தெரியுமா..? ஆவிகளை 'முதற்கொண்டு' ஆன்லைனில் அனுப்பலாம்..!!

Written By:

ஆண்டவனை நம்பாதவர்கள் கூட உண்டு ஆனால், இன்டர்நெட்டை நம்பாதவர்கள் யாருமே இல்லை. அப்படியான இன்டர்நெட் மூலம் அதாவது ஆன்லைன் மூலம் பரிமாற்றிக்கொள்ள முடியாத பொருள் என்று ஒன்று கிடையவே கிடையாது.

ஆனால், சில குறிப்பிட்ட நம்ப முடியாத பொருட்களையெல்லாம் இன்டர்நெட் மூலம் அனுப்பலாம் அனுப்பி இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்பவே முடியாது. அதில் மிக முக்கியமான ஒன்று - ஆவிகள்..! அத்துடன் இன்னும் என்னென்ன பொருட்கள் இன்டர்நெட் மூலம் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
09. ஸோம்பி சர்வைவல் கிட் :

09. ஸோம்பி சர்வைவல் கிட் :

ஸோம்பி என்பது சாத்தியமாகி உலகம் முழுக்க கொடிய வைரஸ் பரவும் என்ற நிலை வந்தால் உங்களால் ஒரு ஸோம்பி சர்வைவல் கிட் தனை (Zombie Survival Kit) அனுப்ப முடியும்.

08. கரும்புள்ளிச் செவ்வண்டுகள் :

08. கரும்புள்ளிச் செவ்வண்டுகள் :

வெறும் 14 டாலர் செலவில் உங்களால் சுமார் 1400 கரும்புள்ளிச் செவ்வண்டுகளை கொள்முதல் மற்றும் ஷிப்பிங் செய்ய முடியும்.

07. ஹாக்வாட்சு ஏற்பு கடிதம் :

07. ஹாக்வாட்சு ஏற்பு கடிதம் :

9.99 டாலர் செலவில் யாருக்கு வேண்டுமானால், ஹாரிபட்டார் திரைப்படத்தில் வரும் மாயாஜாலம் கற்றுக்கொடுக்கும் பள்ளியான ஹாக்வாட்சு (Hogwarts) பள்ளியில் இருந்து வரும்படியாக ஏற்பு கடிதம் அனுப்பலாம்.

06. கைப்பற்றப்பட்ட பேய்கள் :

06. கைப்பற்றப்பட்ட பேய்கள் :

நியூஸிலாந்தை சேர்ந்த ஏவி வுட்‌பெரீ (Avie Woodbury) என்ற பெண் இரண்டு ஆவிகளை ஒரு சிறு பாட்டிலில் பிடித்து, புனித நீர் கொண்டு அதை அடைத்து, ஆன்லைனில் 1300 டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

05. மதுபானம் :

05. மதுபானம் :

பார்ஐ ஆப் (BarEye App) பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உங்களால் மதுபானங்களை ஆன்லைனில் அனுப்ப முடியும்.

04. கிளட்டர் பாம் :

04. கிளட்டர் பாம் :

9.99 டாலர் செலவில் உங்கள் எதிரிக்கு இதை அனுப்பி வைக்கலாம். கடிதம் போல் இருக்கும் இதை திறந்ததும் வெடிப்பு ஏற்பட்டு உடலில் கிளட்டர் ஒட்டிக்கொண்டு எரிச்சலை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அனுப்புவதற்கு பதில் எதிரியை மன்னிப்தே சிறந்தது..!

03. ஆந்தை கழிவு :

03. ஆந்தை கழிவு :

உயிரியல் மாணவர்களுக்கு இது அருவருப்பாய் இருக்காது. வகை வகையான ஆந்தை கழிவுகளை ஆன்லைனில் அனுப்ப முடியும்.

02. ஒரு அணைப்பு :

02. ஒரு அணைப்பு :

நம்புங்கள், ஹக் ஆப் (HUG App) மூலம் நீங்கள் யாரை அணைத்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அவர்களை அணைத்துக்கொள்ள முடியும். ஆப் பயன்படுத்தி 'ஹக்' தனை அனுப்பி வைத்து உங்கள் ஸ்மார்ட்போனினை நெஞ்சொடு அணைத்துக்கொள்ள வேண்டும்..!

01. தங்கம் :

01. தங்கம் :

உண்மைதான் உங்களால் தங்கத்தை டவுண்லோட் செய்து கொள்ள முடியும் அதற்கு உங்கள் பிட்கோல்ட் (BitGold) ஆன்லைன் அக்கவுண்ட்டில் தங்கம்தனை நீங்கள் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
9 Weirdest Things You Can Send Over The Internet. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot