ரூ.250/- க்குள் அதிகமான டேட்டா தரும் டெலிகாம் நிறுவனம் எது? வாங்க பார்ப்போம்.!
இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது ஏர்டெல் நிறுவனம், குறிப்பா ஏர்டெல்-ன் ரூ.249/-ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது,குறிப்பாக நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் பட்ஜெட் திட்டங்களை அறிவித்துள்ளது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள். மேலும் இப்போது உள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ரூ.250/-க்குள் சிறந்த டேட்டா திட்டங்களை
அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஸ்பீட் டெஸ்டில் அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஜியோ, வெறும் 5.13 ஆடிpள என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானதோ 9.31 ஆடிpள என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது. இது ஜியோவை விட சரியாக 4 ஆடிpள அதிகமாகும். மேலும் ரூ.250-க்குள் சிறந்த டேட்டா திட்டங்களை தரும் டெலிகாம் நிறுவனங்களை பார்ப்போம்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.249/- திட்டம்:
இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது ஏர்டெல் நிறுவனம், குறிப்பா ஏர்டெல்-ன் ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின்பு இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும்
வழங்கப்படுகிறது.

வோடபோன் ப்ரீபெய்ட் ரூ.255/- திட்டம்:
வோடபோன் நிறுவனம் தற்சமயம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, மேலும் வோடபோனின் ரூ.255/- ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின்பு இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் இலவச எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும்வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஜியோ ரூ.198/-திட்டத்தில் 2ஜிபி வரை 4ஜி டேட்டாவை வழங்குகிறது. அதன்பின்பு இந்த திட்டத்தை 28 நாட்கள் பயன்படுத்த முடியும், குறிப்பாக 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது.

ஐடியா:
ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் அதிக நன்மைகள் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனத்தின் ரூ.249/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின்பு இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் இலவச 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் :
பிஎஸ்என்எல் ஐபிஎல் 2018 போட்டியை முன்னிட்டு சிறந்த திட்டத்தை அறிவித்துள்ளது, அதன்படி புதிதாய் அறிவிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- ஆனது மொத்தம் 153 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 51 நாட்கள் ஆகும், அதாவது இந்த திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்று அர்த்தம். அதன்பின்பு ரூ.118 /-என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்,குறிப்பாக இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications