50 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கபட்ட ஓரினச்சேர்க்கையாளர் நாயினால் விடுதலை செய்யப்பட்டார்.!
நாய் மக்களின் நண்பன் என்று நிறையப் பேர் சொல்லிக் கேட்டதுண்டு.
நாய் மக்களின் நண்பன் என்று நிறையப் பேர் சொல்லிக் கேட்டதுண்டு. ஆனால் முதல் முறையாக இப்படி ஒரு கதையை நாம் கேட்க போகிறோம். அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 50 ஆண்டுள் சிறையில் தன் வாழ்க்கையைக் கழித்திருக்க வேண்டியது.

அவரின் வழக்கில் திடீர் என்று எதிர்பாராத விதமாக மாற்றம் நிகழ்ந்து அவர் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி பேஸ் புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்கா வின் ஓரிகன் பகுதியைச் சேர்ந்த ஜோசுவா ஹார்னர்(42), ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஜோசுவா ஹார்னர் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவரைக் கைது செய்த போலீஸார், ஜோசுவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜோசுவா தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும், தான் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை என்றும் இந்தக் குற்றத்தில் அவர் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானதில்லை என்று கூறி, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜோசுவா மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜோசுவா, சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த போது 'லூசி' என்ற நாயைச் சுட்டுக்கொன்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த நாய் வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நாயைக் கண்டுபிடித்து அதனை ஜோசுவா தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஜோசுவா 50 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து ஒரு நாயினால் அவர் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications