ஆசையை தூண்டிய விளம்பரம்: 800-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி- எப்படி தெரியுமா?

|

சமூகவலைதளங்களில் விளம்பரங்களை பார்த்து சென்னையை சேர்ந்த நபர் பொருட்களை வாங்க வங்கிக் கணக்கு பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளார். இதுகுறித்த புகாரில் ஏமாற்றியவரை சைபர் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரதானமாக இருக்கும் சமூகவலைதள பயன்பாடு

பிரதானமாக இருக்கும் சமூகவலைதள பயன்பாடு

சமூகவலைதளம் பயன்படுத்தாத நபர்களை விரல்கள் விட்டு எண்ணி விடலாம். சமூகவலைதள பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது. வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா போன்ற பயன்பாடுகளில் ஏராளமானோர் தங்களது சுயக் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வீட்டிலேயே முடங்கும் நிலை

வீட்டிலேயே முடங்கும் நிலை

குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதில் பெரும்பாலானோர் சமூகவலைதளங்களையும், ஆன்லைன் விளையாட்டுகளையும் கையாள தொடங்கினர். வாட்ஸ்அப் குழுக்கள் அதிகரிக்கத் தொடங்கியது.

பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூகவலைதளங்கள்

பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூகவலைதளங்கள்

பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்தும்போது விளம்பரங்கள் காண்பிக்கப்படுவது வழக்கம். இதில் சில விளம்பரங்களில் குறைந்த விலையில் தரமான பொருட்கள் போன்று காண்பிக்கப்படும். அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஆடை, அணிகலன்கள் குறைந்த விலையில் காண்பிக்கப்படுவது வழக்கம்.

பேஸ்புக் கணக்கில் காண்பிக்கப்பட்ட விளம்பரம்

பேஸ்புக் கணக்கில் காண்பிக்கப்பட்ட விளம்பரம்

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த இந்திரா பிரகாஷ் என்ற பெண் அதுபோன்ற விளம்பரத்தை பார்த்து பொருட்கள் வாங்க பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளார். சென்னையை சேர்ந்த இந்திரா தன்னுடைய பேஸ்புக் கணக்கை பயன்படுத்தும் போது விளம்பரங்களை பார்த்துள்ளார்.

சேல்(Sale) என்ற குழு

சேல்(Sale) என்ற குழு

இந்திரா பார்த்த விளம்பரங்களில் காண்பிக்கப்பட்ட ஆடை தனக்கு பிடிக்கவே அது குறித்த விவரங்களை அலசி பார்த்துள்ளார். இதையடுத்து இந்திராவின் மொபைல் எண் வாட்ஸ்அப்பில் சேல்(Sale) என்ற குழுவில் சேர்க்கப்பட்டு ஆடைகள் குறித்த விளம்பரங்கள் தொடர்ந்து வந்துள்ளது.

ஆன்லைன் ரயில் டிக்கெட்டில் இந்தி திணிப்பு சர்ச்சை? தெற்கு ரயில்வே கூறிய விளக்கம் இதுதான்.!ஆன்லைன் ரயில் டிக்கெட்டில் இந்தி திணிப்பு சர்ச்சை? தெற்கு ரயில்வே கூறிய விளக்கம் இதுதான்.!

உறுப்பினர்களாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள்

உறுப்பினர்களாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள்

இந்திரா சேர்க்கப்பட்ட சேல் என்ற குழுவில் தொடர்ந்து ஆடைகள் குறித்த விளம்பரங்கள் வந்துள்ளன. அந்த குழுவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரியர் மூலம் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்

கொரியர் மூலம் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்

சேல் என்ற குழுவில் உள்ள அட்மின், தங்களிடம் தரமான துணிகள், அணிகலன்கள் உள்ளதாகவும் குறைந்த விலையில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு இந்த பொருட்கள் வேண்டுமென்றால் தனது வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் செலுத்தியவுடன் கொரியர் மூலம் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கம்

இந்திரா வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கம்

இதையடுத்து தனக்கு பிடித்த பொருட்களை வாங்க விரும்பிய இந்திரா அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய சிறிது நேரத்திலேயே இந்திரா அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குரூப் அட்மின் கைது

குரூப் அட்மின் கைது

வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த இந்திரா, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சேல் குரூப் அட்மினை கைது செய்துள்ளனர். அவர் தாம்பரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது.

போலீஸார் விசாரணை

போலீஸார் விசாரணை

அவரிடம் நடத்திய விசாரணையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜேந்திரனிடம் போலீஸார் விசாரணை துரிதப்படுத்தினர்.

Best Mobiles in India

English summary
A Man Arrested who Cheated Money From 800 women through fake advertisements

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X