டுவிட்டரை தேடுதளமாக மாற்ற ஒருசில டிப்ஸ்கள்

டுவிட்டரை தேடுதளமாக மாற்ற ஒருசில டிப்ஸ்கள்

By Siva
|

சமுக வலைத்தளங்களில் டுவிட்டர் ஒரு சமூக வலைத்தளமாக மட்டுமின்றி கூகுளுக்கு இணையான ஒரு சர்ச் இன்சின் ஆகவும் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆன்லைனில் நிகழ்வுகள், செய்திகள் உள்பட பல்வேறு அம்சங்களை டுவிட்டரில் இருந்து தெரிந்து கொள்ளும் நிலையில் இதில் உள்ள சியர்ச் அம்சங்களை தெரிந்து கொள்வது டுவிட்டரை முழுமையாக புரிந்து கொள்வதற்கு சமம்

டுவிட்டரை தேடுதளமாக மாற்ற ஒருசில டிப்ஸ்கள்

ஏதாவது ஒரு டுவீட்டை நாம் எப்போதாவது பார்த்திருப்போம். அந்த டுவீட்டை மீண்டும் தேடி கண்டுபிடிப்பது என்றால் பலருக்கு எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாது. யாருடைய டுவீட் என்பது ஞாபகம் இருந்தால் பிரச்சனை இல்லை.

உடனே அந்த நபரின் பக்கம் சென்று அந்த டுவீட்டை தேடி கொள்ளலம். ஆனால் ஒருவேளை ஞாபகம் இல்லை என்றால் எப்படி தேடுவது? மிக சுலபம்.

ரூ.999/- மற்றும் ரூ.1500/-க்கு 2 ஜியோ 4ஜி போன்கள் இன்று அறிமுகம்.!?

அந்த டுவீட்டில் உள்ள ஏதாவது ஒரே ஒரு வார்த்தை ஞாபகம் இருந்தால் போதும், அல்லது அந்த டுவீட் பார்த்த தேதி ஞாபகம் இருந்தால் போதும், அந்த டுவீட்டை மிக சுலபமாக தேடி கண்டுபிடித்துவிடலாம்.

அதேபோல் நமக்கு தேவையான எதாவது ஒரு செய்தியோ அல்லது தகவல் குறித்தோ தேட வேண்டும் என்றால் அந்த செய்தி அல்லது தகவலின் வார்த்தையை வைத்து, அதுசம்பந்தமான அனைத்து டுவிட்டுகளையும் பெற்றுவிடலாம்.

டுவிட்டர் அக்கவுண்டுக்கு சென்று வெறுமனே டுவீட் மட்டும் பதிவு செய்துவிட்டு, மற்றவர்களின் டுவீட்டுகளை படித்து விட்டும் வராமல் இதுபோன்ற வசதிகளையும் தெரிந்து வைத்து கொள்வது நலம் பயக்கும்

ஒரு குறிப்பிட்ட வார்த்தையை எப்படி தேடுவது?

ஒரு குறிப்பிட்ட வார்த்தையை எப்படி தேடுவது?

டுவிட்டரில் கூகுளில் இருப்பது போன்றே ஒரு சியர்ச் பாக்ஸ் வலது ஓரத்தில் இருக்கும். இந்த பாக்ஸில் உங்களுக்கு தேவையான வார்த்தையை டைப் செய்தால் போதும். அதுசம்பந்தமான அனைத்து டுவீட்டுக்களும் உங்கள் முன் நிற்கும்

உதாரணமாக 'ஹலோ' மற்றும் 'உலகம்' என்றோ அந்த சியர்ச் பாக்ஸில் டைப் அடித்தால் உடனே இந்த இரண்டு வார்த்தைகளில் உள்ள அனைத்து டுவிட்டுகளும் உங்கள் முன் தோன்றும்.

அதேபோல் ஹே அல்லது வாட்ஸ் அப் என்று சியர்ச் பாக்ஸில் தேடினால் இந்த இரண்டில் எந்த வார்த்தை உள்ள டுவிட்டுக்கள் இருக்கின்றதோ அவை தோன்றும்

அதேபோல் ஹலோ' ஆனால் 'குட் பை' வேண்டாம் என்று சியர்ச் பாக்ஸில் போட்டால், குட்பை இல்லாத ஹலோ டுவீட்டுக்கள் மட்டும் தோன்றும்

ஆச்சரியம்' என்ற ஒரே வார்த்தையை சியர்ச் பாக்ஸில் போட்டால் இந்த வார்த்தைகள் அடங்கிய அத்தனை டுவீட்டுகளும் உங்கள் முன் தோன்றும்.

ஒரு குறிப்பிட்ட நபரை டுவிட்டரில் தேடுவது எப்படி?

ஒரு குறிப்பிட்ட நபரை டுவிட்டரில் தேடுவது எப்படி?

டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளவரோ அல்லது கணக்கு இல்லாதவரோ அவரை பற்றிய டுவிட்டர் அல்லது அவர் பதிவு செய்த டுவிட்டரை தேட வேண்டுமா? கவலை வேண்டாம். அதற்கும் டுவிட்டரில் ஆப்சன் உள்ளது. உதாரணமாக "from: Alia Bhat அலியாப்ட் என்று சியர்ச் பாக்ஸில் போட்டால் அலியாபட் பதிவு செய்த அனைத்து டுவிட்டுக்களை நீங்கள் பார்க்கலாம்.

அதேபோல் '"to: GizBot" என்று சியர்ச் பாக்ஸில் போட்டால் GizBot" டுவிட்டர் அக்கவுண்டுக்கு வந்த அனைத்து டுவிட்டுகளும் தோன்றும். அதேபோல் @GizBot" என்று போட்டால் GizBot பதிவு செய்த டுவீட்டுகள் தோன்றும்

ரூ.11/- முதல் ரூ.9,999/- வரை ஜியோ ப்ரைம் கட்டண திட்டங்கள் என்னென்ன.?ரூ.11/- முதல் ரூ.9,999/- வரை ஜியோ ப்ரைம் கட்டண திட்டங்கள் என்னென்ன.?

ஒரு குறிப்பிட்ட தேதியின் டுவீட்டை எப்படி காண்பது?

ஒரு குறிப்பிட்ட தேதியின் டுவீட்டை எப்படி காண்பது?

"Free Pizza" near:"Koramangala" என்று சியர்ச் பாக்ஸில் பதிவு செய்தால் கோரமங்கலாவில் உள்ள இலவச பீட்சா குறித்த அனைத்து டுவிட்டுகளும் தோன்றும், அதேபோல் ஒரு குறிப்பிட்ட தேதியில் பதிவு செய்த அனைத்து டுவிட்டுக்களும் வேண்டும் என்றால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது அந்த தேதியுடன் ஒருசில வார்த்தைகள். உதாரணமாக 09.09.1994 அன்று பதிவு செய்த டுவிட்டுகள் அனைத்தும் உங்களுக்கு தேவையென்றால் உடனே "Single since:1994-09-19"

என்று சியர்ச் பாக்ஸில் போட்டால் போதும்

என்ன வாசகர்களே டுவிட்டரில் இவ்வளவு வசதி இருக்கின்றது என்பதை பார்த்து ஆச்சரியம் அடைகிறீர்களா? உடனே உங்கள் டுவிட்டர் அக்கவுண்டை ஓப்பன் செய்து இதை செய்து பாருங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Missing out on information owing to cluttered Twitter feed? These handy tips will help you search for a particular information like an expert. Keep reading to know more about them.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X