அதிகமுறை வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன் எது தெரியுமா? சொன்னா நம்பமாட்டீங்க.!

செல்போன் ஆட்சியால் உலகமே ஒரு கையடக்கத்திற்குள் அடங்கியுள்ளது. என்றால் மட்டும் மிகையாகாது. கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு இருப்பது போல செல்போன் வைத்திருப்போருக்கு இருக்கின்ற இடத்திலேயே சி

|

இன்றைய உலகில் செல்போன்கள் இல்லாமல் யாராலும் இயங்க முடியாது. அந்த அளவுக்கு செல்போன் இன்றைய உலகத்தில் சர்வதிகாரியாக உருவெடுத்து ஆட்சி செய்கிறது. தகவல் தொடர்பையும் தாண்டி செல்போன் இருப்பதால், வங்கியில் பணம் பரிமாற்றம், இபி, காஸ் பில் கட்டுவது, உணவு ஆடர் செய்து, சினிமா டிக்கெட் புக் செய்தும் வர்த்தகம், விளையாட்டு, செய்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பை கொடுக்கிறது.

அதிகமுறை வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

செல்போன் ஆட்சியால் உலகமே ஒரு கையடக்கத்திற்குள் அடங்கியுள்ளது. என்றால் மட்டும் மிகையாகாது. கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு இருப்பது போல செல்போன் வைத்திருப்போருக்கு இருக்கின்ற இடத்திலேயே சிறப்பு தான். அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி இருந்தாலும், முறையாக கையாளாவிட்டால் எதுமே ஆபத்து தான்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சும்:

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சும்:

செல்போன்களின் பல்வேறு விதமான பொழுது போக்கு அம்சங்களும் இருப்பதால் அதை உபயோகபடுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளனர். அவைகளை அளவு கடந்து உபயோகிக்கும் போது அவைகள் வெடித்து மனித இனத்திற்கு தீங்கு ஏற்படுத்துகின்றது. செல்போன்கள் வெடிப்பால் உயிரிழப்பும், காயங்களும் ஏற்படுகிறது.

விபத்துக்கு காரணம்:

விபத்துக்கு காரணம்:

செல்போன்களை நாம் அதிக நேரம் சார்ஜ் போடுவது, அதில் ஹெட்செட் போட்டுக் கொண்டே பாடல் கேட்பது. பல்வேறு விதமான ஆப்களை பயன்படுத்தும் போதும் போன் சூடாகி விடுகிறது. இவைகளை அதிக நேரம் பயன்படுத்துவதால் செல்போன்களில் உள்ள பேட்டரி அதிக வெப்பம் காரணமாக வெடித்து விபத்து ஏற்படுகின்றது. இதனால் மனித இனத்திற்கு உயிர் பலியும், காயங்களும் ஏற்படுகிறது.

உலகளவில் நடந்த செல்போன் விபத்துகள்:

உலகளவில் நடந்த செல்போன் விபத்துகள்:

கோமாவில் இருந்த பெண்:

கடந்த 2013ம் ஜூலை 8ம் தேதி ஆண்டு சீனா தலைநகர் பீஜிங்கில் வூ ஜயன் டாங் என்ற பெண் ஐபோன் 4ஐ சார்ஜில் செல்போனை பேசிய போது, செல்போன் வெடித்தது. இதில் இந்த பெண் 10 நாள் கோமாவில் இருந்தார்.

விமான பணிப் பெண்:

விமான பணிப் பெண்:

கடந்த 2013ம் ஜூலை 12ம் நாள் மா ஐலுன் என்ற 23 வயது விமானப் பணிப்பெண் தனது ஐபோன் 5யை சர்ஜ் போட்டுக் சென்ற போது, அவருக்கு மின்சாரம் தாக்கி காயம் ஏற்பட்டது.

மாணவன் காயம்:

மாணவன் காயம்:

மார்ச் 2012ல் சவுத்கொரியாவில் சுவாங் ஜூ என்ற பள்ளி மாணவன் சாம்சங் கேலக்ஸி எஸ் 2 போனை பின் பகுதி பாக்கெட்டில் வைத்து அமர்ந்து அதிக அழுத்தம் காரணமாக வெடித்தது. இதில் மாணவன் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

 சீனாவில் முதியவர்

சீனாவில் முதியவர்

சீனாவை சேர்ந்த 55 வயது முதியவர் கடந்த ஜூலை 2013ம் ஆண்டு சாம்சங் கேலக்ஸி போனை பின் புற பாக்கெட்டில் வைத்திருந்த போது, வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

சாம்சங், ஐபோன்கள்:

சாம்சங், ஐபோன்கள்:

* சாம்சங் கேலக்ஸி எஸ் 3, ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்கள் சீனா, ஹாங்காங், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பேட்டரி அழுத்தம் காரணமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 5க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் விபத்து:

இந்தியாவிலும் விபத்து:

இதேபோல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் சாம்சங், நோக்கியா, சீனா போன்களும் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு சில பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த செல்போன் வெடித்த சம்பவத்தால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
A Look Into Cases And Causes Of Smartphone Explosions: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X