்துள்ளது. குறிப்பாக கான்வெர்சேஷன் வால்பேப்பர், மேட்டீரியல் டிசைன் ஐகான் மற்றும் கால் இன்டர்பேஸ் மாற்றங்களை கூறலாம்.

சர்ச் மெனு

சர்ச் மெனு

புதிய அப்டேட் செய்யப்பட்ட செயலியில் சர்ச் பட்டன் பார்க்க எளிமையாக காட்சியளிக்கின்றது. புதிய அப்டேட் ஏபிகே ஃபைலினை உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

பண பறிமாற்றம்

பண பறிமாற்றம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியாக இருக்கும் ஆக்சிஸ் பிங் பே எனும் சேவை மூலம் வாட்ஸ்ஆப் பயனாளிகளை மற்றவர்களுக்கு பணம் அனுப்ப வழி வகுக்கின்றது, இந்த சேவை இமீடியேட் பேமென்ட் சர்வீஸ் திட்டத்தின் கீழ் ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்திராதவர்களுக்கும் பணத்தை அனுப்ப வழி வகுக்கின்றது குறிப்பிடத்தக்கது.

மாற்றம்

மாற்றம்

இந்த மாற்றம் செய்யப்பட்ட நேரம் குறித்து எவ்வித தகவல்களும் இல்லாத நிலையில் ப்ளே ஸ்டோரில் இல்லாத வெர்ஷன் 2.12.30 மூலம் உங்களது கான்டாக்டில் இல்லாத நம்பரை ப்ளாக் செய்து ஸ்பேமாக அறிவிக்க முடியும்.

பேக்கப்

பேக்கப்

வாட்ஸ்ஆப் ஏபிகே வெர்ஷன் 2.12.45 மூலம் உங்களது குறுந்தகவல்கள், கான்டாக்ட்கள் மற்றும் செட்டிங்ஸ் போன்றவைகளை கூகுள் டிரைவில் பேக்கப் செய்ய முடியும். இதற்கு செட்டிங்ஸ் -- சாட் செட்டிங்ஸ் -- சாட் பேக்கப் ஆப்ஷனை க்ளிக் செய்து எத்தனை நாட்கள் இடைவெளியில் பேக்கப் செய்ய வேண்டும் என்பதையும் இந்த பேக்கப் உங்களது மொபைல் டேட்டாவை பயன்படுத்த வேண்டுமா அல்லது வைபை கனெக்ஷன் மூலம் செய்யப்பட வேண்டுமா என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

அப்டேட்

அப்டேட்

புதிய அப்டேட் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் தளத்தில் இணைந்திருங்கள். எங்களது முகநூல் பக்கத்தில் செய்திகளை வாசிக்க க்ளிக் செய்யுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
A new call interface and money transfers introduced in WhatsApp update. check out here the list of upates done in whatsapp's new update.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot