'அதுல' மட்டும் தான் அம்மா போட்டோ இருக்கு: தாயை பறிகொடுத்த 9-வயது சிறுமியின் கோரிக்கை.!

|

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை உச்சக்கட்டமாக ஒரு நாளில் 4 லட்சத்துக்கு மேலாக பல நாட்கள் பதிவாகின. மேலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.

 வூஹான் நகரிலிருந்து பரவத்

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கியாதாகக் கூறப்படும் இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்சமயம் இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலையின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது.

முதல் அலையின்போது கொரோனா

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள்,இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

ரூ. 8,999 விலையில் புது ஸ்மார்ட் டிவி வேண்டுமா? அப்போ இதை உடனே பண்ணுங்க..ரூ. 8,999 விலையில் புது ஸ்மார்ட் டிவி வேண்டுமா? அப்போ இதை உடனே பண்ணுங்க..

தனது தாயை இழந்த

இந்நிலையில் கொரோனவால் தனது தாயை இழந்த ஒன்பது வயது சிறுமி குடகு மாவட்ட அதிகாரிகளிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது மற்றவர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

குடகு மாவட்டத்தின்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தின் குஷால்நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ஹிரிதிக்‌ஷா. 4ம் வகுப்பு படித்து வரும் இந்த ஹிரிதிக்‌ஷா தான் வேண்டுகோளைவிடுத்துள்ளார். அதாவது கொரோனாவால் உயிரிழந்த தனது தாயின் மொபைல் போன், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது காணாமல் போய்விட்டதாகவும், அதில் தனது தாயின் புகைப்படங்கள்,வீடியோக்கள் என ஏராளமான நினைவுகள் அடங்கியிருப்பதால் தயவு செய்து கண்டுபிடித்து தருமாறு கோரி காவல்நிலையத்தில்ஹிரிதிக்‌ஷா மணு கொடுத்துள்ளார்.

அம்மாவின் நினைவுகளை கொண்டுள்ளது

மேலும் மாவட்ட துணை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர், தனது தாய் இறந்த மருத்துவமணை ஊழியர்கள் போன்றோர்களுக்கு சிறுமி இது தொடர்பாக வீடியோ மூலம் கோரிக்கையும் விடுத்துள்ளார். அதில் எனது தாயின் செல்போனை கண்டுபிடித்து திருப்பித் தரவும், அதில் எனது தாய் மற்றும் என் குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளது. அது மட்டுமே என் அம்மாவின் நினைவுகளை கொண்டுள்ளது என்று கூறியிருக்கிறார் அந்த சிறுமி.

பெற்றோர்களான

ஹிரிதிக்‌ஷா மற்றும் அவரது பெற்றோர்களான பிரபா மற்றும் நவீன் குமார் ஆகிய மூவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஹிரிதிக்‌ஷாவும் அவரது தந்தையும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தாய் பிரபா கடந்த மே 6-ம் தேதி மடிகேரியில் உள்ள ஒரு கோவிட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சரியாக 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபா
இறுதியில் சிகிச்கை பலனின்றி மே 16-ம் தேதி காலமானார். பின்பு கோவிட் வழிகாட்டுதலின்படி அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

நிர்வாகம் மொபைல்போனை தவிர

மருத்துவமனை நிர்வாகம் மொபைல்போனை தவிர பிரபாவின் உடைமைகள் அனைத்தும் ஹிரிதிக்‌ஷா மற்றும் அவரின் தந்தையிடம் கொடுத்துள்ளது. குறிப்பாக தனது தாயின் நினைவாக அந்த மொபைல்போனில் அவரின் புகைப்படங்கள் இருப்பதால், அது தற்போது காணவில்லை எனவும் தற்போது அதனை கண்டுபிடித்து தரச்சொல்லி காவல்துறைக்கு சிறுமி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ரிக்கையை அடுத்து

எனவே சிறுமியின் கோரிக்கையை அடுத்து அதனை புகாராக பதிவு செய்து விசாரித்து வருகிறது குடகு காவல்துறை. மேலும்
சமூக வலைத்தளங்களில் சிறுமியின் புகார் குறித்த தகவல் வெளியான நிலையில் பல்வேறு மக்கள் தொலைந்துபோனசிறுமியின் தாயினுடைய மொபைல்போனை கண்டுபிடித்து கொடுத்து சிறுமிக்கு உதவுமாறு காவல்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
9-year-old girl's request to find mom's mobile: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X