சாதித்த விவசாயி மகன்.. ஆன்லைனில் AI கோர்ஸ்.. TVS நிறுவனத்தில் பல லட்சம் சம்பளத்தில் வேலை!
ஆன்லைனில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) மற்றும் மெஷின் லேர்னிங் (Machine Learning) கோர்ஸ் படித்து முடித்து, டிவிஎஸ் (TVS) நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த ஒரு விவசாயி மகனின் விடாமுயற்சியானது, வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு உத்வேகமாக மாறியிருக்கிறது.
இதுகுறித்த விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். அண்மை காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியை நாம் ஒவ்வொருவரும் பார்த்து வருகிறோம். இந்த செயற்கை நுண்ணறிவு மனித வரலாற்றில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவர காத்திருக்கிறது என்று சொன்னாலும் தகும். சொல்லப்போனால், தொழில்நுட்பத் துறையை கடந்து கல்வி, விவசாயம், வங்கி, சினிமா என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தனது ஆக்கிரமிப்பை தொடங்கிவிட்டது என்பதே உண்மை.

ஒருபுறம், செயற்கை நுண்ணறிவு காரணமாக பல்வேறு மனித வேலைகளும், வேலை வாய்ப்புகளும் பறிபோகும் என்று மனிதவள ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன. மறுபுறம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியும் வருகின்றன. இதனால், ஏஐ (AI) மற்றும் மெஷின் லேர்னிங் சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
ஏன் ஆன்லைன் மூலமே ஏஐ (AI) மற்றும் மெஷின் லேர்னிங் கோர்ஸ்கள் வந்துவிட்டன. இந்த வாய்ப்பை பயன்படுத்திய ஒரு விவசாயின் மகன் பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் வசித்துவரும் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஜருபுலா பிரேம் குமார். இவர் பிடெக் படிப்பை முடித்துவிட்டு, டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் டெஸ்ட் டேட்டா இன்ஜினியராக (Test Data Engineer) பணியில் சேர்ந்தார்.
இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தும் எதிர்பார்த்த சம்பள உயர்வு அவருக்கு கிடைக்கவில்லை. வேறு வேலைக்கு செல்ல போதுமான அனுபவமும் அவரிடம் இல்லை. ஆனால், அவருக்கு தொழில்நுட்பம் மீதான ஆர்வம் சற்று அதிகம் என்பதால், வளர்ந்துவரும் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் பற்றி அறிந்து வைத்திருந்தார். அதுதொடர்பாக நிறைய வேலைவாய்ப்புகள் இருப்பதையும் தெரிந்துகொண்டார்.
ஆகவே, அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள ஆன்லைனில் நடத்தப்படும் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் கோர்ஸில் சேர்ந்தார். தனது வேலையை சிறப்பாக செய்துவந்த அதே வேளையில் வார இறுதி நாட்களில் ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்தினார். சில மாதங்களுக்கு பின் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங்கில் கற்றுத்தேர்ந்தார். அதன்பின், அதுதொடர்பான வேலைகளுக்கு விண்ணப்பித்து வந்த நிலையில், அவரது திறமை அவருக்கு மிகப்பெரும் வாய்ப்பை பெற்றுத்தந்தது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் டேட்டா இன்ஜினியர் (Data Engineer) வேலை கிடைத்தது. அங்கு அவருக்கும் பல லட்சம் ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் டிசிஎஸ் நிறுவனத்தில் வாங்கிய சம்பளத்தைவிட இங்கு 100 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்பதுதான்.
ஒருவரது விடாமுயற்சியும், எடுக்கும் முடிவுகளும் எவ்வளவு பெரிய இடத்தை பெற்றுத்தரும் என்பதற்கு பிரேம் குமார் எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறார்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








