சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்

|

இந்தியாவில் விற்கப்படும் மொபைல் விற்பனை சந்தையில் சியோமி நிறுவனத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. சீன தயாரிப்பு நிறுவனமான சியோமி, இந்திய சந்தையில் தங்களை தக்கவைக்கும் நோக்கில் அவ்வப்போது புது மாடல் மொபைல்லை அறிமுகப்படுத்துவது வழக்கம். சியோமி நிறுவனமானது ரெட்மி, எம்.ஐ, போக்கோ ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்திாயாவில் உள்ள தொழிற்சாலைகள்

இந்திாயாவில் உள்ள தொழிற்சாலைகள்

சீன தயாரிப்பு நிறுவனமான சியோமி, இந்தியாவில் தான் அதிகப்படியான மொபைல்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில், சியோமி இந்தியாவின் இரண்டு பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒன்று, ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியிலும் தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரிலும் தயாரிக்கப்படுகின்றன.

99% இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது

99% இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது

இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் ஸ்ரீசிட்டியில், இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி முரளிகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 99% மொபைல்கள் இங்குதான்
தயாரிக்கப்படுகின்றன என தெரிவித்தார். இதன்மூலம் வரிகள் குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி

இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி

இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். இந்த இரு நாடுகளுக்கும் குறைந்த அளவிலான ஏற்றுமதியை தொடங்கியுள்ளதாக முரளி கிருஷ்ணன் கூறினார்.

 ஏற்றுமதியில் சிக்கல்களை சந்திக்கிறோம்

ஏற்றுமதியில் சிக்கல்களை சந்திக்கிறோம்

இந்தியாவின் தயாரிப்புகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறினார். குறிப்பாக, இந்தியாவில் வழங்கப்படும் பிஎஸ்ஐ சான்றிதழ் பல நாடுகளில் ஏற்கப்படுவதில்லை எனவும் அரசு பிஎஸ்ஐ சான்றிதழை சர்வதேச அளவில் ஏற்கும் விதமாக அனுமதி பெற்றால். இந்திய ஏற்றுமதிக்கு நல்ல மதிப்பு கிடைக்கும் என கூறினார். மேலும், இப்படி செய்வதன்மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம் என தெரிவித்தார்.

தனித்துவமான முன்னேற்றம அடைந்த இந்தியா

தனித்துவமான முன்னேற்றம அடைந்த இந்தியா

உற்பத்தியை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா தனித்துவமான முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் ஊக்கமளிக்கும் விதமான செயல்களை இந்தியா வியட்நாமில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம் என கூறினார்.

அனைத்து ஆபரேட்டர்களும் பெண்கள்தான்

அனைத்து ஆபரேட்டர்களும் பெண்கள்தான்

மேலும் இதில் குறிப்பிடத்தக்க வகையில், ஆந்திரா, ஸ்ரீ சிட்டி தொழிற்சாலையில் அனைத்து ஆபரேட்டர்களும் பெண்கள் என கூறினார். இதில் 15,000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

Best Mobiles in India

Read more about:
English summary
99 percent of Xiaomi phones sold in india are made in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X