பிக்பாஸே சரணம்: மூளை அறுவை சிகிச்சையின் போது பிக்பாஸ் ஷோ பார்த்த நபர்!

|

ஆந்திராவில் 33 வயதான ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவர் அவருக்கு பிடித்தமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவும், அவதார் திரைப்படமும் பார்த்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மூளை அறுவை சிகிச்சை

மூளை அறுவை சிகிச்சை

மூளை அறுவை சிகிச்சை செய்யும்போது நோயாளி நினைவிழக்காமல் இருப்பதற்காக அவர்களுக்கு பிடித்த ஒன்றை செய்ய சொல்வதும் பார்க்க சொல்வதும் வழக்கம் என கூறப்படுகிறது. அதன்படி ஆந்திராவில் 33 வயதான ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது அப்போது அவர் அவருக்கு பிடித்தமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவும், அவதார் திரைப்படமும் காண்பிக்கப்பட்டுள்ளது.

நோயாளி விழித்திருக்க பிடித்தமான செயல்

நோயாளி விழித்திருக்க பிடித்தமான செயல்

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவின்படி, நரம்பியல் அறுவை சிகிச்சையாளர்கள் அறுவை சிகிச்சை செய்யும் நோயாளி விழித்திருக்க அவர்களுக்கு பிடித்தமான செயலை செய்யச் சொல்வார்கள்.

33 வயதான வரப்பிரசாத்

33 வயதான வரப்பிரசாத்

அதன்படி ஆந்திரா மாநிலம் குண்டூரில் 33 வயதான வரப்பிரசாத் என்பவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது வரப்பிரசாத் விழித்திருக்க வேண்டியது இருந்தது. இதனால் அவருக்கு பிடித்தமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மற்றும் அவதார் படத்தை காண்பித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு வெளியான அவதார்

2009 ஆம் ஆண்டு வெளியான அவதார்

2016 ஆம் ஆண்டில் முன்னதாகவே வரப்பிரசாத்திற்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் வரப்பிரசாத்துக்கு மூளை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவர் விழித்திருக்க வேண்டும் என்பதால் அவர் லேப்டாப்பில் அவருக்கு பிடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியும், 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படமும் பார்த்துள்ளார்.

"அந்த" பட்டனை யார் அழுத்துவார்.? என்ன கட்டாயத்தின்கீழ் அழுத்துவார்.?

குணமடைந்து வீடு திரும்பிய வரப்பிரசாத்

குணமடைந்து வீடு திரும்பிய வரப்பிரசாத்

இது ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பிருந்தா நியூரோ சென்டரில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை வரப்பிரசாத் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றாத கூறப்படுகிறது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் பெரிய வரவேற்பு பெற்றது. அவதார் திரைப்படம் ஒன்பது ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி பலரிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது என்பது நிதர்சனமான உண்மையே. இந்த நிலையில் ஒருவர் மூளை அறுவை சிகிச்சையின்போதும் தன்னை விழிப்புடன் வைத்துக் கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்துள்ள சம்பவம் பலரை வியப்படைய செய்துள்ளது.

File Images

Source: indiatoday.in

Most Read Articles
Best Mobiles in India

English summary
A Man Watching Bigg Boss While Doctor Performed a Brain Surgery on Him

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X