புதிதாக வாங்கிய ஸ்மார்ட்போனில் பிரச்சனை: ஷோரூம் முன்பு போனை கொளுத்தினார் வாடிக்கையாளர்.!
இதனால் ஆத்திரம் அடைந்த செல்போன் வாடிக்கையாளர், தான் வாங்கிய புதிய செல்போனை ஷோரூமிற்கு முன்பு தரையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்
சென்னை குரோம்பேட்டையில் பிரபல தனியார் ஷேதரூமில் வாங்கிய ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்யவில்லை என்று அதனை வாடிக்கையாளர் தீ வைத்து ஏரித்தார், தற்சமயம் இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக
பரவி வருகிறது.

குரோம்பேட்டையில் இருக்கும் தனியார் செல்போன் ஷோரூமில் தலைமலை என்பர் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார். புதிதாக வாங்கிய அந்த ஸ்மார்ட்போன் சரியாக இயங்காததால், அதுகுறித்து ஷோரூம் மேலாளரிடம்
கேட்டுள்ளார்.

ஆனால் அந்த ஷோரூம் மேலாளர் உரிய பதில் அளிக்கமால் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது, மேலும் இதனை தொடர்ந்து சர்வீஸ் செண்டர் மற்றும் செல்போன் தயாரிப்பு கம்பெனியை தாங்கள் அணுகவேண்டும் என்று
வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்போன் வாடிக்கையாளர், தான் வாங்கிய புதிய செல்போனை ஷோரூமிற்கு முன்பு தரையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார், இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் ரூ.399-விலையில் ஹாட்ஸ்பாட்! ஏர்டெல் அதிரடி.!
ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் தற்போது ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் தற்போது வெறும் ரூ 399 - க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வயர்லெஸ்
மேலும் இந்த வயர்லெஸ் சாதனத்தை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்ததை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்
ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6மணி நேரத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும் 4ஜி வேகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்
4ஜி இல்லாத இடங்களில் தானகவே 3ஜி நெட்வொர்க்கிற்கு மாறி தன்னுடைய இணைய சேவையை தொய்வின்றி ஏர்டெல் ஹாட்ஸ்பாட் வழங்கும். மேலும் டேட்டா பேக் மூலமாக வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு 50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்.

80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும்
பின்பு கொடுக்கப்பட்ட டேட்டாவிற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் 80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஹாட்ஸ்பாட்
இருந்தபோதிலும் ஜியோ ஹாட்ஸ்பாட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவிலான டிவைஸ்களை மட்டுமே இதன் மூலம் இயக்க முடியும். குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்பாட் ஒரே நேரத்தில் சுமார் 31 டிவைஸ்களுக்கு இணைய வசதியை தரலாம். அதே போன்று 4ஜி டிவைஸ்கள் மட்டுமே இதில் பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications