Home
News

தினசரி 2.5GB டேட்டா, 90 நாட்கள் வேலிடிட்டி: இந்த இரண்டு Jio ப்ரீபெய்ட் திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க.!

ஜியோ நிறுவனம் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஜியோ தனது 5ஜி சேவையை கொண்டுவந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 2 ப்ரீபெய்ட் திட்டங்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த இரண்டு திட்டங்கள் என்னென்ன? அந்த திட்டங்கள் வழங்கும் நன்மைகள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

90 நாட்கள் வேலிடிட்டி:இந்த 2 Jio ப்ரீபெய்ட் திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க

ஜியோ ரூ.749 திட்டம் ஆனது 90 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா என மொத்தம் 180 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ அன்லிமிடெட் டேட்டாவை இந்த திட்டத்தில் வழங்குகிறது. தினசரி வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும்.

இந்த ஜியோ ரூ.749 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் ஆகியவை அடங்கும். ஜியோ பயன்பாடுகளின் நன்மைகள் குறித்து பார்க்கையில், அது JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்டவைகள் ஆகும்.

90 நாட்கள் வேலிடிட்டி:இந்த 2 Jio ப்ரீபெய்ட் திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க

ஜியோ ரூ.899 திட்டம் ஆனது 90 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா என மொத்தம் 225 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ அன்லிமிடெட் டேட்டாவை இந்த திட்டத்தில் வழங்குகிறது. தினசரி வழங்கப்படும் 2.5ஜிபி டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும்.

இந்த ஜியோ ரூ.899 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் ஆகியவை அடங்கும். ஜியோ பயன்பாடுகளின் நன்மைகள் குறித்து பார்க்கையில், அது JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்டவைகள் ஆகும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

ஜியோ ரூ. 299 திட்டம்: இந்த திட்டம் உங்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வெறும் 299 ரூபாய் விலையில் வழங்குகிறது ஜியோ. இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS நன்மைகளுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. கூடுதல் இலவச நன்மைகளாக இத்துடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds நன்மைகள் கிடைக்கிறது.

90 நாட்கள் வேலிடிட்டி:இந்த 2 Jio ப்ரீபெய்ட் திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க

ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் மொத்த டேட்டா பலன் 75 ஜிபி ஆகும். இந்தத் திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மைகளையும், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. இது 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

ஜியோ ரூ.2023 திட்டமானது 252 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மொத்தமாக இந்த திட்டமானது மொத்தம் 630ஜிபி டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பாராட்டு சந்தா என அனைத்து நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
90 days validity are two Jio prepaid plans that offer more data benefits : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X