Home
News

செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதில் 12 வயது சிறுவன் பலி.!

இப்போது வரும் புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகின்றன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களுடன் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் உட்பட பல்வேறு ஆதரவுகள் கிடைக்கிறது. ஆனாலும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதில் அதிக கவனம் தேவை. குறிப்பாக ஒரு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதிலும் அதிக கவனமுடன் இருக்க
வேண்டும்.

 உத்தரபிரதேசம் மாநிலம்

உத்தரபிரதேசம் மாநிலம்

இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் மொபைல் போனின் பேட்டரி வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பெரியவர்கள் வரை

இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனுடனே தினமும் பொழுதை கழித்து வருகின்றனர். அதிலும் சிலர் செல்போனில் பேட்டரி இல்லையென்ற போதிலும் சார்ஜ் செய்து கொண்டே போன் பேசுவது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நம்மில் பலர் இதுபோன்ற

மேலும் இதுபோன்று சார்ஜ் செய்துகொண்டே போன் பேசும்போது செல்போன் வெடித்த செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனாலும் நம்மில் பலர் இதுபோன்ற விஷயங்களை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

jadoo என்ற சார்ஜர்

அண்மையில் உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் வசித்து வந்த 12 வயது சிறுவன் செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதில் உயிரிழந்தாக கூறப்படுகிறது. மிர்சாபூர் பகுதியில் ஆறாவது படிக்கும் மோனு jadoo என்ற சார்ஜர் மூலம் தனது செல்போனை சார்ஜ் செய்துள்ளான்.

 அந்த சார்ஜரை தொட்டுள்ளார்

சரியாக ஒரு மணி நேரம் கடந்த பின்பு செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் ஆகிவிட்டதா என்பதை பார்ப்பதற்காக அந்த சார்ஜரை தொட்டுள்ளான் சிறுவன். அந்தசமயம் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியதில் சிறுவனின் முகம் கிழிந்து ரத்தம் கொட்டியதாக கூறப்படுகிறது.

கேட்டு சிறுவனின் அறைக்கு

மேலும் பெரிய சத்தம் கேட்டு சிறுவனின் அறைக்கு வந்தவர்கள் பார்த்தபொழுது முகம் முழுவதிலும் ரத்தம் உறைய சிறுவன் மயங்கி கிடந்துள்ளான். உடனே சிறுவனை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றனர். இருந்தபோதிலும் அவன் இறந்து விட்டததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்டரி அல்லது சார்ஜர்

அதன்பின்பு போலீசாருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் சிறுவன் மோனுவின் உடலை உறவினர்கள் தகனம் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பேட்டரி அல்லது சார்ஜர் பழுதாகிவிட்டால், போலி தயாரிப்புகளை வாங்காமல் விலை கூடுதலாக இருந்தாலும் தரமான மற்றும் நிறுவனத்தின் ஒரிஜனல் பேட்டரி மற்றும் சார்ஜர்களை வாங்குவது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
A 12-year-old boy has died after his cellphone battery exploded: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X