பேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.!

மென் பொருளில் ஏற்பட்ட சிக்கலால் முகநூல் பயனாளர்கள் தங்களுடைய மெசேஞ்சரில் தடுத்து வைத்திருந்த (blocked) நபர்களின் தொடர்புகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டன (Unblocked).

|

தொழில்நுட்பக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்கள்! தேவையற்ற தகவல்களின் வருகையாலும் மறைக்கப்பட்ட பதிவுகள் வெளியானதாலும் தவிப்பு!

பேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.!

கேம்பிரிட்ஜ் அனலிடிகா (Cambridge Analytica) விவகாரம் அமெரிக்காவில் புயலைக் கிளப்ப, புதிய தகவல் பாதுகாப்புச் சட்டத்தால் (GDPR – General Data protection Regulatio) ஐரோப்பாவில் அணல் அடிக்க, இந்த இரண்டிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது சமூக இணைய ஊடகத் துறையில் முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம்தான். அடி மேல் அடி விழுந்து ஆடிப் போயிருக்கும் இந்நிறுவனத்திற்கு மேலும் புதுசு புதுசா சிக்கல்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் ஃபேஸ்புக் ஊடகத்தில் நுழைந்த வைரஸால் இலட்சக் கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பளிச்சென வெளி வரத் தொடங்கின

பளிச்சென வெளி வரத் தொடங்கின

மென் பொருளில் ஏற்பட்ட சிக்கலால் முகநூல் பயனாளர்கள் தங்களுடைய மெசேஞ்சரில் தடுத்து வைத்திருந்த (blocked) நபர்களின் தொடர்புகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டன (Unblocked). இதனால் பயனாளர்களுக்குத் தேவையில்லாத தகவல்களும், பதிவுகளும் உள் வரத்தொடங்கின. அது மட்டுமல்லாமல் பயனாளர்கள் தங்களுடைய தளத்தில் மறைத்து (hide) வைத்திருந்த பதிவுகள் பார்வைக்கு பளிச்சென வெளி வரத் தொடங்கின.

8,00,000 பயனாளர்கள்

8,00,000 பயனாளர்கள்

முகநூல் பக்கத்தில் எற்பட்ட இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 8,00,000 பயனாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. சமீப காலமாகத் தகவல் பாதுகாப்புத் தொடர்பாகப் பல சிக்கல்களில் சிக்கிக் கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மேலும் ஒரு புது சிக்கலாக இது தோன்றியுள்ளது.

எரின் எகன்

எரின் எகன்


" தேவையில்லாத தொடர்புகளைத் துண்டித்து வைத்தல் அல்லது தடுத்து வைத்தல் என்பது மிகவும் முக்கியமானது. இதில் சிக்கல் ஏற்பட்டதற்காக எங்கள் நிறுவனம் மிகவும் வருந்துகிறது. அதே வேளையில் அதற்கான காரணத்தை விளக்கவும் நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம்." எனக் கூறுகிறார் ஃபேஸ்புக் நிறுவனத் தகவல் பாதுகாப்பு முதன்மை அதிகாரி எரின் எகன் (Erin Egan).

மெசேஞ்சரில் உரையாடவும் முடியாது

மெசேஞ்சரில் உரையாடவும் முடியாது

முகநூலில் நம்மோடு தொடா்புடைய நபர்களுள் யாருடைய தொடா்பாவது தேவையில்லை எனக் கருதினால் அவர்களுடைய தொடர்பைத் தடுத்து வைத்துக் கொள்ளலாம். அப்படி நம்மால் தடுத்து வைக்கப்பட்ட நபர் நம்முடைய முகநூல் பதிவுகளைப் பார்வையிட முடியாது. மெசேஞ்சரில் உரையாடவும் முடியாது. ஆனால் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 5 தேதி வரையிலான காலப் பகுதியில் முகநூலில் உள்ள இத்தகைய பாதுகாப்பு அமசத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டது. மென் பொருளில் ஏற்பட்ட பாதிப்பு அல்லது வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பால் முகநூலில் நம்மால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்கள், தடுப்பை மீறி நம்முடைய பக்கத்திற்குள் நுழையக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. நம்மோடு தொடர்பில் உள்ளவர்களிடம் நாம் பகிர்ந்து கொண்ட தகவல்களைப் பார்வையிடவும், வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்ட நம்மிடமே உரையாடவும் நம்மால் தடுத்து வைக்கப்பட்ட அத்தகைய நபர்களால் முடிந்தது.

blocked list

blocked list

பெரும்பாலான இடங்களில் பயனாளர்களின் தடுத்து வைக்கப்பட்டோரின் (blocked list) பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு நபர் மட்டுமே பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் ( unblocked). பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு இந்த பாதிப்பு தொடர்பான அறிவிக்கையை முகநூல் நிறுவனம் அனுப்பியுள்ளது. பயனாளர்கள், தங்களால் தடுத்து வைக்கப்பட்ட தொடர்புகளின் பட்டியலை சோதித்துப் பார்த்து அந்தப் பட்டியலில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என இந்த அறிவிப்பின் மூலம் முகநூல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
A Facebook bug briefly unblocked people, inviting unwelcome messages and exposing hidden posts: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X