ரூ.10ஆயிரம் அரசு உதவித்தொகை கொடுத்து மறைக்கப்படும் அப்துல் கலாமின் இளம் விதைகள்.!

நாமக்கல்லைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் விக்னேஷ்வர், மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் வாகனத்தை உருவாக்கியுள்ளார்.

|

நாமக்கல்லைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் விக்னேஷ்வர், மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் வாகனத்தை உருவாக்கியுள்ளார். இந்த புதிய கண்டுபிடிப்புக்கு அனைவரும் விங்கேஷ்வரை பாராட்டி வருகின்றனர்.

9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் விக்னேஸ்வர்

9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் விக்னேஸ்வர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளைய அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 9 ஆம் வகுப்பு பிடித்து வரும் மாணவன் விக்னேஸ்வர். இவர் தனது படிப்பிற்கு இடையில் கிடைக்கும் நேரத்தைப் பயனுள்ளதாய் மாற்றிக்கொள்ள, மிதிவண்டியை மோட்டார் வாகனமாக மாற்றும் முயற்சியில் களமிறங்கி தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார்.

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய மோட்டார் வாகனம்

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய மோட்டார் வாகனம்

சுற்றுப்புறச்சூழலை மாசு படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல்களை தவிர்த்து சூரிய சக்தியால் இயங்கக்கூடிய மோட்டார் வாகனத்தை உருவாக்கியுள்ளார். பள்ளி மாணவருக்கு மோட்டார் வாகனம் கிடைக்காததினால் தனது மிதிவண்டியையே மோட்டார் வாகனமா மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகம்

மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகம்

இவர் உருவாகியுள்ள மிதிவண்டி மோட்டார் வேகம் முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த மோட்டார் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்

50 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்

இந்த வாகனத்தை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், அதேபோல் 7 முதல் 8 மணி நேரம் வரை சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியுமென்று மாணவன் தெரிவித்துள்ளார்.

 பள்ளி தாளாளர் கூறியது

பள்ளி தாளாளர் கூறியது

மாணவனின் இந்த முயற்சியை பாராட்டி தமிழக அரசு அவருக்கு ரூ.10,000 வழங்கியுள்ளது. அண்மையில் இதுபோன்ற பல இளம் சாதனையாளர்களுக்கு பணத்தை மட்டும் கொடுத்து அரசாங்கமே இளம் விதைகளின் வளர்ச்சியை தடுத்துவருகிறது. இதற்கு பதிலாக இந்த இளம் அப்துல்கலாம்களுக்கு வேறேதேனும் விருது வழங்கி பாராட்டலாமே. அதேபோல் இன்ஸ்பையர் விருதிற்காக இந்த மாணவனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று பள்ளி தாளாளர் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
9th standard school boy created solar motor cycle : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X