90% ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு 'இந்த' நோய் இருப்பது உறுதி..!

|

ஸ்மார்ட்போன் என்பது பதினோறவது விரல் போல் ஆகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இரவு பகலாய் நமது கையோடு ஸ்மார்ட்போன்கள் ஒட்டியே கிடக்கின்றன. அதனால் ஏகப்பட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த விடயமே.

அந்த வரிசையில் தற்போது புதிதாய் இணைந்துள்ள நோய் தான் - பான்டோம் வைப்ரேஷன் சின்ட்ரோம் (Phantom Vibration Syndrome)..!

வைப்ரேட் :

வைப்ரேட் :

உங்களது மொபைல் போன் ஆனது வைப்ரேட் ஆகுவது போல் நீங்கள் உணர்வீர்கள் ஆனால், உங்கள் போன் வைப்ரேட் ஆகியே இருக்காது. நிகழாத அந்த உணர்வே - பான்டோம் வைப்ரேஷன் சின்ட்ரோம்.

ரிங்கிங் சின்ட்ரோம் :

ரிங்கிங் சின்ட்ரோம் :

பான்டோம் வைப்ரேஷன் சின்ட்ரோம்தனை, ரிங்கிங் சின்ட்ரோம் (Ringing syndrome) என்றும் கூறலாம்.

உடல் பழக்கம் :

உடல் பழக்கம் :

இந்த பிரமை நிகழ்வானது "கற்றுக்கொண்ட உடல் பழக்கம்" (learned bodily habits) மூலம் ஏற்படுகிறது என்று தத்துவவாதி மற்றும் ஜோர்ஜியா தொழில்நுட்ப உதவி பேராசிரியரான டாக்டர் ராபர்ட் ரோசேன்பெர்கர் விளக்கியுள்ளார்.

தெளிவுரை :

தெளிவுரை :

இந்த ஆய்வு சார்ந்த தெளிவுரையானது, கம்ப்யூட்டர்ஸ் இன் ஹியூமன் பிஹேவியர் (Computers in Human Behaviour journal) என்ற இதழில் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகுதி :

பகுதி :

ஒருவர் கண் கண்ணாடி அணிந்து கொள்வது போன்றே தான் பாக்கெட்டில் வைக்கப்படும் மொபைல் போன் ஆனது உடலில் ஒரு பகுதியாக ஆகிறது. அதுமட்டுமின்றி மொபைல் போன் ஆனது உடலின் ஒரு பகுதி இல்லை என்பதும் மறக்கப்படுகிறது.

இயக்கம் :

இயக்கம் :

அப்படியாக தசை பிடிப்பு அல்லது உடலோடு நடக்கும் ஆடை இயக்கம் போன்ற மற்ற உணர்வுககளை நாம் மொபைல் போன் வைப்ரேட் ஆகுவது போல் மாயத்தோற்றம் ஒன்றை உருவக்கிறது என்றும் டாக்டர் ராபர்ட் ரோசேன்பெர்கர் விளக்கியுள்ளார்.

90% பேர் :

90% பேர் :

மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட இளநிலை ஆய்வு ஒன்றில் 90% பேர் இந்த (பான்டோம் வைப்ரேஷன் சின்ட்ரோம்) மறைமுக அதிர்வுகளை அனுபவித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனரீதியான சிக்கல் :

மனரீதியான சிக்கல் :

யாரெல்லாம் நவீனகால தொழில்நுட்ப கருவிகளின் மீது அதிக ஆர்வத்தில் இருக்கின்றனரோ, அவர்களெல்லாம் இது போன்ற மனரீதியான சிக்கல்களின் விளிம்பில் இருக்கிறார்கள் என்று டாக்டர் ராபர்ட் எச்சரித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மாய உணர்வு :

மாய உணர்வு :

நாம் மிகவும் மிரண்டு போன அல்லது பரபரப்பாக உள்ள நேரங்களில் பாக்கெட்டில் உள்ள மொபைல் வைப்ரேட் ஆகுவது போல் தோன்றும் மாய உணர்வானது இன்னும் எளிமையாக நடக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>ஆன்லைனில் சொத்து வரி செலுத்துவது எப்படி??</strong>ஆன்லைனில் சொத்து வரி செலுத்துவது எப்படி??

<strong>ஸ்மார்ட்போனில் ஸ்பீக்கர் தொல்லை : சரி செய்வது எப்படி??</strong>ஸ்மார்ட்போனில் ஸ்பீக்கர் தொல்லை : சரி செய்வது எப்படி??

சாதாரண ஸ்கிரீனினை டச் ஸ்கிரீனாக மாற்றுவது எப்படி??சாதாரண ஸ்கிரீனினை டச் ஸ்கிரீனாக மாற்றுவது எப்படி??

<strong>விண்டோஸ் 10 ரீஸ்டார்ட் பிரச்சனை : சரி செய்வது எப்படி?? </strong>விண்டோஸ் 10 ரீஸ்டார்ட் பிரச்சனை : சரி செய்வது எப்படி??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
90% of smartphone users suffer from this syndrome. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X