யார் சாமி இவன்.. 90 நாட்களுக்கு நன்மைகள்.. ஆனால் விலை ரூ.170 தான்.. Vodafone-ன் வெறியாட்டம்!
வோடபோன் ஐடியாவிடம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகளை பற்றி அறிந்தால்.. "என்னடா இவன் இப்படி இறங்கிட்டான்?" என்று முகேஷ் அம்பானிக்குள் ஒரு மைண்ட் வாய்ஸ் எழுந்தாலும் கூட.. அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை! அதென்ன திட்டம்? இதோ விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல்லுக்கு (Bharthi Airtel) அடுத்தபடியாக, நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vodafone Idea ), அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ரூ.169 மதிப்பிலான ஒரு திட்டத்தை (Rs.169 Prepaid Plan) வழங்குகிறது.

வோடாபோனின் இந்த ரூ.169 திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தின் ரீசார்ஜ் வேலிடிட்டி 30 நாட்கள் (30 Days Validity) தான். ஆனால் இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை (Disney Plus Hotstar Mobile Subscription) முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
இதற்கென 30 நாட்கள் என்கிற ஸ்டாண்ட்அலோன் வேலிடிட்டி (Standalone Validity) இருந்தாலும் கூட, இதுவொரு டேட்டா பிளான் (Data Plan) ஆகும். அதாவது உங்களுடைய மெயின் ரீசார்ஜிற்கு மேலே கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டமாகும். ரீசார்ஜ் செய்ததில் இருந்து 30 நாட்களுக்கு பிறகு, உங்களுடைய மெயின் ரீசார்ஜ் ஆனது ஆக்டிவ் ஆக இருந்தாலும் கூட இந்த டேட்டா பிளான் காலாவதியாகிவிடும்; கூடவே பயன்படுத்தப்படாத நன்மைகளும் காலாவதியாகிவிடும்.

டேட்டா நன்மையை பொறுத்தவரை இது 8ஜிபி மொத்த டேட்டாவை (8GB Total Data) வழங்கும். 8ஜிபி என்பது மிகவும் குறைவான டேட்டா நன்மை என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கு எக்ஸ்ட்ரா டேட்டா தேவைப்படும் போது, ரூ.169 ரீசார்ஜ் ஆனது நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்காது. இருப்பினும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நன்மையுடன் சேர்த்து 8ஜிபி டேட்டாவை பெற விரும்பினால், இது நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்துடன் இணைந்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவானது மொத்தம் 3 மாதங்கள் அல்லது 90 நாட்களுக்கு ஆக்டிவ் ஆக இருக்கும். ஒருவேளை நீங்கள் ஓடிடி நன்மையை விரும்பவில்லை, மாறாக எக்ஸ்ரா டேட்டா மட்டுமே தேவை என்றால்.. நீங்கள் வோடாபோன் ஐடியாவின் ரூ.98 திட்டத்தை (Vodafone Idea Rs.98 Plan) ரீசார்ஜ் செய்யலாம்.

வோடாபோன் ஐடியாவிடம் பல டேட்டா பிளான்கள் இருந்தாலும், ரூ.98 திட்டத்தை நாங்கள் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம், இது 9ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது ரூ.169 திட்டத்தின் நீங்கள் பெறும் டேட்டாவை விட 1ஜிபி அதிகமாக கிடைக்கும். ரூ.98 திட்டத்தின் வேலிடிட்டியை பொறுத்தவரை, இது 21 நாட்கள் செல்லுபடியாகும்.
இன்னும் மலிவான விலைக்கு.. இன்னும் குறைவான வேலிடிட்டி வேண்டும் என்றால், 7 நாட்களுக்கு 6ஜிபி டேட்டாவுடன் வரும் ரூ.75 திட்டத்தை (Vodafone Idea Rs.75 Plan) ரீசார்ஜ் செய்யலாம். தற்போதுஇந்த திட்டத்தின் கீழ் கூடுதல் டேட்டா ஆபர் அணுக கிடைக்கிறது. ரூ.75 திட்டத்தை, ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு டிவைஸ்களிலும் அணுக கிடைக்கும் விஐ-யின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் (Vi App) மூலம் ரீசார்ஜ் செய்தால், 1.5ஜி அளவிலான போனஸ் டேட்டா இலவசமாக கிடைக்கும்.
5ஜி சேவைகளை (5G Service) இன்னும் அறிமுகம் செய்யாததாலும், நீடித்துக்கொண்டே போகும் நிதி சிக்கல்கள் காரணமாகவும் வோடபோன் ஐடியா நிறுவனமானது தொடர்ச்சியான முறையில் சந்தாதாரர்களை இழந்து வருகிறது. டிராய் (TRAI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் 2023-ல், 1.36 மில்லியன் சந்தாதாரர்களை இழந்ததுள்ளது. இதன் விளைவாக விஐ-யின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 223.04 மில்லியனாக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications