ஒரு கூடை ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஆப்பிள் ஐபோன்.. நிறுவனம் தெரிந்தே செய்த வேலை..ஏன் தெரியுமா?

|

தென்மேற்கு லண்டனில் உள்ள ட்விக்கன்ஹாம் என்ற பகுதியில் வசிக்கும் 50 வயது நபர் டெஸ்கோவில் இருந்து ஒரு கூடை ஆப்பிள் பழத்தை ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பையில் புதிய ஐபோன் SE இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயமே, இந்த புதிய ஐபோன் நிறுவனத்தின் கவனக்குறைவால் மாற்றி அனுப்பப்படவில்லை, தெரிந்தே அனுப்பப்பட்டது என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயமே.

தெரிந்தே ஏன் ஒரு நிறுவனம் இப்படி ஒரு தவறை செய்ய வேண்டும்?

தெரிந்தே ஏன் ஒரு நிறுவனம் இப்படி ஒரு தவறை செய்ய வேண்டும்?

தெரிந்தே ஏன் ஒரு நிறுவனம் ஒரு கூடை ஆப்பிள் பழத்தின் விலைக்கு ஒரு புதிய ஆப்பிள் ஐபோனை வழங்கவேண்டும் என்பது தானே இப்போது உங்களுடைய கேள்வி? வாருங்கள் பதிலை சொல்கிறோம். முன்பே சொன்னது போல இது சூப்பர் மார்க்கெட்டின் ஆப்பிள் பெயரின் அடிப்படையிலான குளறுபடி அல்ல, இது ஒரு 'சூப்பர் சப்ஸ்டியுட் ' விளம்பரத்தின் ஒரு பகுதியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆர்டர் செய்த ஆப்பிள் பழங்களும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பையில் ஒரு

பையில் ஒரு "ஆச்சரியம்" இருப்பதாக சொன்ன ஊழியர்

50 வயதான நிக் ஜேம்ஸ் தனது ஆர்டரை இங்கிலாந்தின் ட்விக்கன்ஹாமில் உள்ள உள்ளூர் டெஸ்கோ எக்ஸ்ட்ராவிலிருந்து சேகரித்தபோது, ​​அவரது பையில் ஒரு "ஆச்சரியம்" இருப்பதாக டெஸ்கோ ஊழியர்கள் சொன்னபோது, அவர் ஆர்டர் செய்த ஆப்பிள் பையை திறந்து பார்த்துள்ளார். அதில் தனக்கு இலவச ஐபோன் எஸ்.இ. கிடைத்திருப்பதைக் கண்டு ஜேம்ஸ் திகைத்துப் போனார்.

என் பொண்டாட்டிக்கு 'இது' தெரிஞ்சா சோழி முடிஞ்சிரும்.. ப்ளீஸ் சொல்லாதீங்க என்று கெஞ்சிய கணவர்.. ஏன் தெரியுமா?என் பொண்டாட்டிக்கு 'இது' தெரிஞ்சா சோழி முடிஞ்சிரும்.. ப்ளீஸ் சொல்லாதீங்க என்று கெஞ்சிய கணவர்.. ஏன் தெரியுமா?

ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்தேன்.. புதிய ஆப்பிள் ஐபோன் கிடைத்தது

ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்தேன்.. புதிய ஆப்பிள் ஐபோன் கிடைத்தது

"இந்த வாரம் டெஸ்கோ மற்றும் டெஸ்கோ மொபைலுக்கு ஒரு பெரிய நன்றி. புதன்கிழமை மாலை நாங்கள் எங்கள் கிளிக் மற்றும் ஆர்டரை சேகரிக்கச் சென்றோம், அங்கே ஒரு சிறிய ஆச்சரியம் இருந்தது, வெளிப்படையாக நாங்கள் ஆப்பிள்களை ஆர்டர் செய்தோம், ஆனால் தோராயமாக ஒரு புதிய ஆப்பிள் ஐபோன் கிடைத்தது! அதை என் மகனுக்கு வழங்கினேன்" என்று ஜேம்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

"சூப்பர் சப்ஸ்டியுட்" விளம்பர சலுகை

"நான் அவர் ஆச்சரியம் காத்திருக்கிறது என்று கூறியதும், ஒரு ஈஸ்டர் முட்டை அல்லது ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அதில் ஆப்பிள் ஐபோன் கிடைத்தது. டெஸ்கோ மொபைல் இந்த வாரம் "சூப்பர் சப்ஸ்டியுட்" விளம்பரத்தின் ஒரு பகுதியாக இலவச ஆப்பிள் ஐபோன்கள், ஏர்போட்கள் மற்றும் சாம்சங் டேப் சாதனங்களை வழங்கி வருகிறது. இந்த விளம்பர சலுகை வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது, நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

லாண்டரி டேப்லெட் ஆர்டர் செய்தவருக்கு சாம்சங் டேப்லெட்டா?

லாண்டரி டேப்லெட் ஆர்டர் செய்தவருக்கு சாம்சங் டேப்லெட்டா?

சிறந்த தொழில்நுட்ப தயாரிப்பைப் பெறுவதற்கு டெஸ்கோ தோராயமாகப் பயனர்களை கிளிக் செய்து அவர்களுக்கு இப்படி இன்ப அதிர்ச்சியை வழங்கி வருகிறது. உதாரணத்திற்கு, ஆப்பிள் பையை ஆர்டர் செய்தவருக்கு ஆப்பிள் ஐபோனை வழங்கியுள்ளது. டெஸ்கோ லாண்டரி டேப்லெட் ஆர்டர் செய்தவருக்கு புதிய சாம்சங் கேலக்ஸி டேப் 7 சாதனத்தை வழங்கியுள்ளது.

80 பொருட்களை வழங்கும் நிறுவனம்

80 பொருட்களை வழங்கும் நிறுவனம்

டெஸ்கோ இந்த சலுகையை ஏப்ரல் 18 வரை நடத்துகிறது. இந்த சலுகையின் கீழ் 80 பொருட்களை வழங்கி வருகிறது.

அதேபோல், ஜேம்ஸ் ஆர்டர் செய்த ஆப்பிள் பையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
A 50 Year Old Man Ordered a Bag Of Apples From Tesco And Received An iPhone SE : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X