பூமியில் சூரிய வெடிப்பின் தாக்கம்: போன் முதல் இணையதளம் வரை பாதிக்கிறதா? என்னாச்சு?

|

பூமியில் உள்ள தாவரங்கள், மனிதர்கள் மற்றும் மற்ற உயிர்கள் அனைத்தும் உயிர்வாழ்வதற்குச் சூரியன் மிகவும் முக்கியமானது. ஆனால், இந்த மகத்தான சூரிய ஆற்றல் ஒரு சில நேரங்களில் பூமிக்கும், பூமியில் உள்ள தொழில்நுட்பங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் திறனாக மாறிவிடுகிறது. சூரிய வெடிப்பின் மூலமாகச் சூரிய ஆற்றல் உருமாறி, பூமியில் உள்ள அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் சீர்குலைக்கும் திறன் கொண்டது என்பதை நாம் அனைவருக்கும் அறிந்திருக்கிறோம். அப்படியான நிகழ்வு தான் இப்போது நிகழப்போகிறது.

சூரியனில் இருந்து வரும் மிகப்பெரிய அச்சுறுத்தல்

சூரியனில் இருந்து வரும் மிகப்பெரிய அச்சுறுத்தல்

இன்று நம்மிடம் உள்ள மிகப்பெரிய தகவல் தொடர்பு அமைப்புகள் உட்பட, நம் கையில் உள்ள ஸ்மார்ட் போன், அதில் நாம் பயன்படுத்தும் இணையம், நமது வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவிகள் என்று எதுவுமே இந்த சூரிய வெடிப்பு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள். சூரியனிடமிருந்து நமக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்றாலும் கூட, சூரியனில் இருந்து வரும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது சூரிய வெடிப்புகள் மூலம் உருவாகிறது.

சூரியனின் சக்தி

சூரியனின் சக்தி

இவை சூரியனின் மேற்பரப்பில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சின் சக்தி வாய்ந்த பெரிய வெடிப்புகள் ஆகும். அவை மிகப்பெரிய வேகத்தில் விண்வெளியில் இருந்து அனுப்பப்படுகின்றன. பூமியின் காந்தப்புலம் மற்றும் வளிமண்டலத்தின் காரணமாக நாம் பாதுகாக்கப்படுகிறோம். சூரியனில் இருந்து தினசரி வரும் கதிர்களின் விளைவுகளிலிருந்து நம்மைக் காக்கும் கேடயமாகப் பூமியின் காந்தப்புலம் மற்றும் வளிமண்டலம் செயல்படுகிறது.

ரேடியோ பிளாக்அவுட் நிகழ்வுகள்

ரேடியோ பிளாக்அவுட் நிகழ்வுகள்

ரேடியோ பிளாக்அவுட்களின் சில சம்பவங்களைத் தவிர, மனிதக்குலம் பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்படாமல் பூமியின் காந்தப்புலத்தின் மூலம் தப்பிக்கிறது. இருப்பினும், இந்த சூரிய புயல்கள் பூமியில் அழகான ஒன்றை உருவாக்குகின்றன, அது தான் அரோராஸ். எனினும், ஒரு வலுவான சூரிய வெடிப்பு ஒரு பெரிய புவி காந்த புயலுக்கு வழிவகுக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது. இதனால், இணையம், மொபைல் போன்கள், செயற்கைக்கோள்கள்,

1859 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய நிகழ்வு

1859 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய நிகழ்வு

மின்சார இணைப்புகள் மற்றும் பலவற்றை அழிக்கக்கூடும் என்பதால் அழிவுக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, ஒரு சூரிய வெடிப்பு மூலம் உருவாகும் சூரிய புயல் பூமியை எவ்வாறு பாதிக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். இது பற்றி அறிந்துகொள்வதற்கு, நாம் நம்முடைய வரலாற்றில் சற்று பின்னோக்கி செல்ல வேண்டியதுள்ளது. கடந்த 1859 ஆம் ஆண்டில் நடந்த கேரிங்டன் சம்பவத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நீங்கள் செய்யும் 'இந்த' சிறிய தவறு உங்களுக்கே ஆபத்தாகலாம்.. உங்கள் தகவலை பாதுகாக்க இதை உடனே செய்யுங்கள்..நீங்கள் செய்யும் 'இந்த' சிறிய தவறு உங்களுக்கே ஆபத்தாகலாம்.. உங்கள் தகவலை பாதுகாக்க இதை உடனே செய்யுங்கள்..

மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு

மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு

1859 இல் ஏற்பட்ட பாரிய சூரிய எரிப்பு பூமியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தோல்வியுற்ற மின் கட்டம் உட்படப் பல தொழில்நுட்ப சிக்கல்களுடன் பூமி பெரிய இழப்பை எதிர்கொண்டது. அதேபோல், 1980 ஆண்டில் கூட, கனடாவின் கியூபெக்கில் சூரிய வெடிப்புகளால் ஏற்பட்ட புவி காந்தப் புயல் பாரிய மின்வெட்டுகளை உருவாக்கியது. மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் திணறிப்போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சார செயல்பாடு மூடப்படும்

மின்சார செயல்பாடு மூடப்படும்

இதேபோல், இன்று பூமியை ஒரு பெரிய சூரிய ஒளி தாக்கினால் இதே போன்ற நிகழ்வுகள் நிகழல வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை இது நடந்தால், அது பூமியில் உள்ள மின்சார செயல்பாட்டை மூடும் மற்றும் மின்சாரம் சார்ந்த அனைத்து சாதனங்களையும் வேலை செய்யாமல் நிறுத்தம் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நிகழ்வு தகவல் தொடர்பு மீதான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

இன்டர்நெட் சேவை கூட முடக்கப்படும்

இன்டர்நெட் சேவை கூட முடக்கப்படும்

மின்சாரம் மட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்கள், இணையம் மற்றும் ஜிபிஎஸ் அமைப்பு, தினசரி தகவல் தொடர்பும் பாதிக்கப்படும். உங்கள் ஸ்மார்ட்போனில் போன் கால் சேவை, இன்டர்நெட் சேவை என அனைத்தும் பாதிக்கப்படலாம். சேதமடைந்த மற்றும் அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பைச் சரிசெய்ய நிறைய நேரம் எடுக்கும் என்பதால் இது பல மாதங்களுக்குக் கூட நீடிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது சூரிய வெடிப்பு ஏற்பட்ட பிறகு தெரியும்.

அழகான அரோரா விளைவை ஏற்படுத்தும் சூரிய வெடிப்பு

அழகான அரோரா விளைவை ஏற்படுத்தும் சூரிய வெடிப்பு

ஒருபுறம் சூரியக் கதிர்கள் பல இடையூறுகளை ஏற்படுத்தினாலும், மறுபுறம் அது நல்ல விளைவையும் ஏற்படுத்துகிறது. இது அரோரா லைட் நிகழ்வுகளால் ஒரு கண்கவர் காட்சிக்காக வானத்தை ஒளிரச் செய்கிறது. பனி துருவங்களில் வானில் ஒளிரும் ஒளி எவ்வாறு உருவாகிறது என்பதை நாசா விளக்குகிறது. சூரியனிலிருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் பூமியின் காந்த வளிமண்டலத்தில் சிக்கி, அங்கு ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் மோதலின் மூலம் பிரகாசிக்கின்றன.

Best Mobiles in India

English summary
A major solar flare could have a huge impact on Earth power from phones to the Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X