பேரிடர்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபடும் புதிய பறக்கும் ரோபோ

By Karthikeyan
|
பேரிடர்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபடும் புதிய பறக்கும் ரோபோ

கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய அமெரிக்க கணினி அறிஞரான ஆஸ்டோஸ் சாக்ஸேனா ஒரு புதிய பறக்கும் ரோபோவைக் கண்டுபிடித்திருக்கிறார். இந்த ரோபோ பார்ப்பதற்கு பறவை போன்று மிக அழகாக இருக்கிறது. இந்த ரோபோ இயற்கை இடர்பாடுகளின் போது பறந்து சென்று மீட்பு பணிகளில் அழகாக ஈடுபடும். மேலும் காணாமல் போனவற்றை மிக எளிதாக் கண்டுபிடித்து கொடுக்கும்.

இந்த ரோபோ ஒரு மேசையின் பரப்பு அளவிற்கு இருக்கிறது. காடுகள், மற்றும் கணவாய்கள் மற்றும் இடந்த கட்டிடங்கள் ஆகியவற்றிற்குள் மிக எளிதாக இந்த ரோபோ பறந்து செல்லும் சக்தி கொண்டது என்று சாக்ஸேனா தெரிவித்திருக்கிறார்.

மேலும் ரேடியோ சிக்னல்களுக்கு மனிதர்கள் விரைவாக பதில் கொடுக்க முடியாது. ஆனால் இந்த பறக்கும் ரோபோ மிக வேகமாக பதில் கொடுக்கும் என்ற அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த சாக்ஸேனா கான்பூரில் உள்ள ஐஐடியில் 2004 ஆம் ஆண்டு பிடெக் முடித்தவர். இதற்கு முன் இவர் சாதாரண வீடியோ கேமராவை 3டியாக மாற்றும் முறைகளைக் கண்டுபிடித்தார்.

இந்த பறக்கும் ரோபோ ஏற்கனவே 53 ஆளில்லாத விமானங்களில் வைத்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுவிட்டது. இதில் 51 முறை வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால் இரண்டு முறை மட்டும் பலமானி காற்றின் காரணமாக தோல்விகளைச் சந்தித்தது.

தற்போது இந்த பறக்கும் ரோபோவின் திறனை அதிகரிக்கும் பணிகளில் சாக்ஸேனா மிகத் தீவிரமாக இருக்கிறார். அதாவது காற்று மற்றும் இயற்கை சக்திகளை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்த ரோபோ இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

கடந்த மாதம் போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற உலக கருத்தரங்கில் இந்த பறக்கும் ரோபோவை சாக்ஸேனா அறிமுகம் செய்து வைத்தார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X